இடுகைகள்

அக்டோபர், 2022 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

வாழ்வை மாற்றும் துஆ

• உங்கள் நாட்டம் நிறைவேற வேண்டுமா? • ஸாலிஹான வாழ்கை துணை வேண்டுமா? • ஹலால் ஆனா வேலை வேண்டுமா? • வாசிக்க இடம் வேண்டுமா? • ஹலால் ஆனா பொருளாதாரம் வேண்டுமா? நபி மூஸா (அலை) அவர்கள் கேட்ட அழகிய துஆ! • நபி மூஸா (அலை) அவர்கள் அவர்கள் வாழ்ந்த ஊரில் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக அந்த ஊர் மக்கள் தன்னை கொலை செய்து விடுவார்கள் என்று பயந்து மத்யன் நகருக்கு தப்பி சென்றார்கள்! • அந்த நேரத்தில் நபி மூஸா (அலை) அவர்களுக்கு கையில் உணவு பணம் வாகனம் தங்குவதற்கு இடம் என்று எதுமே இல்லாமல் தனி மரமாக நின்று கொண்டு இருந்தார்கள்! • அப்போது நபி மூஸா (அலை) அவர்களுகள் கிழே உள்ள துஆவை அல்லாஹ்விடம் கேட்டார்கள்! • இந்த துஆவை கேட்ட பின்பு அல்லாஹ் மூஸா (அலை) அவர்களுக்கு : 1) தங்குவதற்கு ஒரு இடம் 2) ஒரு வேலை 3) நல்ல குடும்பம் 4) ஸாலிஹான மனைவி  5) செல்வம் • என அனைத்துமே அல்லாஹ், மூஸா (அலை) அவர்களுக்கு வழங்கினான்! இந்த துஆவை அதிகம் கேளுங்கள் : (சூரத்துல் : அல் கஸஸ் : 15 & 28)  رَبِّ إِنِّي لِمَا أَنزَلْتَ إِلَيَّ مِنْ خَيْرٍ فَقِيرٌ ‘ ரப்பி இன்னீ லிமா அன்ஸ(z)ல்த இலைய மின் ஹைரின் ஃப(f)கீர் ’ பொருள் : என் இறைவா! நீ என...

கஃபா #தரை குளிர்ச்சி ஏன்

படம்
ஃகஅபாவை சுற்றியுள்ள தரை ஏன் குளிர்ச்சியாக உள்ளது.? ஹஜ் மற்றும் உம்ராவிற்கும் செல்லக் கூடியவர்கள் அனைவரும் தங்களது   தவாஃப் செய்த அனுபவத்தை பகிரும் போது, சுட்டெரிக்கும் வெயிலிலும் கஅபாவை சுற்றியுள்ள தரை மிகவும் குளிர்ச்சியானதாக இருக்கும் என்றுக் கூறுவார்கள்... இது ஏன் ? இந்த வரலாற்றுப் பின்னணியின் பொறியியல் கலையின் ஜாம்பவான்  முஹம்மத் கமால் இஸ்மாயில், அவர்கள் சிறிய வயதிலேயே தனது கல்விப் பயணத்தை தொடங்கிய இவர், கட்டிடக் கலையில் மிகுந்த ஆர்வம் ஏற்பட்டு ஐரோப்பாவிற்கு சென்று இஸ்லாமிய கட்டிடக்கலை என்ற தலைப்பில் பல்வேறு ஆய்வுகள் செய்து மூன்று முறை முனைவர் பட்டம் பெற்றவர்... மக்காவின் சுட்டெரிக்கும் வெயில் தவாஃப் செய்யக் கூடியவர்களுக்கு மிகப்பெரிய சிரமமாக உணர்ந்ததையடுத்து இதற்கான தீர்வைத் தேடினார்... எவ்வளவு கடுமையான வெயில் இருந்தாலும் தவாஃப் செய்யக் கூடிய தரையில் இருக்கக்கூடிய கற்கள் குளிர்ச்சியாக இருத்தல் வேண்டும் அப்படியானதொரு கற்களை தேடத் துவங்கினார்... இப்படியான கற்கள் கிரீஸ் (Greece) நாட்டில் உள்ள ஒரு சிறு மலையில் கிடைப்பதாக தகவல் கிடைத்தது. இந்த வகையான கற்களுக்கு...

