பேச்சு
*🕌தாருல் உலூம் யூசுஃபிய்யா ஜும்ஆ பயான் குறிப்புரை🕌*
பகுதி 1️⃣
*அல்குர்ஆன் இயம்பும் பேச்சொழுக்கங்கள்*
*1)நாம் பிறருக்கு சொல்லக்கூடிய விஷயங்களை முதலில் நாம் கடைபிடித்து நடக்க வேண்டாம்.இல்லையெனில் நாம் சொல்லும் சொல்லுக்கு எவ்வித மதிப்பும் இருக்காது.அது பிறர் மனதில் எந்த பிரதிபலிப்பையும் உண்டாக்காது.*
*2)ஒரு விஷயத்தை தீர ஆராய்ந்து அறிந்த பின்தான் பிறரிடம் சொல்ல வேண்டும்.*
*3)பிறர் மனம் விரும்பும் விதத்தில் நம்முடைய சொல் அமைய வேண்டும்.பிறர் மனம் வெறுக்கள் பேச்சுக்களை பேசக் கூடாது.*
*5)கேட்பவர்களுக்கு புரியும் விதத்தில் தெளிவாக நம்முடைய பேச்சு அமைய வேண்டும்.*
*6)பிறரிடம் நளினமான முறையில் பேச வேண்டும்.கடினமான முறையில் பேசி விடக் கூடாது.*
*7)பிறரிடம் கண்ணியமான முறையில் பேச வேண்டும்.*
*8)செயல்படுத்த முடியுமான விஷயங்களை பேச வேண்டும்.*
*9)குறிப்பிட்ட ஒரு கூட்டத்தாரிடம் மட்டுமின்றி அனைவரிடத்திலும் நன்முறையில் பேச வேண்டும்.*
*10)பேசுவதில் அழகிய தொனியை தேர்ந்தெடுத்துக் கொள்ள வேண்டும்.நல்ல விஷயங்களை கூட கடுமையான தொனியில் பேசினால் எவரும் ஏற்கமாட்டார்கள்.*
*11)வீணான,பொய்யான பேச்சுக்களை தவிர்த்துக் கொள்ள வேண்டும்.*
*1️⃣முதல் ஒழுக்கம்*
*1)நாம் பிறருக்கு சொல்லக் கூடிய விஷயங்களை முதலில் நாம் நம்முடைய வாழ்க்கையில் கடைபிடிக்க வேண்டும்.இல்லையெனில் நாம் கூறும் சொற்களுக்கு பிறரிடத்தில் எவ்வித மதிப்பும் இருக்காது.*
*இதைப் பற்றி அல்குர்ஆனில் அல்லாஹ் இவ்வாறு எச்சரிக்கை செய்கிறான்:*
يٰۤاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوْا لِمَ تَقُوْلُوْنَ مَا لَا تَفْعَلُوْنَ
ஈமான் கொண்டவர்களே! நீங்கள் செய்யாததை ஏன் சொல்கிறீர்கள்?
(அல்குர்ஆன் : 61:2)
كَبُرَ مَقْتًا عِنْدَ اللّٰهِ اَنْ تَقُوْلُوْا مَا لَا تَفْعَلُوْنَ
நீங்கள் செய்யாததை நீங்கள் கூறுவது அல்லாஹ்விடம் பெரிதும் வெறுப்புடையதாக இருக்கிறது.
(அல்குர்ஆன் : 61:3)
اَتَاْمُرُوْنَ النَّاسَ بِالْبِرِّ وَتَنْسَوْنَ اَنْفُسَكُمْ وَاَنْتُمْ تَتْلُوْنَ الْكِتٰبَ اَفَلَا تَعْقِلُوْنَ
நீங்கள் வேதத்தையும் ஓதிக் கொண்டே, (மற்ற) மனிதர்களை நன்மை செய்யுமாறு ஏவி, தங்களையே மறந்து விடுகிறீர்களா? நீங்கள் சிந்தித்துப் புரிந்து கொள்ள வேண்டாமா?
