#ரிஜ்க் ₹RIZK#الرزق
உனது மாத வருமானம் அதிகமாக இருக்க வேண்டும் என்றும் குறைவாக இறுப்பதை எண்ணி கவலைப்படாதே, உனக்கு பணம் சொத்து என்ற ரிஸ்க்கிற்கு பதிலாக வேறொன்று வழங்கப்பட்டிருக்கலாம்.
1. உனக்குரிய ரிஸ்க் பணமாக, சொத்தாக இருக்க வேண்டும் என்ற எந்த நிபந்தனையும் கிடையாது.
சிலவேளை உன்னுடைய ரிஸ்க் உனது நற்குணமாக இருக்கலாம்.
2. சிலவேளை உன்னுடைய ரிஸ்க் நேர்த்தியான உனது புத்திக்கூர்மை, சாதுரியத்தன்மை, உனது ஞானப்பார்வையாகக் கூட இருக்கலாம்.
3. சிலவேளை உன்னுடைய ரிஸ்க் ஸாலிஹான மனைவியாக அல்லது நன்மதிப்புப் பெற்ற உனது குடும்பமாக, அல்லது நல்ல பெயரை உனக்கு வாங்கித்தருகின்ற உனது நல்ல குழந்தைகளாகக் கூட இருக்கலாம்.
4. சிலவேளை உன்னுடைய ரிஸ்க் உனக்குப் பிரயோஜனமளிக்கும் இல்மாக அல்லது உனது நீண்ட ஆயுலாகக் கூட இருக்கலாம்.
5. சிலவேளை உன்னுடைய ரிஸ்க் உனது கள்வத்தனம் இல்லாத, மக்கள் மீது கவலைப்படுகின்ற, அன்புடன் பார்க்கின்ற உள்ளமாகக் கூட இருக்கலாம்.
6. சிலவேளை உன்னுடைய ரிஸ்க் அமைதியான, நிம்மதியான உனது வாழ்க்கையாக இருக்கலாம், உண்மையாகவே அமைதியான நிம்மதியான வாழ்வு கொடுக்கப்பட்டவனே பாக்கியசாலி ஆவான்.
7. சிலவேளை உன்னுடைய ரிஸ்க் அனைவருக்கும் உன்னின் மூலம் நலவு கிடைக்கின்ற உனது நல்ல தன்மையாக கூட இருக்கலாம்.
8. சிலவேளை உன்னுடைய ரிஸ்க் மனிதனை கண்ணியமடையச் செய்கின்ற தக்வாவாக இருக்கலாம்.
9. சிலவேளை உன்னுடைய ரிஸ்க் கண்ணியமான, பத்தினித்தனமுள்ள உனது மானமாக இருக்கலாம்.
உன்னுடைய ரிஸ்க் பணமாக, சொத்தாக இருக்க வேண்டும் என்ற எந்த நிபந்தனையும் கிடையாது.
நீ எப்பொழுதும் போதும் என்ற தன்மையுடையவனாக இரு.
எப்பொழுதும் அல்லாஹ்விற்கு நன்றி உள்ளவனாக இரு.
கருத்துகள்
கருத்துரையிடுக