தேசிய கல்வி தினம் நவம்பர் 11 அபுல் கலாம் ஆசாத்

*மௌலானா அபுல் கலாம் ஆசாத் பிறந்த நாளான நவம்பர் 11 இன்று நம் நாட்டின் கல்விக்காக இவர் செய்த அரும் பணிகளுக்காக தேசிய கல்வி வளர்ச்சி நாளாக இந்தியா முழுவதும் கொண்டாடப்படுகிறது!*

*இந்தியா சுதந்திரம் அடைந்த பின் நம் நாட்டின் முதல் கல்வி அமைச்சர் மௌலானா அபுல் கலாம் ஆசாத் அவர்கள்!*

*1947 முதல் 1958 வரை ஏறத்தாழ 11 ஆண்டுகள் இந்தப் பதவி வகித்தார் அது நம் நாட்டின் பொற்காலம்!*

*சங்கீத நாடக அகாதமி 1953 சாகித்திய அகாதமி 1954 லலித் கலா அகாதமி 1954 கலாச்சார உறவுகளுக்கான இந்திய கவுன்சில் உள்ளிட்ட பல பிரபல அமைப்புகளை இவர் உருவாக்கினார்.*

*ஆங்கிலேய ஆட்சியில் இந்திய கல்வியில் கலாச்சாரம் தொடர்பான அம்சங்கள் குறைவாக இருந்ததை உணர்ந்து அதை வலுப்படுத்தும் முயற்சிகளில் இறங்கினார்.*

*கல்விக்கான மத்திய ஆலோசனை வாரியத்தின் தலைவராக இருந்த போது...* 

*பல்கலைக்கழகங்கள் உள்ளிட்ட மத்திய மாநில கல்வி முறைகளில் சீர்திருத்தங்கள் செய்ய பரிந்துரைத்தார்.*

*14 வயது வரை அனைத்து குழந்தைகளுக்கும் இலவச கட்டாயக் கல்வி அளிக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்!*

*பெண் கல்வி, தொழிற் பயிற்சி, வேளாண் கல்வி, தொழில்நுட்ப கல்வி உள்ளிட்ட பல சீர்திருத்தங்களை பரிந்துரைத்தார்!*

*பல்கலைக் கழகங்களுக்கு கல்வித் துறை சார்ந்த பணிகள் மட்டுமல்லாமல் சமூகப் பொறுப்பும் உள்ளது என்று கூறினார்!*

*வயது வந்தோருக்கான கல்வித் துறையில் ஆசாத் ஒரு முன்னோடியாக இருந்தார்.*

*உருது, பார்சி, அரபு மொழிகளை கற்றுத் தேர்ந்தவராக இருந்தாலும் தேசிய மற்றும் சர்வதேச தேவைகளை முன்னிட்டு ஆங்கில மொழியை தொடர்ந்து பயன்படுத்தச் செய்தவர் ஆசாத்.*

*ஆரம்பக் கல்வி தாய் மொழியில் தான் இருக்க வேண்டும் என்றார்!*

*தொழில்நுட்ப கல்விக்கான அகில இந்திய கவுன்சிலை வலுவான அமைப்பாக மாற்றினார்.*

*1951 ல் காரக்பூரில் இந்திய தொழில்நுட்ப பயிலகம் ஐஐடி அமைக்கப்பட்டது.*

*அதைத் தொடர்ந்து பம்பாய், சென்னை, கான்பூர், தில்லி ஆகிய நகரங்களிலும் ஐ.ஐ.டி.கள் அமைக்கப்பட்டன.*

*தில்லியில் 1955இல் திட்டமிடுதல் மற்றும் கட்டிட கலைக்கான பள்ளி ஏற்படுத்தப்பட்டது.*

*மதவாதத்தை ஒரேடியாக குழி தோண்டிப் புதையுங்கள் என்பதுதான் ஆசாத் மாணவர்களுக்கு எப்போதும் கூறும் அறிவுரையாகும்!*

*மாணவர்களின் ஒழுக்கமின்மை குறித்து அவர் வேதனைப்பட்டார்.*

*1954 ல் கல்விக்கான மத்திய ஆலோசனை வாரிய கூட்டத்தில் பேசும் போது எந்த காரணமின்றி மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபடுவது குறித்து தான் மிகவும் வேதனைப் படுவதாகவும்....*

*இத்தகைய போராட்டங்கள் தான் நம் தேசத்தின் கலாச்சார வேரை அசைத்துப் பார்ப்பதாகவும் வருத்தப்பட்டார்.*

*இன்றைய மாணவர்கள் தான் நாளைய அரசியல் தலைவர்கள் அவர்களுக்கு முறையான பயிற்சிகளை அளிக்காவிட்டால்...*

*நாளை தேசத்திற்கு தேவையான தலைமைத்துவம் கிடைக்காமல் போய்விடும் என்ற கருத்தினைக் கொண்டிருந்தார் ஆசாத்.*

*அரபு, உருது, பார்சி ஆகிய மொழிகளில் மௌலான அபுல் கலாம் ஆசாத் பல நூல்களை எழுதியுள்ளார்.*

*குரானை அரபு மொழியிலிருந்து பார்சி மொழிக்கு மொழி பெயர்த்தார்.*

*1977இல் சாகித்திய அகாதமி இதனை ஆறு பகுதிகளாகப் பிரசுரித்தது.*

*மௌலான அபுல் கலாம் ஆசாத் அற்புதமான ஒரு மனித நேய பண்பாளர் தனது வாழ்வின் இறுதி வரை இந்து முஸ்லீம் ஒற்றுமைக்காக அரும்பாடுபட்டார்.*

*இன்றைய பிறந்த நாளில் அவர் நாட்டுக்கு ஆற்றிய அரும் பணிகளை நினைவு படுத்தி வளரும் அடுத்த தலைமுறைகளுக்கு அடையாளப் படுத்துவது காலத்தின் கட்டாயம் மறவாதிருப்போம்..!*

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அரபி மதரஸாக்கள்

மவ்லித் ஷரீஃப் ஓதுவோம் வாருங்கள்

கல்வியா?செல்வமா?