துஆக்கள்

*ردد بلسانك لمدة دقيقتين* ❤️ *لّا إِلَهَ إِلاَّ أنتَ سُبْحَانَكَ إِنِّي كُنتُ مِنَ الظَّالِمِينَ*❤️  *لّا إِلَهَ إِلاَّ أَنتَ سُبْحَانَكَ إِنِّي كُنتُ مِنَ الظَّالِمِينَ*❤️  *لّا إِلَهَ إِلاَّانتَ سُبْحَانََ إِنِّي كُنتُ مِنَ الظَّالِمِينَ*❤️ *أسْتَغـفِرُ اللّه الـذيْ لا إلـهَ إلّا هُـوَ الحـيُّ القيّـومْ وأَتُوب إليه*... 🧡 *أَسْتَغـفِرُ اللّه الـذيْ لا إلـهَ إلّا هُـوَ الحـيُّ القيّـومْ وأَتُوب إليه*... 🧡 *أَسْتَغـفِرُ اللّه الـذيْ لا إلـهَ إلّا هُـوَ الحـيُّ القيّـومْ وأَتُوب إليه*... 🧡 *اللّهُمّ اغْفرْ للمؤمنِينَ والمؤمِنات وَالمُسلمينَ والمُسلماتْ الأحيَاء منهُمْ والأمواتْ*...💛   *اللّهُمّ اغْفرْ للمؤمنِينَ والمؤمِنات وَالمُسلمينَ والمُسلماتْ الأحيَاء منهُمْ والأمواتْ*... 💛 *اللّهُمّ اغْفرْ للمؤمنِينَ والمؤمِنات وَالمُسلمينَ والمُسلماتْ الأحيَاء منهُمْ والأمواتْ*...💛 *رَبّنـا آتِنَـا فيْ الدُّنيَــا حسنةً وفيْ الآخرَة حسنةً وقِـنا عذاب النّـار*... 💚 *رَبّنـا آتِنَـا فيْ الدُّنيَــا حسنةً وفيْ الآخرَة حسنةً وقِـنا عذاب النّـار*... 💚 *رَبّنـا آتِنَـا فيْ الدُّني...

#மூடப்படாத ஜன்னல் #மதீனா#ரவ்ளா#madina#rawla#hafsaஹப்ஸா

படம்
#நூற்றுண்டுகள்_பல_கடந்தும்  #மதீனா_பள்ளிவாசலில்_இதுவரை #மூடப்படாத_ஜன்னல்... ❤️😪 மஸ்ஜிதுன் நபவியிலே ரவ்ழா ஷெரீஃபில் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு ஸலாம் சொல்லி விட்டு பின்னால் திரும்பிப் பார்த்தால் ஒரு பெரிய ஜன்னல் திறந்திருப்பதைக் காண்பீர்கள். 1400 ஆண்டுகளுக்கும் மேலாக இது மூடப்படாமல் இருக்கிறது.. இந்த ஜன்னலை மூடாமல் திறந்து வைத்ததற்குப் பின்னால் ஒரு பெரிய வரலாறு உள்ளது.. வரலாற்றில் ஒரு தந்தை தனது ‌ மகளுக்கு கொடுத்த ஒரு வாக்குறுதியின் நினைவாக இது இன்றும் ஒரு நினைவுச் சின்னமாக பாதுகாக்க ப்பட்டுள்ளது. எல்லா காலத்திலும் சிறந்ததும் மற்றும் நீண்டதொரு மகத்தான வாக்குறுதி! அந்த ஜன்னலின் உள்ளே சுவர்களில் இருக்கும் வர்ணங்களுக்கு கூட சொல்ல ஒரு காதல் கதை உண்டு. மஸ்ஜிதுன் நபவி  நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் காலத்திலிருந்து பல விரிவாக்கங்களுக்கு உட்பட்டுள்ளது. இன்றுவரை யாரும் அந்த ஜன்னலை மூடவோ அல்லது அதை உடைக்கவோ யாரும் உத்தரவிடவில்லை. உமர் (ரலி) அவர்கள் ஹிஜ்ரி 17_ல் மஸ்ஜிதுல் ஹராமையும் அதே நேரத்தில் மஸ்ஜிதுன் நபவியையும் மீண்டும் பு...

