திருப்பூர் சிராஜும்முனீர் அரபிக் கல்லூரி
திருப்பூர் மெளலானா மெளலவி அஃப்ழலுல் உலமா அல்ஹாஜ் H.K.முஹம்மது முஸ்தஃபா ஃபாஜில் பாகவி, தலைமைப் பேராசிரியர் ஓய்வு), உஸ்மானியா அரபிக் கல்லூரி, மேலப்பாளையம்,
தமிழகத்தின் தாய்க் கல்லூரியான வேலூர் அல்பாக்கியாத்துஸ் ஸாலிஹாத் மதரஸாவிற்குப் பின் தமிழகத்தின் அனைத்து ஊர்களிலும் பல அரபி மதரஸாக்கள் உருவாகின. எங்கெல்லாம் மதரஸாக்கள் நடைபெறுகிறதோ, அவ்விடங்களின் சுற்றுப்புற வாழ்வாதாரங்கள் செழிப்பாகவும், சிறப்பாகவும் இருப்பதைக் கண்கூடாகக் கண்டு வருகிறோம். எங்களூர் திருப்பூர் பெரியபள்ளிவாசல் மற்றும் காதர்பேட்டை பள்ளிவாசல் மஹல்லாக்கள் இதற்குச் சான்றாக உள்ளன. மதரஸாக்கள் வந்த பின் தான் இவ்விரு மஹல்லா மக்களின் வாழ்வாதாரங்கள் செழிப்பாக உள்ளன. இது நான் கண்கூடாகப் பார்த்து அறிந்து தெரிந்த ஒன்றாகும்.
திருப்பூர் லெப்பை சுன்னத் ஜமாஅத் மஸ்ஜித் (LSJM) என்னும் பெரிய பள்ளிவாசலில் 1966ஆண்டில் (அஸ்ஸிராஜுல் முனீர் மதரஸா துவங்குவதற்கு முன்பாக) மக்தப் ஆசிரியராக பணி புரிந்து வந்த முதுகுளத்தூர் மர்ஹும், ஸலாஹுத்தீன் மிஸ்பாஹி ஹஜ்ரத் அவர்கள் இங்கு ஒரு அரபி மதரஸா தொடங்க வேண்டுமென ஆசைப்பட்டார்கள். அதன் பின்
சித்தயன்கோட்டைமர்ஹூம் அல்ஹாஜ் H.K.ஹுசைன் முஹம்மது பாகவி ஹஜ்ரத் அவர்கள் பெரிய பள்ளிவாசல் இம பணியில் சேர்ந்தார்கள். அவருடைய பணிக் காலத்தில் தனது உஸ்தாத் லால்பேட்டை மர்ஹும். அல்லாமா அமானி ஹஜ்ரத் அவர்களை அழைத்து மதரஸாவை ஆரம்பித்து பாடங்களை துவங்க எண்ணி. அதற்கான ஏற்பாடுகளை முன்னெடுத்தார்கள். மதரஸாவின் முதல் மாணவர்களாக திருப்பூரைச் சேர்ந்த H.K.முஹம்மது முஸ்தஃபா ஆகிய நான். S.G.அஹமதுல்லாஹ், மர்ஹும் A.முஹம்மது இல்யாஸ், தேவராயம்பாளையம் காதர் மைதீன், சித்தரேவு சாஹுல் ஹமீது, பெரியகுளம் நஜ்முத்தீன் ஆகிய 6 மாணவர்கள் சேர்ந்தோம். உடல் நலக் குறைவு காரணமாக
லால்பேட்டை அல்லாமா மர்ஹும். அமானி ஹஜ்ரத் அவர்கள் கலந்து கொள்ள முடியாத காரணத்தால் மேட்டுப்பாளையம் மௌலானா S.K.ஷரஃபுத்தீன் ஜமாலி ஹஜ்ரத் அவர்களைக் கொண்டு மதரஸா ஆரம்பிக்கப்பட்டது.
