C.V.abubakkar hajrath CVஅபூபக்கர் ஹஜ்ரத்
ஆசிரியத் தந்தை
அல்லாமா
சொல்லின் செல்வர்
மௌலானா மௌலவி
அல்ஹாஜ்
C. V. அபூபக்கர் பாக்கவி
ஹழ்ரத் نور الله مرقده
...............
அன்றைய கோவை
விரல் விட்டு எண்ணப்படும்
உலமாக்கள் இருந்த காலம்
அதிலும் குறிப்பாக
தர்ஸ் கற்பிக்கும்
ஆற்றல் மிக்க
உலமாக்களில்
ஒருவர் நமது ஆசிரியர்
நான் முதல் ஜும்ரா
ميزان
இம்தாதுல் உலூமின்
கீழ் தளத்தில்
கடைசி வகுப்பறையில்
فعل
ஓத தொடங்கிய
அந்நாள் பொன்னாள்
அப்போதைய இம்தாதி ன்
கட்டிட அமைப்பு வேறு.
தற்போது நூருல் உலமா
பாடம் நடத்தும் பகுதி முழுவதும்
குளியல் அறை
மற்றும் துப்புரவு கூடங்களாகும்
ஹழ்ரத் அவர்கள்
அப்போது கோவையிலும்
பல மாவட்டங்களிலும்
சொற்பொழிவு ஆற்றச்சென்று விட்டு
காலை பாடத்திற்கு
வந்துவிடுவார்கள்
ஆலிம் களின் புகழ்
ஓங்கி னால் சிலருக்கு
வலிக்கும் என்பது
நாமறிந்ததே
அத்தகைய பொறாமை
உணர்வு மேலோங்கிய தால்
ஹழ்ரத் இம்தாதி லிருந்து
வெளியேறினார்கள்
அல்லது வெளியேற
வைக்கப்பட்டார்கள் என
கருதலாம்
அதற்குள் நான் போகவில்லை
அல்லாஹ் அறிவான்
பிறகு ஹழ்ரத்
அவர்கள் வெளியூரில்
தர்சில் ஒருசில ஆண்டுகள் சேவை
பிறகு
தனியாக கோவை
ராஜுசெட்டியார்வீதியில்
அன்சாரிய்யா அரபிக் கல்லூரி
தொடங்கி தீன் களப்பணி ஆற்றினார் கள்
இதனிடையே
ஹிஜ்ரத் புக் சென்டர்
நிறுவினார்கள்
மார்க்ப்பணிதொடர்ந்தது
கோவையில் நிறைய
மதரஸா ஜமாஅத் கள்
ஹழ்ரத் அவர்களால்
உருவானதை நினைவு
கூறவேண்டும்
கேரள தமிழக சிறப்பு
சொற்பொழிவாளர் கள்
பேசி முடிந்ததும்
நிதி திரட்ட
ஹழ்ரத் அவர்களின்
தனக்கென ஓர் அழகிய
பாணி இருக்கும் அதன்படி நிதி குவியும்
மதரஸா பள்ளி வளரும்
இந்த நடைமுறை தான்
கோவையில் நீண்டகாலமாக இருந்தது
பிஜே வகைராக்கள்
80 களில் கோவையை
ஆதிக்கம் செலுத்தி
முதலில் jaqu
என்று பிரபலமாகி
அட்டூழியம் செய்து
இந் நடைமுறையை
தகர்த்தனர்
الا لعنة الله عليهم
ஒருகட்டத்தில்
கோட்டைசின்னப்பள்ளி முன்
இருந்த ஹழ்ரத் அவர்களின்
புக் சென்டரில் ஹழ்ரத் தை தாக்க வந்த
ஜாக் கூட்டம்
அப்போதிருந்த நாங்களும் பொதுமக்களும் தடுத்தனர்
பிறகு ஜாக் கூட்டம்
ஹழ்ரத் தையும் சுன்னத்
ஜமாஅத்தினரையும்குறிவைத்து வந்தனர்
எதற்கும் அஞ்சாமல்
எதிர்கொண்ட மாவீரர்
ஜம்இய்யத்துல் உலமா
எனும் பெயரில்
இம்தாதுல் உலமா சபை
உருவானது
பிறகு ஜமாஅத்துல் உலமா என்று
முறையாக தொடங்கப்பட்டது
தொடங்கிய காலத்திலிருந்து இறுதி வரை
ஹழ்ரத் அவர்களே தலைவர் என்பது தனிச்சிறப்பு
கருத்துவேற்றுமையுள்ள
உலமாக்களையும்
