வாழ்வை மாற்றும் துஆ
• உங்கள் நாட்டம் நிறைவேற வேண்டுமா?
• ஸாலிஹான வாழ்கை துணை வேண்டுமா?
• ஹலால் ஆனா வேலை வேண்டுமா?
• வாசிக்க இடம் வேண்டுமா?
• ஹலால் ஆனா பொருளாதாரம் வேண்டுமா?
நபி மூஸா (அலை) அவர்கள் கேட்ட அழகிய துஆ!
• நபி மூஸா (அலை) அவர்கள் அவர்கள் வாழ்ந்த ஊரில் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக அந்த ஊர் மக்கள் தன்னை கொலை செய்து விடுவார்கள் என்று பயந்து மத்யன் நகருக்கு தப்பி சென்றார்கள்!
• அந்த நேரத்தில் நபி மூஸா (அலை) அவர்களுக்கு கையில் உணவு பணம் வாகனம் தங்குவதற்கு இடம் என்று எதுமே இல்லாமல் தனி மரமாக நின்று கொண்டு இருந்தார்கள்!
• அப்போது நபி மூஸா (அலை) அவர்களுகள் கிழே உள்ள துஆவை அல்லாஹ்விடம் கேட்டார்கள்!
• இந்த துஆவை கேட்ட பின்பு அல்லாஹ் மூஸா (அலை) அவர்களுக்கு :
1) தங்குவதற்கு ஒரு இடம்
2) ஒரு வேலை
3) நல்ல குடும்பம்
4) ஸாலிஹான மனைவி
5) செல்வம்
• என அனைத்துமே அல்லாஹ், மூஸா (அலை) அவர்களுக்கு வழங்கினான்! இந்த துஆவை அதிகம் கேளுங்கள் :
(சூரத்துல் : அல் கஸஸ் : 15 & 28)
رَبِّ إِنِّي لِمَا أَنزَلْتَ إِلَيَّ مِنْ خَيْرٍ فَقِيرٌ
‘ ரப்பி இன்னீ லிமா அன்ஸ(z)ல்த இலைய மின் ஹைரின் ஃப(f)கீர் ’
பொருள் : என் இறைவா! நீ எனக்கு இறக்கியருளும் நல்லவற்றின்பால் நிச்சயமாக நான் தேவையுள்ளவனாக இருக்கின்றேன்!
(சூரத்துல் : அல் கஸஸ் : 24)
@அல்லாஹ் போதுமானவன் 💞
கருத்துகள்
கருத்துரையிடுக