குழந்தைகளைச் சபிக்காதீர்கள்..! ~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~ சொன்ன பேச்சு கேட்கவில்லை எனில் உடனே பெற்றோர்கள் பிள்ளைகளைத் திட்டத் தொடங்கிவிடுவார்கள். கனிவுடன் கூடிய கண்டிப்பு என்றால் பரவாயில்லை. ஆனால் பெற்றோர்கள் சிலர் பிள்ளைகள் என்றும் பார்க்காமல் சபிக்கவே தொடங்கிவிடுவார்கள். ‘நீ நாசமாய்ப் போக’ ‘கழிச்சல்ல போக’ ‘ ‘பிச்சை எடுத்துதான் அலைவ’ ‘தரித்திரம் பிடிச்சவனே, ஏன்டா என் வயித்தில வந்து பிறந்த?’ இப்படிப் பிள்ளைகளை வாயில் வந்தபடி சபிக்கும் பெற்றோர்களுக்குக் குறைவே இல்லை. ஆனால் ஒருபோதும் பிள்ளைகளைச் சபிக்கவே கூடாது. மாறாக, அவர்களின் நல்வாழ்வுக்காக இறைவனிடம் மனமுருகி இறைஞ்ச வேண்டும். ஊதாரியாய், தறுதலையாய், மொடாக்குடியனாய்த் திரிந்த ஒரு மகன் நபிமொழிக்கலை மேதையாய் மாறியதற்குக் காரணம், அவருடைய பெற்றோரின் இறைஞ்சுதல்தான்! அப்துல்லாஹ் இப்னு முபாரக் என்பவர் மாபெரும் மார்க்க அறிஞர். நபிமொழிகளை ஆய்வுசெய்து அத்துறையில் பெரும் புலமை பெற்றவர். ஆனால் இவருடைய இளமை வாழ்வு எப்படி இருந்தது தெரியுமா? தவறான நடத்தை, ஊதாரித்தனம், கேளிக்கை, மது, ஆட்டம், பாட்ட...