மர்ஹும். மௌலானா உசேன் முஹம்மது ஹஜ்ரத் அவர்களே முதல்
ஜும்ராவின் அனைத்துப் பாடங்களையும் நல்ல முறையில் ஓதிக் கொடுத்தார்கள். மேற்கண்ட 6 ளவர்களில் மூவர் இடையில் சென்று விட்டதால் நாங்கள் மூவரும் தொடர்ந்தோம். ரத் அவர்களின் துஆ பரக்கத்தால் முற்றம்மது முஸ்தஃபா, முஹம்மது இல்யாஸ் மற்றும் அஹமதுல்லாஹ் ஆகிய நாங்கள் மூவருமே வேலூர் பாக்கியாத்துஸ் ஸாலிஹாத் சென்று மௌலவி ஆலிம் மற்றும் ஃபாஜில் சனதுகளைப் பெற்று முதர்ரிஸ்களாக ஆனோம். அல்ஹம்துலில்லாஹ்
நாங்கள் இங்கு ஓதிக் கொண்டிருந்த காலத்தில் ஜமாஅத்துல் உலமா பத்திரிக்கை ஆசிரியர் மாஹும், அல்லாமா மௌலானா அல்ஹாஜ் அபுல் ஹஸன் சாதுலி ஹஜ்ரத் அவர்கள் நம் மதரஸாவிற்கு வந்துள்ளார்கள். அதன் பின் அவர்கள் எங்கள் மூவரில் யாரை எப்போது கண்டாலும் மும்மூர்த்திகளில் ஒருவரா என்று கேட்டு அடையாளம் கண்டு கொள்வார்கள்.
நாங்கள் முதல் ஜும்ரா ஓதிக் கொண்டிருந்த காலத்தில் தான் திருப்பூர் பெரிய பள்ளிவாசலின் கட்டிட விரிவாக்கப் பணிகள் ஆரம்பமாயின.
மர்ஹும், அல்ஹாஜ் M.முஹம்மது அலி சாஹிப் அடிக்கல் நாட்ட அல்லாமா உசேன் முஹம்மது ஹஜ்ரத் அவர்களின் துஆவுடன் பணிகள் துவங்கின. அதன் பின் அல்லாமா உசேன் முஹம்மது ஹஜ்ரத் அவர்கள் பணியிலிருந்து விலக்கப்பட்டதால், பாடங்கள் நடைபெறுவதில் சுணக்கம் ஏற்பட. அஹமதுல்லாஹ் மேட்டுப்பாளையம் மதரஸாவுக்கு சென்று விட்டார். வேறு இமாம் பணியில் சேராத காரணத்தால் 6 மாதங்கள் பாடங்கள் நடைபெறவில்லை. அதன்பின் ஆயங்குடி மௌலானா, சர்க்கார். தாஜுல் முதவக்கிலீன் அல்ஹாஜ் A முஹம்மது ஃபாரூக் பாக்கவி (நிஜாமிஷா) அவர்கள் இமாமாக நியமிக்கப்பட்டார். நாங்கள் விடுபட்ட பாடங்களை திரும்ப ஓதினோம். உடன் சில
மாணவர்கள் சேர்ந்தார்கள். அவர்களும் இடையில் சென்றுவிட்டதால் நானும். முஹம்மது இல்யாஸ் அவர்களும் மட்டும் தொடர்ந்து ஓதி வந்தோம். மீண்டும் அடுத்த ஆண்டில் சர்க்கார் முஹம்மது ஃபாரூக் ஹஜரத் அவர்களிடம் இரண்டாம் ஓம்ராவைத் தொடர்ந்தோம். இந்த நேரத்தில் பள்ளிவாசலின் கட்டிட விரிவாக்கப் பணிகள் துரிதமானதால் மதரஸா தொடர்ந்து நடைபெறுவதில் தடை ஏற்பட்டது.
நாங்கள் இருவரும் மேட்டுப்பளையம் மதரஸாவிற்கு சென்று விட்டோம்.