(அல்குர்ஆன் : 2:44)
*ஹதீஸ்களில் கூறப்படும் எச்சரிக்கைகள்:*
மிஃராஜ் இரவில் ஒரு கூட்டத்தாரை நான் கடந்து சென்றபோது, அவர்களுடைய உதடுகள் நரக நெருப்பாலான கத்தரிக்கோல்களால் கத்தரிக்கப்பட்டுக் கொண்டிருந்தன. நான் ஹஜ்ரத் ஜிப்ரஈல் (அலை) அவர்களிடம், இவர்கள் யார்?'' என்று வினவினேன். இவர்கள் உபதேசம் செய்பவர்கள். இவர்கள் மற்றவர்களுக்கு நன்மை செய்யும்படி ஏவிக்கொண்டிருந்தார்கள். மேலும் தன்னை மறந்தவர்களாக (செயல்படாமல்) இருந்தனர். இவர்கள் அல்லாஹுதஆலாவின் வேதத்தை ஓதி வந்தனர். இவர்கள் விளங்கியிருக்க வேண்டாமா?'' என்று ஹஜ்ரத் ஜிப்ரஈல் (அலை) அவர்கள் சொன்னதை நபி (ஸல்) அவர்கள் கூறியதாக ஹஜ்ரத் அனஸ் இப்னு மாலிக் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
(முஸ்னத் அஹ்மத்)
இறுதித் தீர்ப்பு நாளன்று ஒரு மனிதனைக் கொண்டு வரப்படும், அவனை நரகில் வீசப்படும், அதன் காரணமாக அவனுடைய குடல்கள் வெளியே வந்துவிடும். திருகையை இயக்கும் கழுதை திருகையைச் சுற்றி வருவது போல் அவன் அந்தக் குடல்களின் நாலாபுறமும் சுற்றி வருவான். (மாவரைக்கும் திருகையை இயக்குவதற்காக எவ்வாறு பிராணியைச் சுற்றவைக்கப்படுகிறதோ அவ்வாறே இந்த மனிதன் தன் குடல்களின் நாலாபுறத்திலும் சுற்றிக் கொண்டிருப்பான்) நரகவாசிகள் அவனை நலாபுறத்திலும் சூழ்ந்து கொண்டு, நண்பனே, நீ நல்ல காரியங்களை ஏவிக்கொண்டும், தீயவைகளைவிட்டும் எங்களைத் தடுத்துக் கொண்டிருந்தாயே உனக்கென்ன ஆனது?'' என்று அவனிடம் கேட்பர். நான் உங்களுக்கு நல்ல காரியங்களை ஏவிக்கொண்டிருந்தேன். ஆனால், நான் அதன்படி நடக்காமலிருந்தேன், தீயவைகளை விட்டுத் தடுத்து வந்தேன். ஆனால், நான் அதைச் செய்து கொண்டிருந்தேன்' எனச் சொல்வான்'' என்று ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்கள் கூறத் தாம் கேட்டதாக ஹஜ்ரத் உஸாமத்துப்னுஸைத் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
(புகாரி)
அல்லாஹ்வின் பக்கமும்,அமல்களின் பக்கமும் பிறரை அழைக்கும் அழைப்பாளர்கள் முதலில் அதன்படி செயல்படுபவர்களாக இருக்க வேண்டும்.எதை விட்டும் தவிர்ந்து கொள்ளுமாறு மக்களை ஏவுகிறார்களோ அதை விட்டும் முதலில் அழைப்பாளர்கள் தவிர்ந்து இருக்க வேண்டும்.அப்பொழுதுதான் மக்களை அவ்விஷயங்களை ஏற்றுக் கொள்வார்கள்.
*நபியவர்களின் முன்மாதிரி*
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தங்களின் சொல்லின் படி அமல் செய்பவர்களாக இருந்தார்கள்.
வணக்கவியல்,குடும்பவியல்,அரசியல்,பண்பியல் என அனைத்து துறைகளிலும் மக்களுக்கு நபியவர்களை அல்லாஹ் முன்மாதியாக ஆக்கினான்.
