பாக்கியாத்#தேவ்பந்த்#baqiyath#devbanth#madarasa#matharasa#up#muslim #islam

இந்தியாவிற்கே தமிழகம் வழிகாட்டுவது போல் இந்திய மதரஸாக்களுக்கே பாக்கியாத் வழிகாட்டும் திறமை படைத்தது என்பதை தமிழக ஆலிம்கள் விளங்கிக்கொள்ள வேண்டும்!

தேவ் பந்த்தை குறைத்து மதிப்பிடவில்லை. தேவ்பந்தின் சேவை அளப்பறியது.

ஆனால் சத்தம் இல்லாமல் யுத்தம் செய்வது பாக்கியாத்தான்.

உ பியில் ஷிர்க்கை ஒழிக்கிறோம் என்று தேவ்பந்திகளின் நூற்றாண்டு கால பீரங்கி பேச்சாளர்களால் முஸ்லிம்கள் இருபிரிவுகளாக பிரிந்ததுதான் மிச்சம்.

"தேவ்பந்திகள்- பரேலவிகள்" ஒருவர் மற்றொருவரை காஃபிர் என்று சொல்லுமளவுக்கு சென்று விட்டது.

இது அரசியலிலும் வெளிப்பட தொடங்கியது.

காங்கிரஸ் மத்தியில் ஆட்சி அமைத்தால் தேவ்பந்தின் ஷூரா கமிட்டிக்கு ஒரு ராஜ்யசபா எம் பி கொடுக்கப்படும்.

அதை உ.பி இஸ்லாமியர்களின் உரிமைகளுக்கும், ஒற்றுமைக்கு பயன் படுத்த தவறியது தேவ்பந்த்.

1983ல் விஷ்வ இந்து பரிஷத் கூட்டத்தில் (மதுரா,வாரனாசி,அயோத்தி) மூன்று மசூதிகளில் முதலாவதாக அயோத்தி பாபர் மசூதியை மீட்க வேண்டுமென்று முடிவெடுக்கப்படுகிறது.


1984ல் ஷாபானு வழக்கு தீவிரமடைகிறது.

நீதிமன்றம் ஷரீஅத்திற்கு மாற்றமாக தீர்ப்பு.

(இதற்கு எதிராக பயங்கரமாக களமிறங்கிய தேவ்பந்திகள் பாபர் மசூதி விசயத்தில் கோட்டை விட்டார்கள்)

எந்தளவுக்கென்றால் அன்றைய பிரதமர் ராஜீவ்காந்தி பாராளுமன்றத்தில் நீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக இஸ்லாமிய தனியார்சட்டத்திற்கு ஆதரவாக மசோதாவே நிறைவேற்றினார்.


இந்த சந்தர்ப்பத்தை சரியாக பயன்படுத்தினாகள் RSS காரர்கள்.

இந்த சம்பவத்திற்கு பிறகு ராஜீவ்காந்தியை தனியாக சந்தித்த சாதுக்கள் நீங்கள் இஸ்லாமியருக்கு ஆதரவாக மசோதா நிறைவேற்றி இருக்கிறீர்கள் .

எனவே இந்துக்கள் வாக்குகளை இழக்க நேரிடும். எனவே இந்துக்களை மனதிருப்திபடுத்த சீல் வைக்கப்பட்டுள்ள பாபர் மசூதியின் ஜன்னலை மட்டும் திறந்து விடுங்கள். நாங்கள் ராம்லல்லாவை பூஜை செய்து கொள்கிறோம் என்று கோரிக்கை வைக்க "ஓட்டு பிச்சை" அரசியல் வாதி பிரதமர் ராஜீவ் காந்தி அதை திறந்து பூஜையும் செய்து ஆரம்பித்து வைத்தார்.

இது அரசியல் வாதிகளுக்கு சாதாரணம் ஆனால் இது எதிரிகளுக்கு பூனைக்கு மணிகட்டிய விசயம்.

இந்த நிகழ்வை தேவ்பந்திகள் கண்டு கொள்ளவே இல்லை.
இந்த நேரத்தில் எங்களுக்கும் வெளியிருந்து தொழுகை நடத்த வேண்டும் என்று அனுமதி வாங்கியிருக்க வேண்டும். அல்லது ராஜீவ்வை சந்தித்து பூஜையை தடுத்திருக்க வேண்டும் .ஆனால் அவ்வாறு செய்யவில்லை.
ஷாபானு வழக்கில் தீவிரமாக இறங்கியதை போல் இறங்கவில்லை.

