இடுகைகள்

ஆகஸ்ட், 2022 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

மனித உடல் அதிசயங்கள்

*கடவுள் மனித உடல் அமைப்பை எவ்வாறு படைத்துள்ளான் என்று சிறிது எண்ணிப் பார்த்து உடலை பேணுவோம்*  ( *1*) *பூரண ஆயுள்* என்பது *120 ஆண்டுகள்* ஆரோக்கியமாக வாழ்வது . ( *2*) ஒரு *தலைமுறை* என்பது *33 ஆண்டுகளைக்* குறிக்கும் .  ( *3*) மனித *முகத்தில் 14 எலும்புகள்* உள்ளன .  ( *4*) மனித மூளையில் *6 கிராம்* அளவிற்கு *தாமிரம்* உள்ளது .  ( *5*) ஒரு மனிதனின் உடலிலுள்ள *நரம்புகளின்* மொத்த நீளம் சுமார் *72 மீட்டர்*.  ( *6*) நமது *ரத்தம்* ஒரு நாளில் *30 கோடி கி.மீ.* பயணம் செய்கிறது .  ( *7*) *நுரையீரல்* ஒரு நாளைக்கு *23,040 முறை சுவாசத்தை* உள்ளெடுத்து வெளியே செலுத்துகிறது .  ( *8*) நமது *இதயம்* ஒரு நாளில் *1,03,689 முறை துடிக்கிறது*.  ( *9*) மனிதனின் *நாக்கில் உள்ள* சுவை அறியும் செல்களின் எண்ணிக்கை *மூன்று ஆயிரம்*.  ( *10*) உடலில் உள்ள *மின்சாரத்தின் அளவு 25 வாட்*.  ( *11*) ஒரு சராசரி மனிதனின் உடலில் ஓடும் *ரத்தத்தின் அளவு 5 லிட்டர்*.  ( *12*) *கைரேகை*'யைப் போலவே *நாக்கில் உள்ள வரிகளும்* ஒவ்வொருவருக்கும் வேறுபடும் ....

பயணம்

*பயணம் என்பதுதான்*  *இவ்வுலகின் மிக*  *நீண்ட சொல்...* *அதில்*  *தொடக்கமும் இல்லை*  *முடிவும் இல்லை...*

ஹக்,حق சித்க் صدق என்ன வித்தியாசம்?

மீள்  ஹக்,حق சித்க் صدق என்ன வித்தியாசம்? ******************-*----****** கூத்தாநல்லூர் மதரஸா மன்பவுல் உலா வில் நான்காவது ஜும்ரா ஓதினேன்.அங்கு கண்ணியத்திற்குறிய என் உஸ்தாத் பெருந்தகை கம்பம் அப்துல் கனி ஹஜரத் அவர்களிடம் شرح التهديب என்ற மன்திக் (தர்க்கக் கலை)கிதாப் வகுப்பில் ஹக் ,ஸித்க் இரண்டிற்கும் உண்மை என்று பொருள் கொள்கிறோம் இரண்டிற்கும் என்ன வித்தியாசம் எனக் கேட்டேன். அதற்கு அவர்கள் ஒரு உதாரணத்தின் மூலம் விளக்கினார்கள்.     உன்னை பெரிய ஹஜரத் அழைத்து அப்துல் கனிஹஜரத் அறையில் இருக்கிறாரா பார்த்து வா என்கிறார். நீ வருகிறாய். என் அறையின் கதவு சாத்தியிருக்கிறது  எனது காலணி வெளியே இருக்கின்றது  நான் உள்ளே இருப்பதாக நம்பிக்கொண்டு பெரிய ஹஜரத் திடம் ஹஜரத் அறையில் இருக்கிறார்" எனச் சொல்கிறாய்.    ஆனால் உண்மை என்னவென்றால் காலணியின் வார் அறுந்து விட்டதால் நான் வேறு காலணியை அணிந்து கொண்டு வெளியே சென்றுவிட்டேன்.  நான் அறையில் இல்லை என்பதுதான் உண்மை நிலை எது உண்மை நிலையோ அதை ஹக் என்று சொல்லப்படும்  அதே நேரத்தில் நான் இருக்கிறேன் என நம்பிக்கொண...