அதன் பிறகு 1975 ஆம் ஆண்டில் மதரஸாவை மீண்டும் ஆரம்பிப்பதற்காக அப்போதைய பள்ளிவாசல் நிர்வாகிகளான மர்ஹும். ஹாஜி E அப்துல் கரீம் சாஹிப், மாஹும், ஹாஜி S M அபூபக்கர் சாஹிப், மர்ஹும் ஹாஜி மணி M.அப்துல் வஹாப் சாஹிப், கூரை இல்லம் மர்ஹும் ஹாஜி K.நூர் முஹம்மது சாஹிப், மர்ஹும். ஹாஜி K.முஹம்மது அனீபா சாஹிப் மற்றுமுள்ள நிர்வாகிகள் கோவை மர்ஹும். அல்லாமா மெளலானா அல்ஹாஜ் M.S முஹம்மது பாகவி (பெரிய ஹஜ்ரதி அவர்களை நேரில் அழைத்து ஆலோசனை செய்தனர். ஹஜ்ரத் அவர்களும் மதரஸாவை எந்த முறையில் நடத்துவதென விளக்கமாகக் கூறி சில விதிமுறைகளையும் வகுத்துக் கொடுத்து மதரஸாவை ஆரம்பிக்கலாம் என முடிவுசெய்தனர். ஹஜ்ரத் அவர்களுக்கு உதவியாக மதரஸாவின் மற்றொரு பேராசிரியராக ஏரல் மௌலானா அல்ஹாஜ் M.H.அபுல் ஹஸன் பாகவி ஹஜ்ரத் அவர்கள் நியமிக்கப்பட்டார்கள்.
மதரஸாவிற்கு என்ன பெயர் வைக்கலாம் என்பதை கர்நாடக அமீரே ஷரீஅத் பெங்களூர் மர்ஹும் அல்லாமா அபுஸ்ஸுஊத் பாகவி ஹஜ்ரத் அவர்களிடம் ஆலோசனை கேட்க,அவர்கள்
وَدَاعِيًّا إِلَى اللَّهِ مُنِيرًا بِإِذْنِهِ وَسِرَاجًا
என்ற குர்ஆன் ஆயத்தை மேற்கோள் காட்டி அதையே பெயராக வைக்கும்படி சொன்னார்கள். அவர்களின் ஆலோசனைப் படியே மதரஸா அஸ்ஸிராஜுல் முனீர் என்ற பெயருடன் 1975 ஆம் ஆண்டு மதரஸா துவங்கப்பட்டது. இந்நிகழ்வுகள் அனைத்தும் பெரும்பாலோருக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை என்பதால் அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டுமென்பதற்காகவே இவைகளை இங்கு கோடிட்டுக் காட்டியிருக்கிறேன்
பல்வேறு சிரமங்களுக்கிடையில் உலமாப் பெருமக்கள் மற்றும் நிர்வாகப் பெருமக்களின் பெரும் முயற்சியல் அன்று துவங்கப்பட்ட அஸ்ஸிராஜுல் முனீர் அரபிக் கல்லூரி இந்த 2024-ஆம் ஆண்டில் 50-வது ஆண்டு பொன் விழா காண்கின்ற இந்த தருணத்தில் இந்த அடியேனும் கலந்து கொள்ளச் செய்த வல்ல ரஹ்மானுக்கே எல்லாப் புகழும்.
அல்ஹம்துலில்லாஹ்! பொன் விழாக் காணும் இம்மாபெரும் நிறுவனத்தை உருவாக்கிய மறைந்த முன்னோர்கள். மதரஸாவின் வளர்ச்சிக்காகப் பாடுபட்ட மறைந்த பேராசிரியப் பெருமக்கள் அனைவரையும் ரஹ்மான் பொருந்திக் கொண்டு அவர்களின் மண்ணறைகளை சுவர்க்கப் பூங்காவாக ஆக்கி அருள் புரிவானாக! மேலும் இம் மாபெரும் நிறுவனம் கியாமத் நாள் வரை நிலைத்திருந்து மென்மேலும் பல்லாயிரக்கணக்கான ஆலிம் பெருமக்களை உருவாக்கி சிறந்திட வல்ல ரஹ்மான் நல்லருள் புரிவானாக! என்று துஆச் செய்கிறேன்.ஆமீன். ஆமீன்! யாரப்பல் ஆலமீன்!
இக்கட்டுரை..
அஸ்ஸிராஜுல் முனீர்
50 ஆம் ஆண்டு நினைவு மலரில் இருந்து..
கருத்துகள்
கருத்துரையிடுக