சிறப்பான துஆ #தமிழ்துஆ
اللَّهُمَّ لاَ تَدَعْ لَنا ذَنْباً إِلاَّ غَفَرْتَهُ،
وَلاَ هَمّاً إِلاَّ فَرَّجْتَهُ،
وَلاَ كَرْباً إِلاَّ نَفَّسْتَهُ
، وَلاَ مَيْتاً إِلاَّ رَحِمْتَهُ
، وَلاَ مَرِيضاً إِلاَّ شَفَيْتَهُ
، وَلاَ دَيْناً إِلاَّ قَضَيْتَهُ
، وَلاَ غَائِباً إِلاَّ حَفِظْتَهُ وَرَدَدْتَّهُ،
وَلاَ مُجَاهِداً فِي سَبِيلِكَ إِلاَّ نَصَرْتَهُ
، وَلاَ عَدُوّاً إِلاَّ أَهْلَكْتَهُ
، وَلاَ طَاغِيَةً إِلاَّ قَصَمْتَهُ،
ولاَ ضَالاًّ إِلاَّ هَدَيْتَهُ،
وَلاَ مَظْلُوماً إِلاَّ أَيَّدْتَهُ،
وَلاَ ظَالِماً إِلاَّ خَذَلْتَهُ،
وَلاَ عَسِيراً إِلاَّ يَسَّرْتَهُ،
وَلاَ وَلَداً إِلاَّ أَصْلَحْتَهُ،
وَلاَ عَيْباً إِلاَّ سَتَرْتَهُ،
وَلاَ حَاجَةً مِنْ حَوَائِجِ الدُّنْيا وَالآخِرَةِ
هِيَ لَكَ رِضاً وَلَنا فِيها صَلاَحٌ
إِلاَّ أَعَنْتَنا عَلَى قَضَائِهَا وَيَسَّرْتَهَا لَنا
، بِرَحْمَتِكَ يَا أَرْحَمَ الرَّاحِمِينَ.
எங்களைப் படைத்தவனே!
எங்களைக் காத்து வருபவனே!
எங்களது எந்த ஒரு பாவத்தையும் மன்னிக்காமல் விட்டு விடாதே!
எங்களது எந்த ஒரு கவலையையும் மகிழ்வானதாக ஆக்காமால் எங்களை விட்டு விடாதே!
எந்த ஒரு துன்பத்தையும் நீக்காமல் எங்களை விட்டு விடாதே!
எந்த ஒரு நோயாளியையும் குணப்படுத்தாமல் விட்டு விடாதே!
எந்த ஒரு கடனையும் நிறைவேற்றாமல் விட்டு விடாதே!
எங்களை விட்டும் பிரிந்திருப்போரை பாதுகாத்து எங்களிடம் திரும்ப ஒப்படைக்காமல் விட்டுவிடாதே!
உனது பாதையில் போராடுகின்ற எந்த ஒரு போராளியையும் அவர்களுக்கு உதவி செய்யாமல் விட்டு விடாதே!
எங்களை அழிக்க துடிக்கும் எந்த ஒரு விரோதியையும் அழிக்காமல் விட்டு விடாதே!
எங்களில் யார் யாரெல்லாம் வழி கேட்டில் இருக்கிறார்களோ அவர்களுக்கு நேர்வழி காட்டாமல் விட்டு விடாதே!
யாரெல்லாம் அநீதம் இழைக்கப்பட்டு இருக்கிறார்களோ அவர்களுக்குரிய நீதி கிடைக்காமல் அவர்களை விட்டு விடாதே!
யார் அநீதி இழைத்தார்களோ அவர்களை
தண்டிக்காமல் விட்டு விடாதே!
எங்களுக்கு எதெல்லாம் சிரமமாக இருக்கிறதோ அதையெல்லாம் லேசாக்காமல் விட்டு விடாதே!
எங்கள் குழந்தை செல்வங்களை நெறி படுத்தாமல் விட்டு விடாதே!
எங்களின் பெற்றோரின் பாவங்களை மன்னித்து அவர்கள் மீது கருணை காட்டாமல் விட்டு விடாதே!
எங்களையும் எங்களது குடும்பத்தாரையும் தொழுகையை நிலை நாட்டுபவர்களாக ஆக்காமல் விட்டு விடாதே!
எங்களது எந்த ஒரு குறையையும் பிறருக்கு மறைத்து அதை முறைப்படுத்தாமல் விட்டு விடாதே!
இம்மை மறுமைக்கான எங்களது தேவைகளில் எவை உனக்குத் திருப்தியாக இருக்கிறதோ எவை எங்களுக்கு அவசியமாக இருக்கிறதோ அவைகளை நிறைவேற்றாமல் விட்டு விடாதே!
அவைகளை எங்களுக்கு லேசாக்கித் தருவாயாக!
கருணையாளர்களுக் கெல்லாம் மிகப் பெரிய கருணையாளனே உனது கருணையினால் இவைகளை நிறைவேற்றுவாயாக!
---------------
யா அல்லாஹ்! உன்னிடம் துஆ கேட்டு அவைகளை ஏற்று கொண்ட கூட்டத்தில் எங்களைச் சேர்ப்பாயாக!
உன்னிடம் பணிந்து மன்றாடி உன்னுடைய கருணைக்கு ஆளானவர்களின் கூட்டத்தில் எங்களைச் சேர்ப்பாயாக!
உன் மீது தவக்கல் வைத்து நீ பொறுப்பேற்று கொண்டவர்களின் கூட்டத்தில் எங்களை ஆக்குவாயாக!
எங்களை படைத்த ரப்பே! எங்களின் நல்அமல்களை ஏற்று கொள்வாயாக!
நாங்கள் செய்கின்ற நல்ல காரியங்கள் உன்னுடைய திருப்தி பெறுகின்ற நோக்கத்திற்காகவே செய்பவைகளாக ஆக்குவாயாக!
அல்லாஹும்ம ஸல்லி வஸல்லிம் அலா முஹம்மதின் வஅலா ஆலி முஹம்மதின் வபாரிக் வஸல்லிம் அலைஹி
வல்ஹம்துலில்லாஹி ரப்பில் ஆலமீன்
ஆமீன்
கருத்துகள்
கருத்துரையிடுக