#வாசப்படி #மனைவி#குடும்பம்#இப்ராஹீம் நபி#இஸ்மாயீல்நபி

உள்ளே - வெளியே 3 ( வாயிற் படி ) ஒரு பாலைவனத்தில் சிற்றூர்.  குதிரையில் வந்த ஒரு பெரியவர் ஒரு வீட்டின் முன் நின்றார் . "வீட்டில் யார் இருக்கிறார்கள் ?" என்று குதிரையில் இருந்தபடியே கேட்டார்.  வீட்டுக்குள்ளிருந்து ஒரு பெண் வாசற்படியில் வந்து நின்றாள் . பெரியவர் அவளிடம் , " உன் கணவர் எங்கே ? " என்று வினவினார் . அவள் சிடுசிடுப்போடு , "வீட்டில் இல்லாதவரைப் பற்றி ஏன் கேட்கிறீர்கள் ? " என்றாள் . அவர் " உன் கணவர் எப்போது திரும்புவார் ? "என்று கேட்டார் . அவள் "யாருக்கு தெரியும் ? என்றாள் . அவர் " உண்ண ஏதேனும் கிடைக்குமா ?" என்றார் . அவள் "நாங்களோ பசியிலும் பட்டினியிலும் வாடிக் கொண்டிருக்கும் இதில் உங்களுக்கு எதைக் கொடுப்பது ?" என்றாள்  அதைக் கேட்ட அந்த பெரியவரின் முகம் வாடியது . அவர் , " நல்லது நான் சென்று வருகிறேன் . உன் கணவர் வீட்டுக்கு வந்ததும் இன்ன இன்ன அடையாளம் உடையவர் இங்கே வந்து இருந்தார். தங்களுக்கு வாழ்த்துக் கூறினார். அதன்பின் இந்த வாசல்படி நன்றாக இல்லை எனவே அதை மாற்றி அமைக்கச் சொன்னார் என்று உன் கணவரிடம் சொல் ...