அரவணைத்துச் செல்லும் அரிய பண்பை
அவர்களைத் தவிர வேறு
எவரிடமும் நான் கண்டதில்லை
ஆக சொல்ல சொல்ல
தெவிட்டாத மாமேதை
ஹழ்ரத்
தற்போது போத்தனூர்
ரோட்டில் அன்சாரிய்யா
அரபிக் கல்லூரி
அவர்களை நினைவூட்டுகிறது
அதன் தரம் உயர்த்தப்பட
சம்பந்தப்பட்ட ஹழ்ரத்
அவர்களின் உறவுகள்
நட்புக் காரர்கள் உலமாக்கள் முன் வர வேண்டும்
வடநாட்டு மாணவர்கள்
ஓதும் ஹிப்ளு பிரிவு
மட்டுமே உள்ளது
அல்லாஹ் ஹழ்ரத் அவர்களை
கபூல் செய்வானாக
[
அர்ஹமுர்ராஹிமான இரட்சகா என்ற சொல்லை அதிகமாக பயன்படுத்துவாரகள்
الحمد لله الذي هدانا لهذا
وما كنا لنهتدي لولا ان هدانا الله
இது தொடக்கம்
அது துஆ வின் போதும்
நிதி திரட்டும் போதும்
சென்னை மெரினா கடற்கரையில் முதன்முதலாய் அறிஞர் அண்ணா வாழ்ந்த காலம் என்று நினைக்கிறேன் முன்னாள் முதல்வர் டாக்டர் கலைஞர் அவர்களும் அந்த சபையில் இருந்தார் அரவக்குறிச்சி ஷர்புத்தீன் பாக்கவி(செல்லமாய் சன்னியாசி ஹஜரத் என்று அழைக்கப்படுவதுண்டு)
அந்த சீரணி அரங்கில் கண்ணுக்கு எட்டிய தூரம் வரை கடல் அலைபோல் மக்கள் கூட்டம் அதில் சர்புதீன் அவர்கள் கிராஅத் ஓத C v அபூபக்கர் பாகவி ஹஜ்ரத் அவர்கள் சிறப்புரையாற்ற அத்தனை அரசியல் ஞானிகளும் வாயில் விரல் வைத்து பார்த்தார்கள் ஆலிம்கள் இப்படி பேசுவார்களா என திரும்பிப் பார்க்க வைத்தவர்கள் மரியாதைக்குரிய C v அபூபக்கர் பாக்கவி அவர்கள் நிமிர்ந்த நன்னடை நேர்கொண்ட பார்வை நிலத்தில் யார்க்கும் அஞ்சாத நெறிகள் இந்தப் பண்புக்கு சொந்தக்காரர்
அடிக்கடி பயானில் அவர் பயன்படுத்தும் வார்த்தைகளில் ஒன்று இரட்சகா
கிஞ்சிற்றும் சந்தேகமில்லை அவரின் பிரார்த்தனை ஒட்டு மொத்த சமுதாயத்தை கட்டிப்போட வைத்துவிடும் கம்பீரமாய் கோவையில் வாழ்ந்து கொண்டிருந்த அவரின் மரணச் செய்தி துயரச் செய்தி எல்லோரையும் துக்கத்தில் ஆழ்த்தியது அந்த ஜனாஸாக்களில் கலந்து கொண்டவர்களில் நானும் ஒருவன் அல்லாஹ் அவரின் மண்ணறையை விசாலமாக்குவானாக அவரின் பார்வை மங்கிப் போன கடைசி காலத்தில் அவரை அவருடைய வீட்டில் நான் சந்தித்தபோது என்னை கொஞ்ச நேரம் உற்றுப் பார்த்துவிட்டு யாரு முஜீபா?என்று கேட்டபோது என்னையும் அறியாமல் நான் அழுதுவிட்டேன் அவர்களின் நினைவலைகள் என்னை விட்டும் என்றும் நீங்காமல் இன்றும் பசுமையாக காட்சி தருகிறது ஜமாஅத்துல் உலமாவின் முன்னாள் தலைவர் தமிழகத்தின் தலைசிறந்த பேச்சாளர்களில் ஒருவரான மௌலவி அப்துர் ரஹீம் பாக்கவிஅவர்கள் சி வி ஹஸரத் ஆலிம் பெருந்தகையை நினைவு படுத்தியதற்கு நன்றி
ஆமீன்.
