சுதந்திரம்
இன்னும் ஓர் சுதந்திரம் வேண்டும்!
போதையில் இருந்து இளைஞர்களுக்கு சுதந்திரம் வேண்டும்!
அறியாமையிலிருந்து மாணவர்களுக்கு சுதந்திரம் வேண்டும்!
வறுமையிலிருந்து ஏழைகளுக்கு சுதந்திரம் வேண்டும்!
ஆதிக்க சக்திகளின் பயமுறுத்தத்திலிருந்து
இந்நாட்டின் சிறுபான்மை
மக்களுக்கு சுதந்திரம் வேண்டும்!
நீதியை நிலை நாட்ட நீதிமன்றங்களுக்கு சுதந்திரம் வேண்டும்!
இலஞ்சம் ஊழலிருந்து இந்தியாவுக்கு சுதந்திரம் வேண்டும்!
அநீதிஇழைக்கப்படும் மக்களுக்கு அடக்கு முறையிலிருந்து சுதந்திரம் வேண்டும்!
பாலியல் தொல்லைகளிலிருந்து பெண்ணினத்துக்கு சுதந்திரம் வேண்டும்!
போதைப் பொருள் இல்லா இந்தியாவை வடிவமைப்போம்!
லஞ்சம் ஊழலில்லா தேசதத்தை உருவாக்குவோம்!
அனைவருக்கும் கல்வி பொருளாதாரம் வேலைவாய்ப்பு உறுதிப்படுத்துவோம்!
எல்லோருக்கும் எல்லாம் கிடைக்கச்செய்வோம்!
வாழ்க தேசம்!வளர்க இந்தியா!
மௌலானாமௌலவிஅல்ஹாபிழ்
S.முஹம்மதுஇல்யாஸ்பாகவி
மேட்டுப்பாளையம்.
கருத்துகள்
கருத்துரையிடுக