#வழிகேடு#வஹ்ஹாபி#பீஜே#இயக்கங்கள்#உயர்ந்த நபி யார்

*வழிகேட்டின் உச்சத்தில் பீ. ஜே! (லஃனதுல்லாஹி அலைஹி)* *தொகுப்பு: மௌலவீ MJM ஜஹானீ றப்பானீ* *எம்பிரான் முஹம்மத் அலைஹிஸ்ஸலாது வஸ்ஸலாம் அன்னவர்களை விட நபீ இப்றாஹீம் அலைஹிஸ்ஸலாம் அவர்களே உயர்வானவர்களாம்!*  தென்னிந்திய கர்னுஷ் ஷெய்தான் PJ என்பவர் இதுகாலவரை பல இலட்சம் முஸ்லிம்களை தனது பேச்சாற்றல், மற்றும் வாதத்திறமை மூலம் வஹ்ஹாபிஸ வழிகேட்டின் பால் இழுத்துச் சென்றுள்ளார். இது யாவரும் அறிந்த உண்மையே! இவர் ஒரு கருத்தை கூறுவதும் பிறகு தான் கூறியதை வாபஸ் பெறுவதும் இவருடைய வரலாற்றில் வாடிக்கையான ஒன்றே. இதற்கு சான்றாக நான் கீழே குறிப்பிட்டிருக்கும் யூ டியூப் லிங்கில் அவர் பேசுகையில் நபீ இப்றாஹீம் அவர்களின் “மகாமே இப்றாஹீம்” ஐச் சூழ தொழுமிடமாக ஆக்கிக் கொள்ளுமாறு அல்லாஹ் பணித்துள்ளான். அதனால் நபீ இப்றாஹீம் அவர்கள்தான் உயர்வானவர்கள் என்று தனது குருட்டு வாதத்தை முன் வைக்கிறார். இவர் இங்கு கூறும் விடயத்திற்கு மாற்றமாக முன்னொரு காலத்தில் “மகாமே இப்றாஹீம்” என்றால் புனித கஃபாவுக்கு அருகில் இருக்கும் நபீ இப்றாஹீம் அலைஹிஸ்ஸலாம் அவர்களின் காற் பாதம் பதிந்த கல் அல்ல. அதனருகில் தொழுவதை இறைவன் கூறவில்லை. மாறாக...

பீஜே வுக்கு தொண்டனின் மடல்

*பீஜெ க்கு மனம் திறந்த மடல் !*  மீடியா வேல்டு புகழ் பி,ஜே, அவர்களுக்கு  தங்களின் பிரியத்திற்குரிய தொண்டன் S.ரபீவுத்தீன் மதுக்கூர் உடைய அஸ்ஸலாமு அலைக்கும்.  நான் தங்களின் நீண்ட நாளைய மாணவன் என்பது தாங்கள் அறிந்ததே.  தங்களின் பேச்சுத்திறமை எழுத்துத்திறமை ஆகியவற்றின் வசீகர தன்மையால் கவரப்பட்டேன். ஆணித்தரமாக பித்அத் எனும் அனாச்சாரங்களையும் மூடப்பழக்கங்களையும் எதிர்த்த போது உங்கள் மீது நான் கொண்ட அன்பு பன்மடங்காக பெருகியது.  தாங்கள் சொல்வது தான் உண்மை மற்ற ஹஜரத் மார்கள் எல்லாம் பொய்யர்கள் என்று எண்ணி உங்களின் பேச்சையும் எழுத்தையும் பின்பற்றி நடந்தேன். தாங்கள் பித்அத் களை சரமாரியாக எதிர்த்து முஸ்லிம்களை விழிப்படையச் செய்த அதை வேளை மத்ஹபுகளையும் அதன் இமாம்களின் வழி காட்டுதலையும் குறை கண்டீர்கள். கடுமையாக விமர்சனம் செய்தீர்கள்.  தக்லீது செய்வது (மத்ஹபுகளுடைய இமாம்களை பின்பற்றுவது) கூடாது என்றும் தனி மனிதர்களை பின்பற்றுவது கூடாது என்றும் குர்ஆன் ஹதீஸை மட்டுமே பின்பற்ற வேண்டும் என்று கர்ஜித்த கர்ஜனை செய்து வந்த உங்களை பின்பற்றினேன். தங்களின் பழைய மற்றும் புதிய பிர...