சங்கைமிகு சீவி ஹழ்ரத் அவர்களின் மாணவர்களில் நானும் ஒருவன் என்று சொல்வதில் எனக்கு மிக்க பெருமை.
மேடைப்பேச்சில் தனக்கென தனி பாணியை தனித்தன்மையை உடை ஹலரத் அவர்கள் சபையில் அமர்ந்திருப்பவர்களி உள்ளத்தை ஈர்த்து கடைசிவரை அப்படியே அமரச் செய்து விடும்..
தித்திக்கும் திருமறை தெவிட்டாத தேன் அமுதம்.,.. என தொடங்குகின்ற அந்த வரிகள் இன்னும் என் மனதில் ஆழமாக பதிந்தவை.
தமிழ் வார்த்தை சித்தர். வார்த்தைகள் கொட்டோ கொட்டென்று அருவியாக வந்துவிழும்.
நான் ஹலரத் அவர்களிடம்
ميزان. مفيدالطالبين. تعليم المتعلمين
போன்ற கிதாபுகள் ஓதும் போது சிறுவர்களாகிய எங்களுக்கு புரிகின்ற எளிய தமிழில் சொல்லித் தருவார்கள்.
امدادالعلوم
வளர்ச்சியின் ஒவ்வொரு துளியிலும் ஹலரத் அவர்களின் பங்கு இமாலயத்தை தொட்டுவிடும்.
ஹலரத் அவர்கள் தங்களது ஹயாத் வரை இம்தாதுல்உலூமில் பணியாற்றி இருந்தால் அதன் வளர்ச்சி இன்று நாம் காண்பதை விட மிக மிக மிக உயர்ந்தோங்கி இருக்கும்الحمدلله.
இப்படி நிறைய சொல்லலாம்.
விரிவஞ்சி இத்துடன் நிறைவு செய்கிறேன்.