ஞாபகங்கள்

யாருமற்ற வேளையிலும், ஞாபகங்களை சுமந்து கொண்டிருக்கிறது இருக்கைகள்..!

திக்ரு

திக்ரின்-மகத்துவம். பொருமையுடன் படிக்கவும். அஹ்மத் இப்னு ஹம்பல் (ரலி) அவர்கள் இஸ்லாத்தின் 4 ஆவது மத்ஹபை தொகுத்து வழங்கிய சட்டமேதை. ஒரு நாள் பக்தாத் நகரம் வந்தார்கள். இரவு நேரம் ஆகிவிட்டதால் ஒரு பள்ளிவாசலில் இரவு தொழுகையை முடித்து விட்டு காலையில் சென்று விடலாம் என்ற எண்ணத்தில் அங்கேயே தங்கினார். அந்த காலத்தில் தகவல் தொழில்நுட்ப வசதிகள் இல்லாததால் அஹ்மத் இப்னு ஹம்பலை (ரலி) யாருக்கும் தெரியவில்லை. பள்ளியின் வாட்ச்மென் வந்து, பெரியவரே! இங்கே தங்க கூடாது. இப்னு ஹம்பல் (ரலி) அவர்கள் சொன்னார்கள் இரவு மட்டும் இருந்து தங்கி விட்டு காலையில் சென்று விடுகிறேன். "அதெல்லாம் முடியாது இங்கே தங்க கூடாது என்றார். பள்ளிக்கு வெளியே விரிப்பு விரித்து அமர்ந்தார்கள். உடனே, வாட்ச்மென் அவர்களை தரதரவென இழுத்து கொண்டு வந்து நடுத்தெருவில் விட்டுவிட்டார். எதிரில் ஒரு ரொட்டி கடை. அந்த கடைக்காரர் பார்த்து விட்டு பெரியவரே! இப்படி வந்து உட்காருங்கள் இரவு மட்டும் தானே இங்கே உமது விரிப்பை விரித்துக் கொள்ளுங்கள் என்றார். அஹ்மது இப்னு ஹம்பல் (ரலி) அவர்கள் வந்து உட்கார்ந்தார்கள். அந்த கடைக்காரர் "ஸுப்ஹானல்லாஹி வ ...

#மனமுதிர்ச்சி#maturity

*மன முதிர்ச்சி என்றால் என்ன?*  *What is Maturity of Mind ? * 1. மற்றவர்களை திருத்துவதை விட்டுவிட்டு      நம்மை திருத்திக்கொள்வது. 1. Correcting ourselves without trying to correct others. 2. அனைவரையும் அப்படியே (குறைகளுடன்)     ஏற்றுக்கொள்வது. 2. Accepting others with their short comings. 3. மற்றவர்களின் கருத்துக்களை அவர்கள்  கோணத்திலிருந்து புரிந்துகொள்ளுதல். 3. Understanding the opinions of others from their perspectives. 4. எதை விட வேண்டுமோ அதை விட பழகிகொள்தல். 4. Learning to leave what are to be avoided. 5. மற்றவர்களிடமிருந்து எதிர்பார்ப்பதை விடுதல். 5. Leaving the expectations from others. 6. செய்வதை மன அமைதியுடன் செய்வது. 6. Doing whatever we do with peace of mind. 7. நம் புத்திசாலித்தனத்தை மற்றவர்களிடம்      நிரூபிப்பதை விடுவது. 7. Avoiding to prove our intelligence on others. 8. நம் செயல்களை மற்றவர் ஏற்க வேண்டும்  என்ற நிலையை விடுதல். 8. Avoiding the status that others should accept our actions. 9. மற்றவர்களுடன் நம்மை ஒப்பிட...