#எறும்பு #Ant face close up shot

படம்
Ant face close up shot எறும்பின் உண்மை முகம்

24மணி நேரம்

படம்
#புகழனைத்தும்_இறைவனுக்கே ! ஒரு நாளை இருபத்து நான்கு மணி  நேரமாக வகுத்தது மேற்கத்திய நாடுகள்  என நினைக்கிறோம்... முதன் முறையாக கப்பலில்  தொழுகைக்காக நேரங்களை வகுத்தவர்கள் #செய்யதினா_நபி_நூஹ் அலைஹிஸ்ஸலாம் அவர்களாகும்.. பண்டைய கால அரபுகள் ஒரு நாளை இருபத்து நான்கு மணி நேரமாகப் பிரித்து ஒவ்வொரு மணிக்கும் ஒரு பெயரை சூட்டியுள்ளனர்... சூரியன் உதித்ததிலிருந்து அது மறையும் வரை உள்ள நேரத்தை பன்னிரண்டாகப் பிரித்து பன்னிரண்டு பெயர்களைச் சூட்டியுள்ளனர்... ١ - الشروق ٢ - البكور ٣ - الغدوة ٤ - الضحى  ٥ - الهاجرة ٦ - الظهيرة ٧ - الرواح ٨ - العصر ٩ - القصر ١٠ - الأصيل ١١ - العشي ١٢ - الغروب  اما ساعات الليل ..... அதேபோல் சூரியன் மறைந்ததிலிருந்து சூரியன் உதிக்கும் வரையுள்ள நேரத்தைப் பன்னிரெண்டாகப் பிரித்து அதற்குப் பெயர் சூட்டியுள்ளனர்... ١ - الشفق ٢ - الغسق ٣ - العتمة ٤ - الشدفة  ٥ - الفحمة ٦ - الزلة ٧ - الزلفة ٨ - البهرة  ٩ - السحر ١٠ - الفجر ١١ - الصبح ١٢ - ال...

மதரஸாக்கள்

. தமிழ் நாட்டில்   *மௌலானா மௌலவி ஆலிம் ஸனது*    வழங்கக்கூடிய அரபிக்கல்லூரிகளின்                 பெயர்களும் ஊர்களும். பாகவி வேலூர்  மன்பயி லால்பேட்டை உலவி கூத்தாநல்லூர் ஸலாஹி அதிராம்பட்டினம்  ரஹ்மானி அதிராம்பட்டினம்  நூரி பொதக்குடி  மஸ்லஹி தூத்துக்குடி  ரியாஜி திருநெல்வேலி  மிஸ்பாஹி நீடூர் ஜமாலி சென்னை இம்தாதி கோயமுத்தூர்  அன்ஸாரி. கோவை போத்தனூர் யூசுஃபி திண்டுக்கல்  மஹ்ழரி காயல்பட்டினம் மழாஹிரி சேலம் ஃபைஜி கடையநல்லூர் உஸ்மானி மேலப்பாளையம் காஸிமி இராஜகிரி காஷிஃபி சென்னை அன்வாரி திருச்சி  இல்ஹாமி இனாம்குளத்தூர் தாவூதி ஈரோடு  உமரி உமராபாத் சிராஜி திருப்பூர் ரப்பானி கோட்டகுப்பம்  வாஹிதி அத்திக்கடை  ஹைரி வீரசோழன்  நூரானி சேலம் நூரைனி தாமரைப்பாடி  முனீரி புதுக்கோட்டை இர்ஃபானி தாராபுரம் மக்தூமி பள்ளப்பட்டி  ஹஸனி பள்ளப்பட்டி அல்தாஃபி தென்காசி  பிலாலி சென்னை ஆமிரி சென்னை அஷ்ரஃபி சென்னை பத்ரி கரம்பகுடி ஜைனி பண்டாரவடை அஜ்ஹரி ஏர்வாடி...