لَقَدْ كَانَ لَكُمْ فِىْ رَسُوْلِ اللّٰهِ اُسْوَةٌ حَسَنَةٌ لِّمَنْ كَانَ يَرْجُوا اللّٰهَ وَالْيَوْمَ الْاٰخِرَ وَذَكَرَ اللّٰهَ كَثِيْرًا ؕ
அல்லாஹ்வின் மீதும், இறுதி நாளின் மீதும் ஆதரவு வைத்து, அல்லாஹ்வை அதிகம் தியானிப்போருக்கு நிச்சயமாக அல்லாஹ்வின் தூதரிடம் ஓர் அழகிய முன்மாதிரி உங்களுக்கு இருக்கிறது.
(அல்குர்ஆன் : 33:21)
وَاِنَّكَ لَعَلٰى خُلُقٍ عَظِيْمٍ
மேலும், (நபியே) நிச்சயமாக நீர் மிக உயர்ந்த மகத்தான நற்குணம் உடையவராக இருக்கின்றீர்.
(அல்குர்ஆன் : 68:4)
பெற்றோர்கள் தங்களின் பிள்ளைகளுக்கு கூறும் அறிவுரைகளை முதலில் அவர்கள் கடைபிடிப்பவர்களாக இருக்க வேண்டும்.ஏனெனில் பிள்ளைகள் எப்பொழுதும் சொற்களை விட செயல்களையே பின்பற்றி நடப்பார்கள்.
ஆசிரியர்கள் மாணவர்களுக்கு முன்னுதாரனமாக திகழ வேண்டும்.
*2⃣இரண்டாம் ஒழுக்கம்*
*2)ஒரு விஷயத்தை தீர விசாரித்து அறிந்த பின் பிறரிடம் கூற வேண்டும்.*
*ஆதாரமற்ற,பொய்யான தகவல்களை பரப்புவதின் மூலம் தனிநபர் மட்டுமல்ல ஒரு சமூகமே நஷ்டத்தை சந்திக்க நேரிடும்.*
*செய்திகளை ஊர்ஜிபடுத்தாமல் பிறரிடம் சொல்பவர்களை ஆல்குர்ஆன் கடுமையாக எச்சரிக்கை செய்கிறது.*
يٰۤاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوْۤا اِنْ جَآءَكُمْ فَاسِقٌ بِنَبَاٍ فَتَبَيَّنُوْۤا اَنْ تُصِيْبُوْا قَوْمًا بِجَهَالَةٍ فَتُصْبِحُوْا عَلٰى مَا فَعَلْتُمْ نٰدِمِيْنَ
முஃமின்களே! ஃபாஸிக் (தீயவன்) எவனும் உங்களிடம் ஒரு செய்தியைக் கொண்டு வந்தால், அதைத் தீர்க்க விசாரித்துக் கொள்ளுங்கள்; (இல்லையேல்) அறியாமையினால் (குற்ற மற்ற) ஒரு சமூகத்தாருக்கு நீங்கள் தீங்கு செய்து விடலாம்; பின்னர் நீங்கள் செய்தவை பற்றி நீங்களே கைசேதப் படுபவர்களாக (கவலைப்படுபவர்களாக) ஆவீர்கள்.
(அல்குர்ஆன் : 49:6)
ஒருவன் தான் கேட்ட செய்திகள் அனைத்தையும் (தீர விசாரிக்காமல்) பிறருக்குச் சொல்வது ஒன்றே அவன் பொய்யன் என்பதற்குப் போதுமானதாகும்'' என்று ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்கள் கூறியதாக ஹஜ்ரத் ஹஃப்ஸுப்னு ஆஸிம் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
(முஸ்லிம்)
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: அல்லாஹ் மூன்று செயல்களை வெறுக்கிறான். ‘இவ்வாறு சொல்லப்பட்டது; அவர் சொன்னார்’ (என ஆதாரமின்றிப் பேசுவது), பொருள்களை வீணாக்குவதும், அதிகமாக (பிறரிடம்) யாசிப்பதுமாகும்.