துன்ஜீனா ஸலவாத்து #thunjina salawath #salavath#muhammed

அல்லாஹும்ம ஸல்லி அலா சைய்யிதீனா முஹம்மத்தீன் வ அலா ஆலி சைய்யிதீனா முஹம்மதீன் ஸலாத்தன் துன்ஜீனா பிஹா மின் ஜமீயில் அஹ்வாலி வல் ஆஃபாத்தி வ தக்லிய் லனா பிஹா ஜமீயில் ஹாஜாதி வ துதஹ்ஹிரினா பிஹா மின் ஜமீயிஸ் சைய்யிஆத்தி வ தர்ஃபவூனா பிஹா இன்தக அஃலத் தரஜாதி வ துபல்லிகுனா பிஹா அக்ஸல் காயாதி மின் ஜமீயில் ஹைய்ராதி ஃபில் ஹயாத்தி வ பஃதல் மமாதி.

நற்பண்புகள்

நற்பண்புகள்...!!! கண்ணுக்கு கருணை வேண்டும்  காதுக்கு கேள்வி வேண்டும்  நாவுக்கு அடக்கம் வேண்டும்  வாக்குக்கு உறுதி வேண்டும்  கிரிடத்துக்கு பணிவு வேண்டும்  கரத்துக்கு ஈகை வேண்டும்  இரைப்பைக்கு திருப்தி வேண்டும் .  இடைக்கு கற்பு வேண்டும்  சொல்லுக்கு இனிமை வேண்டும்  காலுக்கு கட்டுப்பாடு வேண்டும்  நடையிலே தெளிவு வேண்டும்  உடையிலே தூய்மை வேண்டும்  கழுத்துக்கு மாலை வேண்டும்  எண்ணத்தில் வாய்மை வேண்டும்  மனதுக்கு மாண்பு வேண்டும்  நெஞ்சுக்கு நேர்மை வேண்டும்  விரலுக்கு லயம் வேண்டும்  முகத்துக்கு புன்னகை வேண்டும்  முத்தத்துக்கு அழுத்தம் வேண்டும்  கதைக்கு கால் வேண்டும்  காதலுக்கு உண்மை வேண்டும்  கவிதைக்கு கருத்து வேண்டும் .  ஆண்மைக்கு உழைப்பு வேண்டும்  பெண்மைக்கு பொறுமை வேண்டும்  இளமைக்கு துடிப்பு வேண்டும்  முதுமைக்கு அமைதி வேண்டும்  ஆசிரியனுக்கு அன்பு வேண்டும்  மாணவனுக்கு ஆர்வம் வேண்டும்  வீரனுக்கு விவேகம் வேண்டும்  தலைவனுக்கு நிதானம் வேண்டும்  அறிஞனு...

சுதந்திரம்

இன்னும் ஓர் சுதந்திரம் வேண்டும்!  போதையில் இருந்து இளைஞர்களுக்கு சுதந்திரம் வேண்டும்! அறியாமையிலிருந்து மாணவர்களுக்கு சுதந்திரம் வேண்டும்! வறுமையிலிருந்து ஏழைகளுக்கு சுதந்திரம் வேண்டும்! ஆதிக்க சக்திகளின் பயமுறுத்தத்திலிருந்து இந்நாட்டின் சிறுபான்மை  மக்களுக்கு சுதந்திரம் வேண்டும்! நீதியை நிலை நாட்ட நீதிமன்றங்களுக்கு சுதந்திரம் வேண்டும்! இலஞ்சம் ஊழலிருந்து இந்தியாவுக்கு சுதந்திரம் வேண்டும்! அநீதிஇழைக்கப்படும் மக்களுக்கு அடக்கு முறையிலிருந்து சுதந்திரம் வேண்டும்! பாலியல் தொல்லைகளிலிருந்து பெண்ணினத்துக்கு சுதந்திரம் வேண்டும்! போதைப் பொருள் இல்லா இந்தியாவை வடிவமைப்போம்! லஞ்சம் ஊழலில்லா தேசதத்தை உருவாக்குவோம்! அனைவருக்கும் கல்வி பொருளாதாரம் வேலைவாய்ப்பு உறுதிப்படுத்துவோம்! எல்லோருக்கும் எல்லாம் கிடைக்கச்செய்வோம்! வாழ்க தேசம்!வளர்க இந்தியா! மௌலானாமௌலவிஅல்ஹாபிழ் S.முஹம்மதுஇல்யாஸ்பாகவி மேட்டுப்பாளையம்.