ஆனால் இன்று ஷாபானு வழக்கு போய் முத்தாலாக்கே தடையாகிவிட்டது.


இதுவே பாபர் மசூதியை இழப்பதற்கு முதற்காரணமாகிவிட்டது .

அன்றிலிருந்து தொடர்பூஜை நடந்ததாலும்,அதையே ஆதாரமாக வைத்து பாபர் மசூதிக்கு எதிராக தீர்ப்பு வர காரணமாகிவிட்டது.

உ.பி யில் முஸ்லிம்கள் சாதி இனங்களுக்கு மத்தியில் பெரும்பான்மையாக இருந்தும் கூட அவர்களுக்கு மத்தியில் "பரேலவிய்யத்" "தேவ் பந்தியத்து " என்று துண்டு துண்டாக உள்ளனர்.

காங்கிரஸ் சுத்தமாக ஓய்ந்ததற்கு காரணமே தேவ்பந்திய தொடர்புதான். 

நன்றாக விளங்கி கொள்ளுங்கள்? 

இந்திய ஒன்றிய அரசை நிர்ணயிப்பதில் முக்கிய பங்கு வகிப்பது உ.பி மாநிலம்தான். 

பாபர் மசூதிக்கு எதிரான தீர்ப்புக்கு பின்னால் உபியில் முஸ்லிம்களின் நிலை,மதரஸாக்களின் நிலை, பள்ளிவாசல்களின் நிலை,முஸ்லிம்கள் படுகொலை,அநியாய கைதுகள்,வீடுகள் இடிப்பு,
ஞானவாபி பள்ளிவாசல் தீர்ப்பு?

  தேவ் பந்த் மதரஸா இவ்வளவுகாலம் ராஜ்சபாவில்,அரசியலில் இருந்து என்ன பயன்?

உ.பியில் இஸ்லாமிய அடையாளங்கள் இருந்தும் அதை பாதுகாக்க தவறியது தேவ் பந்த்.

இதெற்கெல்லாம் காரணம் அப்பாவி முஸ்லிம்கள் மீது மவ்லித், பாத்திஹா ,தர்கா கூடாது என்று ஃபத்வா கொடுத்து முஸ்லிம்களை துண்டுதுண்டாக்கியதுதான்.

ஆனால் பாக்கியாத் அரசியலில் ஈடுபடாமல் நாசுக்காக முஸ்லிம்களை அரவணைத்து செல்ல கூடிய,

தர்காவிற்கு ஜியாரத்திற்கு செல்லலாம்,வரம்பு மீறாமல் நபியைபுகழலாம் என்று அப்பாவி முஸ்லிம்களை அரவணைத்து செல்லகூடிய

 ஆலிம்களை உருவாக்கி சமுதாயத்திற்கு அர்பணித்து கொண்டிருக்கிறது. இந்தியா முழுதும் இது போன்ற மென்மையாக சத்தமில்லாமல் யுத்தம் செய்யக்கூடிய ஆலிம்களை வெளியாக்கி நாட்டையும்,நாட்டு மக்களையும் ,இஸ்லாமியர்களையும் பாதுகாக்கும் நாள் வெகுதூரமில்லை.

ஏன் இவ்வளவு சொல்ல வேண்டியதென்றால் 

பாக்கியாத்தை அடுத்தவர் திறமையிலிருந்து பெருமை தேடி கொண்டது என்று எழுதியதால் தான். 

எல்லா ஆலிம்களும் பாக்கியாத்தின் தவபுதல்வர்கள்தான் .அனைவரும் ஆய்வு செய்து பாருங்கள் உங்களுக்கு கல்வி கொடுத்த ஆசிரியர்களை!

என்றும் அன்புடன்

மேலூர் முஹம்மது இஸ்ஹாக் பாகவி

11-11-22

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அரபி மதரஸாக்கள்

மவ்லித் ஷரீஃப் ஓதுவோம் வாருங்கள்

கல்வியா?செல்வமா?