(நூல்: புகாரி-1477)
*இன்று சமூக வலைதளங்களை பயன்படுத்துபவர் அனைவரும் எந்த ஒரு தகவலையும் ஊர்ஜிபடுத்தாமல்,எந்த ஒரு நபரைப் பற்றியும் சரியான ஆதாரமில்லாமல் பொய்யான தகவலை பிறருக்கு ஷேர் செய்து விடக் கூடாது.*
*ஹஜ்ரத் ஆயிஷா ரலியல்லாஹு அன்ஹா அவர்கள் இட்டுக்கட்டப்பட்ட சம்பவத்தில் முனாஃபிக்குகளின் தவறான வதந்திகளை நம்பி சில முஸ்லிம்களும் தவறாக பேசிவிட்டார்கள்.இவர்களை எச்சரித்து அல்லாஹ் வசனங்களை இறக்கி வைத்தான்.*
اِذْ تَلَـقَّوْنَهٗ بِاَ لْسِنَتِكُمْ وَتَقُوْلُوْنَ بِاَ فْوَاهِكُمْ مَّا لَـيْسَ لَـكُمْ بِهٖ عِلْمٌ وَّتَحْسَبُوْنَهٗ هَيِّنًا ۖ وَّهُوَ عِنْدَ اللّٰهِ عَظِيْمٌ
இப்பழியை (ஒருவரிடமிருந்து ஒருவராக) உங்கள் நாவுகளால் எடுத்து(ச் சொல்லி)க் கொண்டு, உங்களுக்குத் (திட்டமாக) அறிவில்லாத ஒன்றைப் பற்றி உங்கள் வாய்களால் கூறித் திரிகின்றீர்கள்; இன்னும் இதை நீங்கள் இலேசானதாகவும் எண்ணி விட்டீர்கள். ஆனால் அது அல்லாஹ்விடத்தில் மிகப்பெரிய (பாவமான)தாக இருக்கும்.
(அல்குர்ஆன் : 24:15)
وَ لَوْلَاۤ اِذْ سَمِعْتُمُوْهُ قُلْتُمْ مَّا يَكُوْنُ لَـنَاۤ اَنْ نَّـتَكَلَّمَ بِهٰذَ ا ۖ سُبْحٰنَكَ هٰذَا بُهْتَانٌ عَظِيْمٌ
இன்னும் இதை நீங்கள் செவியேற்ற போது, “இதைப் பற்றி நாம் பேசுவது நமக்கு(த் தகுதி) இல்லை; (நாயனே!) நீயே தூயவன்; இது பெரும் பழியாகும்” என்று நீங்கள் கூறியிருக்கலாகாதா?
(அல்குர்ஆன் : 24:16)
*சுலைமான் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் ஹுத்ஹுத் பறவையை தேடிய பொழுது "அப்பறவை அங்கு வந்து அவர்களிடம் உறுதியான தகவலை கொண்டு வந்துள்ளேன்"என்று கூறியது.*
فَمَكَثَ غَيْرَ بَعِيْدٍ فَقَالَ اَحَطْتُّ بِمَا لَمْ تُحِطْ بِهٖ وَ جِئْتُكَ مِنْ سَبَاٍۢ بِنَبَاٍ يَّقِيْنٍ
(இவ்வாறு கூறி) சிறிது நேரம் தாமதித்தார்; அதற்குள் (ஹுத்ஹுத் வந்து) கூறிற்று: “தாங்கள் அறியாத ஒரு விஷயத்தை நான் அறிந்து கொண்டேன். “ஸபா”விலிருந்து உம்மிடம் உறுதியான செய்தியைக் கொண்டு வந்திருக்கிறேன்.”