ஸலவாத்#salawath

🌹தாஹா ரஸூல் ﷺ மீது ஸலவாத் ஓதாமலிருக்கும் துர்பாக்கியவான்கள் நிலை 🌹 அஹ்மது முஸ்தபா ,முஹம்மது முஜ்தபா ,ஈருலக வேந்தர் ஷபீயுல் முத்னிபீன் முஹம்மது ﷺ அவர்கள் நவின்றார்கள் : - 1) அல்லாஹ்வின் திக்ரையும்,பூமான் நபி ﷺ அவர்கள் மீது ஸலவாத் ஓதாமல் மக்கள் கலைந்து சென்ற ஒரு மஜ்ஸில் என்பது ,துர்வாடை வீசும் பிணத்தை விட்டு செல்வதைப் போன்றதாகும். 📚 இமாம் பைஹகீ رَحِمَهُ ٱللَّٰهُ, ஷுஅபுல் ஈமான்,பாகம் 2,பக்கம் 215,ஹதீஸ் எண்:1570. 2) எவரொருவர் முன் எனது திருநாமம் சொல்லப்பட்டு ,அவர் ஸலவாத் ஓதவில்லையோ அவர் சுவனம் செல்லும் பாதையை விட்டகன்றவர் ஆவார் . 📚 இமாம் தபரானீ رَحِمَهُ ٱللَّٰهُ, அல் முஜம் அல்கபீர் ,பாகம் 3,பக்கம் 128,ஹதீஸ் எண்: 2887. 3) எவரின் முன்னர் எனது திருநாமம் சொல்லப்பட்டும், அவர் ஸலவாத் ஓதவில்லையோ அவர் அவமானப்படுத்தப்படட்டும். 📚 இமாம் திர்மிதி رَحِمَهُ ٱللَّٰهُ, ஸுனன் திர்மிதி, பாகம் 5,பக்கம் 320,ஹதீஸ் எண்: 3556. 4) எவரின் முன்னர் எனது திருநாமம் சொல்லப்பட்டு அதற்கு ஸலவாத் ஓதவில்லையோ அவர் தான் மனிதர்களில் மிகவும் கஞ்சன். 📚 இமாம் அஹ்மது பின் ஹன்பல் رضي الله عنه, முஸ்னத் இமாம் அஹ்மது பின் ஹ...

தன்னம்பிக்கை

இன்றைய சிந்தனை. ✓✓✓✓✓✓✓✓✓✓✓✓✓ படுத்தே இருப்பவனுக்கு 🛌🛏️ *பாயே* பகையாகும் ✅ பேசியே திரிபவனுக்கு 🗣️ *வாயே* பகையாகும் 👄🫦 பாயைச் சுருட்டினால் 👍 ஆரோக்கியமாக வாழலாம் 🤩 வாயைச் சுருக்கினால் 😷 *ஆனந்தமாக*  வாழலாம்.😃