மக்கா கிளாக் டவர்

படம்
நாம் சும்மா 5 நிமிடம் ஆச்சரியத்துடன் அண்ணாந்து பார்த்து விட்டு குனியும்* சவுதி அரேபியாவின் மெக்காவில் உள்ள கிளாக் டவர் என்ற கட்டிடம் அப்ராஜ் அல் பைத் என்று இதற்கு பெயர்.  புல்மன் ஜம்ஜம் மக்காஹ் ஹோட்டல்.  இந்த கட்டிடத்தில் உள்ள கோபுரம் சவூதி அரேபியாவின் மிக உயரமான கட்டிடமாகும்.  601 மீட்டர்: 1,972 அடி மொத்த பரப்பளவு  32,000 சதுர மீட்டர் ஆகும்.   ஐக்கிய அரபு எமிரேட்ஸ் துபாயில் உள்ள  புர்ஜ் கலீஃபாவை விட  உயரம் குறைவானது தான் .  வளாகத்தின் தளம் கிங் அப்துல்-அஜிஸ் கேட்டில் இருந்து-மஸ்ஜித் அல் ஹராம் வரை அமைந்துள்ளது.  காஃபாவிற்கு வருகை தரும் மில்லியன் கணக்கான பக்தர்களுக்கு தங்குவதற்கு இடமளிக்க, இந்த வளாகத்தில் உள்ள மிக உயரமான கோபுரத்தில்  ஐந்து நட்சத்திர ஹோட்டலும் உள்ளது.  தி க்ளாக் டவர்ஸில்  ஐந்து அடுக்கு ஷாப்பிங் மால் தி க்ளாக் டவர்ஸ் ஷாப்பிங் சென்டர்  உள்ளது.  ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாகனங்களை நிறுத்தும் திறன் கொண்ட பார்க்கிங் வசதி உள்ளது. கட்டிடம் 2006ல் 734 மீட்டர்: 2,408 அடி உயரம் கட்ட திட்டமிடப்பட்டத...

முனைவர் பட்டம் பெற்ற தமிழக ஆலிம்கள் #டாக்டர் #doctor

முனைவர் பட்டம் பெற்ற தமிழக ஆலிம்களுக்குப் பாராட்டு விழா  -------------------------------------------    1. முனைவர் மௌலவி ஸலாஹுத்தீன் முஹம்மது அய்யூப் அஸ்ஹரீ. சென்னை மாவட்ட காஜி தமிழ்நாடு தலைமை காஜி செல்பேசி:  2. முனைவர் மௌலவி முஹம்மது சுலைமான் உமரி.  சென்னை ஆழ்வார்பேட்டை பிரிஸ்டன் கல்லூரியின் இஸ்லாமிய இயல் துறையில் பேராசிரியர். செல்பேசி: 90030 32009   3. முனைவர் மௌலவி பி.எஸ். சையது மஸ்வூத் ஜமாலி. பி.எஸ். அப்துர் ரஹ்மான் கிரசண்ட் பல்கலைக் கழகத்தின் இஸ்லாமிய இயல் துறையின் தலைவர், வண்டலூர், சென்னை  செல்பேசி எண்: 94442 22875  4. முனைவர் மௌலவி அ. ஜாகிர் ஹுஸைன் பாகவி   சென்னைப் பல்கலைக் கழகத்தின் அரபுத் துறைத் தலைவர்  செல்பேசி எண்: 94444 27086 5. முனைவர் மௌலவி டி.எம். அப்துல் காதிர் அன்வரி ஜமாலி ஓய்வுபெற்ற பேராசிரியர்  செல்பேசி எண்: 98407 07083 6. முனைவர் மௌலவி பி.ஏ.முஹம்மது யூசுஃப் ரஹ்மானி, ஃபாஜில் ஜமாலி. பேராசிரியர் பி.எஸ். அப்துர் ரஹ்மான் கிரசண்ட் பல்கலைக் கழகம் வண்டலூர் சென்னை செல்பேசி: 72994 79842  7. முனைவர் மௌலவி எம்...