السلام عليكم ورحمه الله وبركاته
*மேட்டுப்பாளையம்* அப்துல்லாஹ் சிராஜி ஃபாஜில் பாகவீ
சி வி ஹஜ்ரத்தை பற்றி ஒரு செய்தி அடியேனும் சொல்ல வேண்டும் என நினைக்கிறேன்.நான் மேட்டுப்பாளையம் பெரிய பள்ளி பொருப்புக்கு வந்த போது .பள்ளியை புதுப்பித்து புணரமைக்க வேண்டும் என்று ஜமாஅத்தாரால் முடிவு செய்யப்பட்டு அடிக்கல் நாட்டி பள்ளி கட்டிட வேளை துக்கிவைக்க .அதே சமயம் கட்டிட நிதி வசூல் செய்ய வேண்டும் என நிர்வாகத்தில் முடிவு செய்யப்பட்டது.அதில் மூத்த ஆலிம்கள் அழைக்கப்பட்டு.அவர்களின் திருக்கரத்தால் துவக்கிட வேண்டும் என நினைத்து பொருப்பு என்னிடம் கொடுக்கப்பட்டது.நீண்ட ஆலோசனைக்குப்பின் இருமூத்த ஆலிம்களை அழைப்பது முடிவு செய்து.கண்ணியத்திற்க்குரிய சி.வி.அபூபக்கர் ஹஜ்ரத் .அடுத்து ஷைகுல்ஹதீஸ் ஐக்கரிய்யா ரஹ் .அவர்களின் கலீபா மர்ஹூம்சேலம் மஜாஹிருல் உலூம் நாஜிர் ஹஜ்ரத்தையும் அழைத்திருந்தேன்.அல்லாஹ்தஆலாவின் பெரும்கிருபையால் கட்டிட அடிக்கல் நாட்டுவிழா நடந்தது.அதில் கட்டிட நிதி வசூல் செய்ய வேண்டும் என்று நிர்வாத்தினர் வற்புறுத்தினர்.நான் தயக்கம் காட்டினேன்.என் முகத்தை கூர்ந்து கவனித்த சி.வி.ஹஜ்ரத் என்னை தன்னருகில் அழைத்து.என்ன பிரச்சனை .என்று கேட்டார்கள் .நான் தயக்கத்தோடு முலுங்கி முலுங்கி சொன்னேன்.என்னை தட்டிக்கொடுத்து விட்டு.மெத்த கட்டிட செலவு எவ்வளவு?என்று கேட்டுவிட்டு.உடனே தனக்கே உரிய பாணியில் துஆவுடன் வசூலை தொடங்கினார்கள்.மாஷாஅல்லாஹ்.ஒரு மணி நேரத்தில் பதிநான்கு லட்சம் வசூல் செய்துவிட்டார்கள்.எங்களுக்கு சந்தோசம் தாங்கமுடியவில்லை.ஹஜ்ரத்துக்கு ஒரு பெருந்தொகையை அளிக்க நிர்வாக முடிவெடுத்தது.அந்த என் கையில் கொடுக்கப்பட்டது.விருந்துமுடிந்தது.ஹஜ்ரத் கோவை செல்ல தன் கார்அருகில் வந்தார்கள்.நான் ஹஜ்ரத்திற்க்கு நிர்வாகத்தின் சார்பாக நன்றி சொல்லிவிட்டு.அந்த கவரை நீட்டினேன்.என்னது என்றார்கள் அதட்டலாக.நான் தயக்கத்தோடு ஹஜ்ரத்திடம் சின்ன ஹதியா என்றேன். என்னை அருகில் அழைத்து மொளவிஷா.நான் இந்த ஊர் மதரசா பைஜுல்பரக்காதில் மூன்று வருசம் ஓதியுள்ளேன்.இந்த ஊர் மக்கள் அன்பானவர்கள்.இந்த ஊர் மக்களுக்களுக்கு ஏதும் செய்ய வேண்டும்.என நான் ஓதும் காலத்திலிருந்து நினைத்திருந்தேன்.அல்லாஹ் தஆலா அதை இன்று நிறைவேற்றியுள்ளான்.உங்கள் மூலமாக நிறைவேற்றியுள்ளான்.ஹஜ்ரத்.பெட்ரூலுக்காவது என்று இழுத்தேன்.வேண்டாம் எள்று சிரித்துக்கொண்டே துஆ செய்யுங்க மொளலவி ஷா. விடை பெற்றார்கள்.அதுவே ஹஜ்ரத் அவர்களின் மேட்டுப்பாளையத்தின் கடைசி சந்திப்பு. ஹஜ்ரத் அவர்களின் சேவைகளை கபூல் செய்து.லிகாவுல்லாஹ்வை வழங்கி.மன்னர் மஹ்மூது நபி ஸல் அவர்களுடன் பாக்கியத்தை அருள்வானாக.ஆமீன்...
C.V.அபூபக்கர் ஹஜ்ரத் அவர்கள் எந்த ஆண்டில் வஃபாத் ஆனார்கள்.
ஹஜ்ரத்.... 25.9.2005.
கருத்துகள்
கருத்துரையிடுக