மனநிம்மதி

50 வயது மதிக்கத்தக்க ஒருவர் ஆழ்ந்த மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டிருந்தார்...,  அவருடைய மனைவி ஒரு ஆலோசகரிடம் சந்திப்பை பதிவு செய்தார்... மனைவி சொன்னாள்... "அவர் கடும் மன உளைச்சலில் இருக்கிறார், தயவு செய்து பாருங்கள்.." மனைவி வெளியில் அமர்ந்திருந்தபோது ஆலோசகர் சில தனிப்பட்ட விஷயங்களைக் கேட்டு தனது ஆலோசனையைத் தொடங்கினார்...   கணவர் பேசினார், "நான் மிகவும் கவலைப்படுகிறேன். குடும்பப் பிரச்சனைகள், வேலை அழுத்தம், நண்பர்கள், குழந்தைகளின் படிப்பு, வேலை டென்ஷன், அடமானக் கடன், கார் கடன் போன்ற கவலைகளால் நான் மூழ்கிவிட்டேன். நான் விரும்பும் எல்லாவற்றிலும் நான் ஆர்வத்தை இழந்துவிட்டேன். உலகம் என்னை ஒரு பீரங்கியாக நினைக்கிறது, என்னிடம் எல்லாம் இருக்கிறது என்று அவர்கள் நினைக்கிறார்கள், ஆனால் என்னிடம் கார்ட்ரிட்ஜ் அளவுக்கு கூட பொருட்கள் இல்லை. நான் மிகவும் மன உளைச்சலில் இருக்கிறேன்.."  அப்போது கற்றறிந்த ஆலோசகர் அவரிடம், "நீங்கள் எந்த மேல்நிலைப் பள்ளியில் படித்தீர்கள்" என்று கேட்டார். அவர்பள்ளியின் பெயரைச் சொன்னார்... அந்த ஆலோசகர், நீங்கள் அந்தப் பள்ளிக்குச் செல்லுமாறு ந...

இமாம்களின் நிலை #imaam #hajrath

மெளலவிமார்கள் ஒன்றும் மலக்குகளோ, மரங்கட்டைகளோ அல்ல... கொழும்பில் உள்ள பிரதான ஜும்ஆ பள்ளிவாசல் ஒன்றின் Religious Committee கோடீஸ்வர தலைவருக்கும், இலங்கையில் உள்ள ஒரு "பிரபலமான" கதீப் ஒருவருக்கும் இடையில் நடைபெற்ற உரையாடல்: நிர்வாகி: ஹஸ்ரத், ஏலும்டா ஒரு நல்ல மெளலவி ஒர்த்தர எங்கட பள்ளிக்கு புடிச்சி தாங்களே இமாமத் செய்ய... கதீப்: ஏன் ஹாஜி... நான் ஆறு மாசத்துக்கு முந்தி கொத்பாக்கு வரப்போக்கல ஒருத்தர் இருந்தாரு தானே... அவர் எங்க...? நிர்வாகி: அவர் வெலவிட்டாரு... எனக்கு வெறுத்து போவ்து இந்த மெளலவிமார்க்கல தேடித் தேடி... இந்த ரெண்டு வருஷத்துல எத்தன மெளலவி வந்துட்டு வந்துட்டு போறாங்க... இப்போ கிட்டத்துல கூட ஒர்த்தர Interview பண்ணிணன். அவருக்கு வாய்க்கொழுப்பு கூடப் போல... கதீப்: ஏன் ஹாஜி அவர் என்ன சொல்றாரு...? நிர்வாகி: எங்கட Rules and Regulations, Conditions எல்லாத்துக்கும் Okayயாம்... ஆனா Salary எவ்ளவ் எதிர்ப்பாக்குரிங்க எண்டு கேட்டதுக்கு, "பரவால்ல ஹாஜி... ஒங்கட குடும்பத்துக்கு மாசத்துக்கு எவ்ளவ் செலவழிக்கிரிங்களோ, அத தந்தா போதும்" எண்டு சொல்றார். எப்டி இரிக்கி கத..?   கத...

அப்பாடக்கர்

அமிர்தலல் விதல்தாஸ் தக்கர் (Amritlal Vithaldas Thakkar) என்பவர் மிக பெரிய சமூக சீர்திருத்தவாதி. குஜராத்தில் பிறந்த இவர் ஹரிஜன மக்களுக்காக பல போராட்டங்களை நடத்தியவர். சுதந்திரத்திற்கு முன்னால் மெட்ராஸ் மாகாணத்திலும் பல போராட்டங்களை நடத்தியுள்ளார். இவரை மெட்ராஸ் மக்கள் பாசமாக தக்கர் பாபா என்று அழைத்தனர். (குஜராத்தியில் பாபா என்றால் அப்பா என்று பொருள்). தக்கர் பாபா பெரிய அறிவாளி, பல துறைகளில் சிறந்து விளங்கியவர். அவரிடம் கேட்கப்படும் எல்லா கேள்விகளுக்கும் உடனுக்குடன் பதில் சொல்வார். நாளடைவில் மெட்ராஸ் மக்கள் யாரையும் பெரிய அறிவாளியா என்று கேலியாக குறிப்பிட பெரிய அப்பா தக்கரா ? என்று கேட்க தொடங்கினர். பின்னாளில் அப்பா தக்கரா என்ற வார்த்தை மருவி அப்பாடக்கர் ஆகிவிட்டது. நன்றி: விக்கிப்பீடியா

