கஃபா #தரை குளிர்ச்சி ஏன்

ஃகஅபாவை சுற்றியுள்ள தரை ஏன் குளிர்ச்சியாக உள்ளது.?

ஹஜ் மற்றும் உம்ராவிற்கும் செல்லக் கூடியவர்கள் அனைவரும் தங்களது  
தவாஃப் செய்த அனுபவத்தை பகிரும் போது, சுட்டெரிக்கும் வெயிலிலும் கஅபாவை சுற்றியுள்ள தரை மிகவும் குளிர்ச்சியானதாக இருக்கும் என்றுக் கூறுவார்கள்...

இது ஏன் ?

இந்த வரலாற்றுப் பின்னணியின் பொறியியல் கலையின் ஜாம்பவான் 
முஹம்மத் கமால் இஸ்மாயில், அவர்கள் சிறிய வயதிலேயே தனது கல்விப் பயணத்தை தொடங்கிய இவர்,
கட்டிடக் கலையில் மிகுந்த ஆர்வம் ஏற்பட்டு ஐரோப்பாவிற்கு சென்று இஸ்லாமிய கட்டிடக்கலை என்ற தலைப்பில் பல்வேறு ஆய்வுகள் செய்து மூன்று முறை முனைவர் பட்டம் பெற்றவர்...

மக்காவின் சுட்டெரிக்கும் வெயில் தவாஃப் செய்யக் கூடியவர்களுக்கு மிகப்பெரிய சிரமமாக உணர்ந்ததையடுத்து இதற்கான தீர்வைத் தேடினார்...

எவ்வளவு கடுமையான வெயில் இருந்தாலும் தவாஃப் செய்யக் கூடிய தரையில் இருக்கக்கூடிய கற்கள் குளிர்ச்சியாக இருத்தல் வேண்டும் அப்படியானதொரு கற்களை தேடத் துவங்கினார்...

இப்படியான கற்கள் கிரீஸ் (Greece)
நாட்டில் உள்ள ஒரு சிறு மலையில் கிடைப்பதாக தகவல் கிடைத்தது. இந்த வகையான கற்களுக்கு  
தாசோஸ் (Thassos Marble) என்றுக் கூறுவார்கள். இந்தக் கற்களின் பிரத்தியேக குணாதிசியமானது -

இரவின் ஈரப்பதத்தை தனது சிறிய துளைகளின் மூலம் உறிஞ்சி,பகலிலே அந்த ஈரப்பதத்தை தன் மீது வெளிப்படுத்துமாம்.

கஅபாவை சுற்றியுள்ள வளாகத்தில்
இந்த கற்களை பொருத்துவதற்காக 
கிரீஸ் (கிரேக்கம்) நாட்டிற்குச் சென்று போதுமான அளவு வாங்க ஒப்பந்தம் செய்தார். பாதி மலையே ஒப்பந்தத்தில் கையெழுத்தானது. கஅபாவின் முழு தளத்திலும் பொருத்தப்பட்டது...

15 வருடங்களுக்குப் பிறகு 
சவூதி அரேபிய அரசாங்கம் இதைப் 
போன்ற கற்கள் மதீனா முனவ்வராவிலும் பொருத்தப்பட வேண்டும் என்பதற்காக இவரை மீண்டும் தொடர்புக் கொண்டது. அழைப்பை ஏற்று அவர் மீண்டும் கிரீஸ் நாட்டிற்கு பயணத்தை மேற்கொண்டார்.

தொழிற்சாலைக்கு சென்றவருக்கு 
கிடைத்த பதில்  

நீங்கள் அந்தக் கற்களை வாங்கிய பிறகு சீக்கிரமே மீதமுள்ள கற்களும் விற்றுவிட்டது.

இதனைக் கேட்டதும் மிகப்பெரிய சோகத்தில் ஆழ்ந்தார். சில நாட்களில் அவரது பயணத்தை மேற்கொள்ளத் தயாரான நேரத்தில், யார் அதனை வாங்கியிருப்பார். அவரது முகவரியை கேட்போம் என்று அவருள் கேள்விகள் உதித்து கொண்டே இருந்தது. ஆனால் ஏன் இப்படியான கேள்விகள் அவரது மனதிற்குள் எழுந்தது என்று அவருக்கு புரியவில்லை.

உடனே அவர் மீண்டும் அந்த தொழிற்சாலையை தொடர்பு கொண்டு, வாங்கியவரது முகவரி கிடைக்குமா என்று கேட்டார். உடனே அவர்கள் விற்று பல வருடங்களாகியதால், முகவரியை கண்டறிவது கடினம் என்றார்கள். 

பிறகு அவர் சவூதி அரேபியாவை நோக்கி பயணத்திற்குத் தயாரானபோது,திடீரென்று அவருக்கு தொழிற்சாலையிலிருந்து அழைப்பு வந்தது, வாங்கிய நபருடைய முகவரி கிடைத்து விட்டது என்றும் அவர் 
சவூதி அரேபியாவை சார்ந்தவர் என்பதையும் அறிந்து மிகுந்த மகிழ்ச்சியடைந்தார்.

உடனே சவூதி அரேபியாவிற்கு சென்று,
அந்த நபரை சந்தித்தார்.கற்களைக் குறித்து விசாரித்தார். அதனை பயன்படுத்தி விட்டீர்களா என்று கேட்டார்.

"இல்லை "  

என்றதும், நிம்மதி பெருமூச்சு விட்டபடி மதீனத்து பள்ளிக்கு அந்த கற்கள் தேவை என்றதும், 

எனது அருமைத் தூதர் நபி (ஸல்..)அவர்களது புனித மஸ்ஜிதிற்கு அனைத்தையும் எடுத்துச் செல்லுங்கள்.ஒரு ரியால் பணமும் எனக்கு தேவையில்லை. " 

என்றுக் கூறி அத்துணை விலைமதிப்புள்ள கற்களையும் பொறியாளரிடம் ஒப்படைத்து விட்டார்...

அல்லாஹ் அவர்களுக்கு அருள் புரியட்டும்...

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அரபி மதரஸாக்கள்

மவ்லித் ஷரீஃப் ஓதுவோம் வாருங்கள்

கல்வியா?செல்வமா?