(அல்குர்ஆன் : 27:22)
*நாம் பிறரிடம் கூறும் செய்திகள் உறுதியானதாக,ஊர்ஜீதப்படுத்தப்பட்ட தகவலாக இருக்க வேண்டுமென இவ்வசனம் நமக்கு சுட்டிக் காட்டுகிறது.*
*மிக முக்கியமாக, இஸ்லாமிய மார்க்கம் சார்ந்த விஷயங்களில் ஆதாரமற்ற ஹதீஸ்களையும்,சம்பவங்களையும் நாம் பிறரிடம் கூறுவதை விட்டும் தவிர்ந்து கொள்ள வேண்டும்.*
*என் மீது வேண்டுமென்றே இட்டுக்கட்டுபவன் நரகத்தில் தன்னுடைய இருப்பிடத்தை அமைத்துக் கொள்ளட்டும்’’ என்று நபி(ஸல்) அவர்கள் கூறியதால்தான் உங்களுக்கு நான் அதிகமான நபிமொழிகளை எடுத்துரைக்காமல் என்னைத் தடுத்துக் கொள்கிறேன்’’ என அனஸ்(ரலி) அறிவித்தார்.*
(நூல்: ஸஹீஹுல் புஹாரி – 108)
*3️⃣மூன்றாவது ஒழுக்கம்*
*3)பிறர் மனம் விரும்பும் விதத்தில் நம்முடைய சொற்கள் அமைய வேண்டும்.பிறர் மனம் வெறுக்கும் பேச்சுக்களை பேசக் கூடாது.*
இனிய வாரத்தைகள் பிறரின் உள்ளங்களை கவர்ந்திழுக்கும்,மனங்களை சந்தோஷப்படுத்தும்,பிறரின் கவலைகளை போக்கும்,வழிதவறியவருக்கு நேர்வழியை காட்டும்,அறியாதவனுக்கு கல்வியை கற்றுத்தரும்,உள்ளங்களை நிம்மதிபடுத்தும்,விரோதியையும் நண்பனாக்கும்,சிரமதில் மூழ்கியிருப்பவருக்கு ஆறுதலை கொடுக்கும்.
*எனவே தான் இஸ்லாம் அனைத்து நிலைகளிலும் பிறரிடம் இனிய வார்த்தைகளை பேசுமாறு கூறுகிறது.*
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்:
*இனிய சொற்களும் தர்மமாகும்.(புகாரி )*
*பொருள் தேவையுள்ளவருக்கு அப்பொருளை கொடுப்பதின் மூலம் உள்ளத்தில் மகிழ்ச்சி உண்டாகிறது.அதேபோன்று இனிய சொற்களும் பிறரின் மனதை மகிழ்ச்சியடைசெய்கிறது என இப்னு பதால் ரஹிமஹுல்லாஹ் இந்த ஹதீஸிற்கு விளக்கமளிக்கிறார்கள்.
இனிய சொற்களின் மூலமாக பல நபர்களின் வாழ்க்கை மாற்றமடைந்துள்ளது. மாற்றத்தை பெற்ற அந்நபர்களின் வாழ்க்கை பல பேருக்கு முன்னுதாரனமாகவும் ஆகியுள்ளது.அந்த சாதனையாளர்களின் வரலாறும் இன்றளவும் மக்களின் உள்ளங்களில் இடம் பிடித்துள்ளது..
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ”பறவை சகுனம் என்பது கிடையாது. சகுனங்களில் சிறந்தது நற்குறியே ஆகும்” என்று சொன்னார்கள். மக்கள், ”நற்குறி என்பதென்ன?” என்று கேட்டார்கள். நபி (ஸல்) அவர்கள், ”அது நீங்கள் செவியுறும் நல்ல (இனிய) சொல்லாகும்” என்று பதிலளித்தார்கள்.
(நூல்: புகாரி-5754)
முஃமினானவர் வீணான பேச்சுக்களை விட்டும் தவிர்ந்திருப்பார்.தனக்கும்,பிறருக்கும் பயனளிக்கும் பேச்சையே பேசுவார்.எனவே தான் நல்ல வார்த்தை ஈமானின் அடையாளமாக கூறப்பட்டுள்ளது.