வரலாறுகள்#history

நண்பர்களே யாரேனும் புத்தகம் வாசிக்கும் பழக்கம் இருப்பின் உங்கள் ஓய்வு நேரத்தில் அனுபவித்துக்கொள்ளு ங்கள். வாழ்க்கை வரலாறுகள் தமிழ் PDF மின்நூல்கள்: கார்ல் மார்க்ஸ் https://t.co/BbQwjgJFcq சேகுவேரா https://t.co/JI9eSrEDUE தாமஸ் ஆல்வா எடிசன் https://t.co/a6InSC0Da1 ஆல்பர்ட் ஐன்ஸ்டைன் https://t.co/IWWUTSWna5 மேதகு வே.பிரபாகரன் https://t.co/Zg5mtFiFE8 மாவீரன் அலெக்சாண்டர் https://t.co/A2abcypbAv மருதநாயகம் https://t.co/gpeSWfN4R6 ராமானுஜம் https://t.co/HgR7VZeYGI சுனிதா வில்லியம்ஸ் https://t.co/jkSAD1kMEL ஹெலன் கெல்லர் https://t.co/Jjw8SYd5XH அறிஞர் அண்ணா https://t.co/hanYh3Y2cS திப்பு சுல்தான் https://t.co/hMPzLcS68j நெப்போலியன் https://t.co/2CeBxGohU3 கேனல் கடாபி https://t.co/W6aukGy6rs ஹிட்லர் https://t.co/qHpoaN6Z0A காமராசர் https://t.co/Y7A7LCmo1o பாரதியார் https://t.co/lVAC1Skenq பிடல் காஸ்ட்ரோ https://t.co/2fAuV7G33K பெரியார் https://t.co/q2VexzfDTP

கொடிக்கு சல்யூட்

*கேள்வி:* தேசியக்கொடி அல்லது கட்சி, அமைப்புகளின் கொடிகளுக்கு சல்யூட் அடிப்பது போன்ற செயல்களுக்கு மார்க்கத்தில் அனுமதி உண்டா? *الجواب حامداومصلياومسلما:* جھنڈے کے سامنےکھڑا ہونا یا سلامی پیش کرنا ایک قومی یا فوجی عمل ہے، اس کی اجازت ہے۔ البتہ جھکنا درست نہیں ہے؛ اس لیے کہ شریعت میں جھک کر تعظیم سے روکا گیا ہے۔لیکن اسے مشرکانہ فعل نہیں کہا جاسکتا۔ فتاویٰ شامی میں ہے: ’’وفي المحیط أنه یکره الانحناء للسلطان وغیره‘‘.  *[ردالمحتار: ٦/ ٣٨٣]* مفتی اعظم ہند حضرت مفتی کفایت اللہ صاحب رحمہ اللہ فرماتے ہیں:👇 ’’ جھنڈے کو سلامی مسلم لیگ بھی کرتی ہے اور اسلامی حکومتوں میں بھی ہوتی ہے، وہ ایک قومی عمل ہے، اس میں اصلاح ہوسکتی ہے، مگر مطلقاً اس کو مشرکانہ فعل قرار دینا صحیح نہیں ہے‘‘۔  *(کفایت المفتی:٩/ ٣٧٨)* مفتی عبد الرحیم صاحب لاجپوری رحمہ اللہ فرماتے ہیں:👇 ’’ یہ محض سیاسی چیز ہے اور حکومتوں کا طریقہ ہے، اسلامی حکومتوں میں بھی ہوتا ہے، بچنا اچھا ہے، اگر فتنہ کا ڈر ہو تو بادلِ ناخواستہ کرنے میں مواخذہ نہیں ہوگا‘‘۔ *(فتاوی رحیمیہ۱۰/۱۸۰)* கொடிக்கு முன்னால் நிற்பது, சல்யூட் அடிப்பது ஒரு சம...

