ஸலவாத்#salawath

🌹தாஹா ரஸூல் ﷺ மீது ஸலவாத் ஓதாமலிருக்கும் துர்பாக்கியவான்கள் நிலை 🌹

அஹ்மது முஸ்தபா ,முஹம்மது முஜ்தபா ,ஈருலக வேந்தர் ஷபீயுல் முத்னிபீன் முஹம்மது ﷺ அவர்கள் நவின்றார்கள் : -

1) அல்லாஹ்வின் திக்ரையும்,பூமான் நபி ﷺ அவர்கள் மீது ஸலவாத் ஓதாமல் மக்கள் கலைந்து சென்ற ஒரு மஜ்ஸில் என்பது ,துர்வாடை வீசும் பிணத்தை விட்டு செல்வதைப் போன்றதாகும்.

📚 இமாம் பைஹகீ رَحِمَهُ ٱللَّٰهُ, ஷுஅபுல் ஈமான்,பாகம் 2,பக்கம் 215,ஹதீஸ் எண்:1570.

2) எவரொருவர் முன் எனது திருநாமம் சொல்லப்பட்டு ,அவர் ஸலவாத் ஓதவில்லையோ அவர் சுவனம் செல்லும் பாதையை விட்டகன்றவர் ஆவார் .

📚 இமாம் தபரானீ رَحِمَهُ ٱللَّٰهُ, அல் முஜம் அல்கபீர் ,பாகம் 3,பக்கம் 128,ஹதீஸ் எண்: 2887.

3) எவரின் முன்னர் எனது திருநாமம் சொல்லப்பட்டும், அவர் ஸலவாத் ஓதவில்லையோ அவர் அவமானப்படுத்தப்படட்டும்.

📚 இமாம் திர்மிதி رَحِمَهُ ٱللَّٰهُ, ஸுனன் திர்மிதி, பாகம் 5,பக்கம் 320,ஹதீஸ் எண்: 3556.

4) எவரின் முன்னர் எனது திருநாமம் சொல்லப்பட்டு அதற்கு ஸலவாத் ஓதவில்லையோ அவர் தான் மனிதர்களில் மிகவும் கஞ்சன்.

📚 இமாம் அஹ்மது பின் ஹன்பல் رضي الله عنه, முஸ்னத் இமாம் அஹ்மது பின் ஹன்பல்,பாகம் 1,பக்கம் 429,ஹதீஸ் எண்: 1736.

5) ஒரு மஜ்லிஸில் ஒன்றுகூடி அல்லாஹ்வின் திக்ரையோ,என் மீது ஸலவாத் ஓதாமல் கலைந்து செல்பவர்கள்,அவர்கள் சுவனத்தில் நுழைந்தாலும் அதற்கு கிடைக்கக்கூடிய பலனைக் கண்டு இறுதித்தீர்ப்பு நாளில் வருத்தத்திலும்,ஏக்கத்தலும் மூழ்கிவிடுவர்.

📚 இமாம் அஹ்மது பின் ஹன்பல் رضي الله عنه, முஸ்னத் இமாம் அஹ்மது பின் ஹன்பல் ,பாகம் 3,பக்கம் 489,ஹதீஸ் எண்: 9972.

6) எவரின் முன்னர் எனது திருநாமம் சொல்லப்பட்டு, அதற்கு ஸலவாத் ஓதவில்லையோ அவர் அடக்குமுறையைக் கையாண்டவர் போலாவர்.

📚இமாம் அப்துர் ரஸ்ஸாக் رضي الله عنه, முஸன்னப் அப்துர் ரஸ்ஸாக்,பாகம் 2,பக்கம் 142,ஹதீஸ் எண்:3126.

7) எவரின் முன்னர் எனது திருநாமம் சொல்லப்பட்டு அதற்கு அவர் ஸலவாத் ஓதவில்லையோ , அந்த நபர் துர்பாக்கியசாலி.

📚 இமாம் நஸாயீ رَحِمَهُ ٱللَّٰهُ, அமல் அல் யவ்ம் வலைலா,பக்கம் 336,ஹதீஸ் எண்: 381

8) ஒரு மஜ்லிஸில் ஒன்றுகூடி அல்லாஹ்வின் திக்ரையோ,என் மீது ஸலவாத் ஓதாமல் கலைந்து செல்பவர்களது ஒன்றுகூடல் இறுதித் தீர்ப்பு நாளில் ஏக்கத்திற்குரிய மஜ்லிஸ் தான். அல்லாஹ் நாடினால் அவர்களை தண்டிப்பான்,இல்லை அவன் நாடினால் மன்னித்து அருள்புரிவான்.

📚 இமாம் திர்மிதி رضي الله عنه ,ஸுனன் திர்மிதி,பாகம் 5,பக்கம் 247,ஹதீஸ் எண்:3391



கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அரபி மதரஸாக்கள்

மவ்லித் ஷரீஃப் ஓதுவோம் வாருங்கள்

கல்வியா?செல்வமா?