C.V.abubakkar hajrath CVஅபூபக்கர் ஹஜ்ரத்

ஆசிரியத் தந்தை அல்லாமா சொல்லின் செல்வர் மௌலானா மௌலவி அல்ஹாஜ் C. V. அபூபக்கர் பாக்கவி ஹழ்ரத் نور الله مرقده   ...............  அன்றைய கோவை விரல் விட்டு எண்ணப்படும் உலமாக்கள் இருந்த காலம் அதிலும் குறிப்பாக தர்ஸ் கற்பிக்கும் ஆற்றல் மிக்க உலமாக்களில் ஒருவர் நமது ஆசிரியர் நான் முதல் ஜும்ரா  ميزان இம்தாதுல் உலூமின் கீழ் தளத்தில் கடைசி வகுப்பறையில் فعل  ஓத தொடங்கிய அந்நாள் பொன்னாள்  அப்போதைய இம்தாதி ன்  கட்டிட அமைப்பு வேறு.  தற்போது நூருல் உலமா  பாடம் நடத்தும் பகுதி முழுவதும்  குளியல் அறை மற்றும் துப்புரவு கூடங்களாகும்  ஹழ்ரத் அவர்கள் அப்போது கோவையிலும் பல மாவட்டங்களிலும் சொற்பொழிவு ஆற்றச்சென்று விட்டு  காலை பாடத்திற்கு வந்துவிடுவார்கள் ஆலிம் களின் புகழ் ஓங்கி னால் சிலருக்கு வலிக்கும் என்பது நாமறிந்ததே அத்தகைய பொறாமை  உணர்வு மேலோங்கிய தால்  ஹழ்ரத் இம்தாதி லிருந்து  வெளியேறினார்கள் அல்லது வெளியேற வைக்கப்பட்டார்கள் என கருதலாம்  அதற்குள் நான் போகவில்லை அல்லாஹ் அறிவான்  பிறகு ஹழ்ரத் அவர்கள் வெளியூரில் தர்சில் ஒ...
*_மனதிற்கான மருந்துகள்...._*  1. செலவுகளுக்கு யோசிக்காதீர்கள். மண்டையைப் பிய்த்துக் கொள்ளாதீர்கள். உங்கள் தேவைகளுக்கு நீங்கள் செலவழிக்காவிட்டால் - யார் செலவழிப்பார்கள்? ஆகவே தேவைகளுக்குப் பணத்தைச் செலவழியுங்கள். 2. இரசிக்க வேண்டியதை ரசியுங்கள். அனுபவிக்க வேண்டியதை அனுபவியுங்கள். மொத்தத்தில் enjoy பண்ண வேண்டியதை எஞ்சாய் பண்ணுங்கள். 3. முடிந்த அளவு, தான, தர்மம் செய்யுங்கள். பணத்தை வைத்துப்பிறருக்கு உங்களால் முடிந்த அளவிற்கு உதவுங்கள். 4. உங்கள் குழந்தைகளையோ அல்லது பேரக்குழந்தைகளையோ, நீங்கள் செத்த பிறகு தான், உங்கள் பணம் அவர்களுக்குக் கிடைக்கும் என்கின்ற நிலைமையை, நினைப்பை உண்டாக்கி விடாதீர்கள். 5. நீங்கள் செத்த பிறகு உங்களுடைய பணம் என்ன ஆகும் என்றோ அல்லது உங்களை யார் பாராட்டுவார்கள் அல்லது திட்டித் தீர்ப்பார்கள் என்ற கவலை எல்லாம் உங்களுக்கு வேண்டாம்.  அதைக் கேட்பதற்கோ அல்லது பார்ப்பதற்கோ நீங்கள் இருக்கப் போவதில்லை. 6. நீங்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்து, சேர்த்த பணம் சொத்து எல்லாம்ஒரு நாள் உங்களை விட்டுப் போகப் போகிறது.  அதைத் தடுப்பதற்கும் அல்லது காப்பாற்றுவதற்கும் நீங்கள் இரு...