#இந்திய சுதந்திர போரில் முஸ்லீம்களின் பங்கு*

*இந்திய சுதந்திர போரில் முஸ்லீம்களின் பங்கு* இந்திய முஸ்லீம்களின் மறைக்கப்பட்ட வீர வரலாறுகள் எண்ணிலடங்கா..!!"" இஸ்லாமிய தியாகிகள் இந்திய சுதந்திரப் போராட்டத்துக்காக தங்களின் உடல் , பொருள், ஆவியை தியாகம் செய்த பல இஸ்லாமியப் பெருமகன்களின் வரலாற்றை கண்டு வருகிறோம். இந்திய சுதந்திரப் போராட்டத்தில் சிறைக்கு சென்றவர்களிலும் உயிர்களை தியாகம் செய்தவர்களிலும் முஸ்லிம்கள்அவர்களின் மக்கள் தொகையின் விகிதாச்சாரத்தோடு ஒப்பிடும்போது மிக அதிகமாகவே இருந்தார்கள் என்று பிரபல எழுத்தாளர் குஷ்வந்த் சிங் இல்லஸ்ட்ரேடட் வீக்லி பத்திரிகையில் எழுதி அது 20/12/1975 அன்று வெளிவந்தது. ஆனால் மறு புறத்தில் முஸ்லிம்கள் செய்த தியாகங்களை குறைத்து மதிப்பிடுகிற ஒரு கூட்டம் பொய்களை அள்ளி விட்டுக் கொண்டிருக்கிறது. முஸ்லிம்களை ஏதோ ஒரு வேண்டாத தலைச்சுமை போல ஆட்சியாளர்களும் அவர்களின் அடிவருடிகளும் நினைத்துக் கொண்டு இருக்கிறார்கள். இன்னும் ஒரு சிலர் இந்த நாட்டை விட்டு அப்புறப்படுத்தவேண்டுமென்றும் அள்ளிவிட்டுக் கொண்டிருக்கொண்டிருக்கிறார்கள். அரசியல் சட்டத்துக்கு விரோதமான அவர்களின் இந்தக் கருத்துக்கள், சட்டபூர்வமான நட...

ஆஷூரா

🌹🌹 *ஆஷூரா (முஹர்ரம் 10 ஆம்) நாளில் பத்து அமல்கள் ...* 🌹🌹 *1- உபகாரம் செய்வது .* *2- நோன்பு வைப்பது .* *3- ஸதகா செய்வது .* *4- அதிகமாக நபிலான தொழுகைகளை தொழுவது .* *5- எதீம் (அனாதை)களை ஆதரிப்பது .* *6- சூரா இக்லாஸ் (குல்ஹூவல்லாஹூ அஹத் சூரா) 1000 முறை ஓதுவது .* *7- குடும்பத்திற்கு தாராளமாக செலவு செய்வது .* *8- நகம் , முடி ஆகியவைகளை வெட்டுவது .* *9- குளிப்பது .* *10- கண்களுக்கு சுர்மா இடுவது .* 🍁🍂🍁🍂🍁🍂🍁 நூல் ;இஆனா

