#வஹ்ஹாபி #மத்ஹப் #குழப்பவாதிகள் #tntj #jaac #இயக்கங்கள்
வஹ்ஹாபிகளிடம் சில கேள்விகள்...
1. ஜுமுஆவிற்கு இரட்டை பாங்கு சொல்வது பித்அத் என்றால் அதை உருவாக்கி அறிமுகம் செய்து அனுமதித்த உஸ்மான் ரலியல்லாஹு அன்ஹு அவர்களின் நிலை உங்கள் பார்வையில் என்ன....?
2. தராவீஹ் தொழுகையை ஜமாத் நடத்தி தொழும் படி ஏவியதோடு அந்த தொழுகையை 20 ரக்அத்துக்களாக தொழுவதற்கு ஆணையிட்ட உமர் ரலியல்லாஹு அன்ஹு அவர்களின் நிலை உங்கள் பார்வையில் என்ன..?
3. நபி அவர்களின் காலத்திற்கு பின்னால் வந்த அனைத்துமே பித்அத் தான் என்றால் குர்ஆனை ஒருங்கிணைத்து இரண்டு அட்டைக்கு நடுவில் நூல் வடிவில் அமைப்பதற்கு அனுமதி கொடுத்த கலீபா அபூபக்கர் ரலியல்லாஹு அன்ஹு அவர்களின் நிலை உங்கள் பார்வையில் என்ன..?
3. எனது ஹதீஸ்களை எழுத வேண்டாம் என்று நேரடியாக நபி அவர்கள் தம் தோழர்களுக்கு தடை விதித்த நிலையில்... அனைத்து நபி மொழிகளையும் எழுதி சமுதாயத்திற்கு கொடுத்த ஹதீஸ்களை வல்லுனர்கள் அனைவரின் நிலை உங்கள் பார்வையில் என்ன...?
4. மத்ஹப்களை பின்பற்றுவது வழிகேடு என்பது உங்களின் வாதம் என்றால் அந்த மத்ஹப்களை உருவாக்கிய நான்கு பரிசுத்த இமாம்களின் நிலை உங்கள் பார்வையில் என்ன..?
5. நபித்தோழர்களை மார்க்க விஷயத்தில் பின்பற்றக் கூடாது என்பது உங்களுடைய வாதமாக இருக்கிறதல்லவா..? அப்படியானால் சஹாபாக்களை பின்பற்றும்படி நபி அவர்கள் கூறிய பல்வேறு நபி மொழிகள் இருக்கிறதே உங்கள் பார்வையில் அந்த நபி மொழிகளின் நிலை என்ன...?
6. நபி அவர்கள் எல்லா நிலைகளிலும் எல்லா காலங்களிலும் பரிசுத்தமானவர்கள் என்று அல்லாஹ் கூறியிருக்க, ஏகத்துவம் என்ற மாத இதழில் முடிகளை கலைந்து போட்டு உட்கார்ந்திருக்கும் கன்னிப் பெண்ணின் மடியில் கண்மணி நாயகம் அவர்கள் காமத்தோடு படுத்து கிடப்பதை போன்று ஒரு கார்டூணை வரைந்தீர்களே உங்களின் நிலை உங்கள் பார்வையில் என்ன...?
7. அல்லாஹ் தன் அருள் மறையில்
நபியவர்கள் மக்களை பக்குவப்படுத்தினார்கள் என்று அல்லாஹ் கூறியிருக்க,
நபியவர்கள் தன் தோழர்களையே பக்குவப்படுத்தவில்லை என்று ஒற்றுமை என்ற மாத இதழில் எழுதிய தவ்ஹீத் ஜமாத் உடைய நிலை உங்கள் பார்வையில் என்ன..?
8. நபி அவர்கள் வாழ்ந்த காலத்தில் அப்துல்லாஹ் இப்னு உபை இப்னு சலூல் என்ற முனாஃபிக் கட்டிய போட்டி பள்ளிவாசலை இடித்து தள்ளினார்கள் நம்பியவர்கள்....
அப்படியானால் இன்றும் நீங்கள் ஊருக்கு ஊர் போட்டி பள்ளிவாசலை கட்டி இருக்கிறீர்களே..? போட்டி பள்ளிவாசல் கட்டிய உங்களின் நிலை உங்கள் பார்வையில் என்ன..?
9. எனது தோழர்களை ஏசாதீர்கள் என்று நபி அவர்கள் கூறியிருக்க..,
நபி தோழர்களை சகட்டுமேனிக்கு ஏசி பேசும் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்தின் நிலை உங்கள் பார்வையில் என்ன..?
இந்த கேள்விகளுக்கெல்லாம் பதில் சொல்ல உங்களில் ஒருவனுக்கேனும் திராணி இருந்தால் பதில் சொல்லி விட்டு மாநாடு நடத்தட்டும்..
பதிவு:
மௌலவி எம்.சுலைமான்
மாநில அமைப்பாளர்
தமிழ்நாடு சுன்னத் ஜமாஅத்
.... நன்றி
கருத்துகள்
கருத்துரையிடுக