#ஒற்றுமை #தொழுகை #சஜ்தா

அஸ்ஸலாமு அலைக்கும்                ( உருது கவிதையின் தமிழாக்கம் ) முஸ்லிம்களிடையேயுள்ள பிரிவினைகள் பற்றி மகாகவி அல்லாமா இக்பால் அவர்கள் எழுதியது . தமிழில்: காஞ்சி அப்துல் ரவூப் பாகவி ( IFTN- ஒருங்கிணைப்பாளர்) நேற்று என் மதம்‌ எது என்று கேட்டுத் தெரிந்து கொண்டு என்னைக் கொல்லாமல் உயிர் பிழைக்க விட்டார்கள்! இன்று அவர்களே என் மதத்திற்குள் நான் சார்ந்துள்ள பிரிவு எது என்று கேட்டு என் உயிரைப் பறிக்கிறார்கள்! தொழுகையில் கையை உயர்த்த வேண்டுமா உயர்த்தக் கூடாதா என்ற சர்ச்சையில்  அதிகம் ஈடுபடாதீர்கள் முஸ்லிம்களே!  ஏனென்றால், கையே இல்லாதவர்களின்‌ தொழுகை கூட நிறைவேறி விடுகின்றது‌! "நீங்கள் தொழுகையில் கையைக் கட்டிக் கொள்ள வேண்டுமா?" அல்லது "கையைக் கட்டாமல் தொங்கவிட வேண்டுமா?" என்னும் சர்ச்சையில் மூழ்கிக் கிடக்கிறீர்கள்.  உங்கள் எதிரிகளோ உங்கள் கைகளை வெட்டுவதற்கு திட்டமிடுகின்றார்கள். உலகாசை எனும் ஏமாற்றகரமான மாயையில் மூழ்கி ஆயிரக்கணக்கான சஜ்தாக்களை நாம் வேளை தவறி நிறைவேற்றியுள்ளோம்! ஆனால்,  நம் சொர்க்கத்தின் தலைவர்களோ மழை போல் பொழிந்த அம்புகள...

மீலாது

*ஒருகணம் நான் உங்களோடு...!* ஒருகணம்நான் உங்களோடு வாழ்ந்தி ருந்தால் உலகத்து மாயைதனைப் புரிந்தி ருப்பேன் ஒருகணம்நான் உங்கள்கண் பட்டி ருந்தால் உருகிவிடும் மெழுகாகக் கரைந்தி ருப்பேன் ஒருகணம்நான் உங்கள்சொல் கேட்டி ருந்தால் உருக்குலையா ஈமானைப் பெற்றி ருப்பேன் ஒருகணம்நான் தங்களுடன் களித்தி ருந்தால் ஊமையெனப் புவிவாழ்வை வெறுத்தி ருப்பேன்! ஒருகணம்நான் உங்கள்நற் பண்பைக் கண்டால் உயர்வான எண்ணங்கள் கொண்டி ருப்பேன் ஒருகணம்நான் தங்களுயர் அன்பைப் பெற்றால் ஓரிறைக்கு நானும்நல் லடியான் ஆவேன் ஒருகணம்நான் தங்கள்கால் தடம்ந டந்தால் ஒருபோதும் தடுமாறிச் சரிய மாட்டேன் ஒருகணம்நான் உங்களாசி கிடைக்கப் பெற்றால் ஒப்பற்ற சொர்க்கத்து வாசி யாவேன்! ஒருகணம்நான் தங்களுடல் மணம்மு கர்ந்தால் உள்வாங்கி மூச்சோடு சேர்த்து வைப்பேன் ஒருகணம்நான் உங்களைத்தான் கனவில் கண்டால் உறுபசியைத் தாகமதை மறந்தி ருப்பேன் ஒருகணம்நான் நபிகளுங்கள் ஷபாஅத் பெற்றால் உயிர்வாழ்ந்த நற்பேற்றைக் கண்டி ருப்பேன் ஒருகணம்தான் போதாது;மறுமை நாளில் உங்களுடன் அருகிருக்க இறையைக் கேட்பேன்!!! *கவிஞர் பெருங்குளம் ஹாஜா*,  லூனாஸ், மலேசியா