சிறப்பான துஆ #தமிழ்துஆ

اللَّهُمَّ لاَ تَدَعْ لَنا ذَنْباً إِلاَّ غَفَرْتَهُ، وَلاَ هَمّاً إِلاَّ فَرَّجْتَهُ، وَلاَ كَرْباً إِلاَّ نَفَّسْتَهُ ، وَلاَ مَيْتاً إِلاَّ رَحِمْتَهُ ، وَلاَ مَرِيضاً إِلاَّ شَفَيْتَهُ ، وَلاَ دَيْناً إِلاَّ قَضَيْتَهُ ، وَلاَ غَائِباً إِلاَّ حَفِظْتَهُ وَرَدَدْتَّهُ، وَلاَ مُجَاهِداً فِي سَبِيلِكَ إِلاَّ نَصَرْتَهُ ، وَلاَ عَدُوّاً إِلاَّ أَهْلَكْتَهُ ، وَلاَ طَاغِيَةً إِلاَّ قَصَمْتَهُ، ولاَ ضَالاًّ إِلاَّ هَدَيْتَهُ، وَلاَ مَظْلُوماً إِلاَّ أَيَّدْتَهُ، وَلاَ ظَالِماً إِلاَّ خَذَلْتَهُ، وَلاَ عَسِيراً إِلاَّ يَسَّرْتَهُ، وَلاَ وَلَداً إِلاَّ أَصْلَحْتَهُ، وَلاَ عَيْباً إِلاَّ سَتَرْتَهُ، وَلاَ حَاجَةً مِنْ حَوَائِجِ الدُّنْيا وَالآخِرَةِ هِيَ لَكَ رِضاً وَلَنا فِيها صَلاَحٌ إِلاَّ أَعَنْتَنا عَلَى قَضَائِهَا وَيَسَّرْتَهَا لَنا ، بِرَحْمَتِكَ يَا أَرْحَمَ الرَّاحِمِينَ. எங்களைப் படைத்தவனே! எங்களைக் காத்து வருபவனே! எங்களது எந்த ஒரு பாவத்தையும் மன்னிக்காமல் விட்டு விடாதே! எங்களது எந்த ஒரு கவலையையும் மகிழ்வானதாக ஆக்காமால் எங்களை விட்டு விடாதே! எந்த ஒரு துன்பத்தையும் நீக்காமல் எங்கள...

#ரிஜ்க் ₹RIZK#الرزق

  உனது மாத வருமானம் அதிகமாக இருக்க வேண்டும் என்றும் குறைவாக இறுப்பதை எண்ணி கவலைப்படாதே, உனக்கு பணம் சொத்து என்ற ரிஸ்க்கிற்கு பதிலாக வேறொன்று வழங்கப்பட்டிருக்கலாம்.  1. உனக்குரிய ரிஸ்க் பணமாக, சொத்தாக இருக்க வேண்டும் என்ற எந்த நிபந்தனையும் கிடையாது.  சிலவேளை உன்னுடைய ரிஸ்க் உனது நற்குணமாக இருக்கலாம்.  2. சிலவேளை உன்னுடைய ரிஸ்க் நேர்த்தியான உனது புத்திக்கூர்மை, சாதுரியத்தன்மை, உனது ஞானப்பார்வையாகக் கூட இருக்கலாம்.  3. சிலவேளை உன்னுடைய ரிஸ்க் ஸாலிஹான மனைவியாக அல்லது நன்மதிப்புப் பெற்ற உனது குடும்பமாக, அல்லது நல்ல பெயரை உனக்கு வாங்கித்தருகின்ற உனது நல்ல குழந்தைகளாகக் கூட இருக்கலாம்.  4. சிலவேளை உன்னுடைய ரிஸ்க் உனக்குப் பிரயோஜனமளிக்கும் இல்மாக அல்லது உனது நீண்ட ஆயுலாகக் கூட இருக்கலாம்.  5. சிலவேளை உன்னுடைய ரிஸ்க் உனது கள்வத்தனம் இல்லாத, மக்கள் மீது கவலைப்படுகின்ற, அன்புடன் பார்க்கின்ற உள்ளமாகக் கூட இருக்கலாம்.  6. சிலவேளை உன்னுடைய ரிஸ்க் அமைதியான, நிம்மதியான உனது வாழ்க்கையாக இருக்கலாம், உண்மையாகவே அமைதியான நிம்மதியான வாழ்வு கொடுக்கப்பட்டவனே பாக்கியசால...