அல்லாஹுதஆலாவின் மீதும், மறுமை நாளின் மீதும் எவர் ஈமான் கொண்டாரோ அவர் நல்லதைப் பேசட்டும் அல்லது மௌனமாக இருக்கட்டும்'' என்று ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்கள் கூறியதாக ஹஜ்ரத் அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
(புகாரி)
இமாம் நவவி ரஹ்மதுல்லாஹி அலைஹி அவர்கள் கூறுகிறார்கள்:பேசுவதற்கு முன்பாக ஒருவர் சிந்தித்து பேச வேண்டும்.தன்னுடைய பேச்சில் எதாவது நலவு ஏற்படுமாயின் பேச வேண்டும்.இல்லையெனில் மௌனமாக இருந்து கொள்ள வேண்டும்.
நல்ல பேச்சுக்களைப் பேசி இம்மை, மறுமையில் அதன் பலனை அடைகின்ற, அல்லது மௌனமாக இருந்து, நாவின் கெடுதிகளைவிட்டு தன்னைத் தற்காத்துக்கொள்ளும் அடியான் மீது அல்லாஹுதஆலா அருள் புரிவானாக!'' என்று ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்கள் கூறிய ஹதீஸ் எங்களுக்குக் கிடைத்துள்ளது' என ஹஜ்ரத் ஹஸன் (ரஹ்) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
(பைஹகி)
நல்ல வார்த்தைகள் பேசுபவருக்கு இவ்வுலகில் பயன் ஏற்படுவதைப் போன்று மறுமையிலும் நரகிலிருந்து பாதுகாப்பு கிடைக்கிறது.அல்லாஹ்வின் கிருபையால் மறுமையில் அவர் சுவர்க்கம் நுழையவும் அவ்வார்த்தைகள் காரணமாக அமைகின்றன.
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
பேரீச்சம் பழத்தின் ஒரு துண்டைத் தர்மம் செய்தேனும் நரகத்திலிருந்து உங்களைக் காப்பாற்றிக் கொள்ளுங்கள். அதுவும் இல்லையானால் இனிய சொல்லைக் கொண்டாவது (காப்பாற்றிக் கொள்ளுங்கள்)
நூல்: புகாரி-6023
நான் நபி(ஸல்) அவர்களிடம் வந்து அல்லாஹ்வின் தூதரே! உங்களை நான் கண்டால் எனது உள்ளம் மகிழ்சியடைகிறது எனது கண் குளிர்ச்சியடைகிறது எனக்கு அனைத்து பொருட்களைப் பற்றியும் சொல்லுங்கள் என்றேன். அதற்கு அவர்கள் அனைத்தும் நீரிலிருந்து படைக்கப்பட்டுள்ளது என்று கூறினார்கள். எந்த காரியத்தை நான் செய்தால் சொர்க்கத்திற்குச் செல்வேனோ அப்படிப்பட்ட ஒரு காரியத்தை எனக்கு கற்றுக்கொடுங்கள் என்று கூறினேன்.சலாத்தைப் பரப்பு. நல்ல பேச்சைப் பேசு. உறவுகளை இணைத்து வாழ். மக்கள் உறங்கும் போது இரவில் நின்று வணங்கு. சாந்தியுடன் சொர்க்கத்தில் நுழைவாய் என்று கூறினார்கள்.
நூல் : அஹ்மத் (7591)
நல்ல வாரத்தைகள் உள்ளங்களில் மகிழ்ச்சியை உண்டாக்குவதைப் போன்று தீய வாரத்தைகள் உள்ளஙகளில் வெறுப்பை உண்டாக்குகின்றன.
பெற்றோர்களின் தீய வாரத்தைகள் பிள்ளைகள் மனதில் அவர்களைப் பற்றிய வெறுப்பை உண்டாக்கி விடுகின்றன.
ஆசிரியர்களின் தீய வார்த்தைகளின் மாணவர்களின் உள்ளங்களில் வெறுப்பு உண்டாகி விடுகிறது.
இவ்வாறு எவரெல்லாம் தீய வாரத்தைகளை பயன்படுத்துவார்களோ அவர்களை விட்டும் மக்கள் விரண்டோடிவிடுவார்கள்.
அல்லாஹ்வுடைய ரஹ்மத்தின் காரணமாகவே நீர் அவர்களிடம் மென்மையாக (கனிவாக) நடந்து கொள்கிறீர்; (சொல்லில்) நீர் கடுகடுப்பானவராகவும், கடின சித்தமுடையவராகவும் இருந்திருப்பீரானால், அவர்கள் உம் சமூகத்தை விட்டும் ஓடிப்போயிருப்பார்கள்; எனவே அவர்களின் (பிழைகளை) அலட்சியப்படுத்திவிடுவீராக; அவ்வாறே அவர்களுக்காக மன்னிப்புத் தேடுவீராக; தவிர, சகல காரியங்களிலும் அவர்களுடன் கலந்தாலோசனை செய்யும்; பின்னர் (அவை பற்றி) நீர் முடிவு செய்து விட்டால் அல்லாஹ்வின் மீதே பொறுப்பேற்படுத்துவீராக! - நிச்சயமாக அல்லாஹ் தன் மீது பொறுப்பேற்படுத்துவோரை நேசிக்கின்றான்.
(அல்குர்ஆன் : 3:159)
நபி (ஸல்) அவர்கள் இயற்கையாகவோ, செயற்கையாகவோ கெட்ட வார்த்தை பேசுபவர்களாக இருந்ததில்லை. ”உங்களில் சிறந்தவர் உங்களில் நற்குணமுடையவரே!” என்று அவர்கள் கூறினார்கள்.
(நூல்: புகாரி-3559)
*அருவருப்பான பேச்சை பேசுபவரே*
*மக்களில் தீயவர்*
ஒரு மனிதர் (எங்கள் வீட்டுக்குள் வர) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் அனுமதி கேட்டார். அப்போது நபி (ஸல்) அவர்கள், ”அவரை உள்ளே வரச் சொல்லுங்கள். அந்தக் கூட்டத்தாரிலேயே (இவர்) மோசமானவர்” என்று சொன்னார்கள். உள்ளே அவர் வந்த போது (எல்லோரிடமும் பேசுவது போல்) அவரிடம் கனிவாகவே பேசினார்கள். (அவர் பேசி விட்டு எழுந்து சென்றதும்) நான், ”அல்லாஹ்வின் தூதரே! நீங்கள் (அவரைக் கண்டதும்) ஒன்று சொன்னீர்கள்.
பிறகு அவரிடமே கனிவாகப் பேசினீர்களே!” என்று கேட்டேன். நபி (ஸல்) அவர்கள், ”ஆயிஷா! யாருடைய அருவருப்பான பேச்சுகளிருந்து (தங்களைத்) தற்காத்துக் கொள்ள அவரை விட்டு மக்கள் ஒதுங்குகிறார்களோ அவரே மக்களில் தீயவர் ஆவார்” (அருவருப்பான பேச்சுகள் பேசும் அவர் குறித்து எச்சரிக்கை செய்யவே அவரைப் பற்றி அவ்வாறு சொன்னேன்) என்றார்கள்.
(நூல்: புகாரி-6054)
*4️⃣நான்காவது ஒழுக்கம்*
*கேட்பவர்களுக்கு புரியும் விதத்தில் நம்முடைய பேச்சு அமைய வேண்டும்.*
*நபியவர்களின் பேச்சு*
*மக்கள் தனது பேச்சை விளங்கிக் கொள்ள வேண்டும் என ஒரு விஷயத்தை திரும்பத் திருப்ப பேசுவார்கள். “தனது பேச்சை புரிந்து கொள்வதற்காக நபியவர்கள் ஒரு வார்த்தையை மூன்று முறை மீட்டி மீட்டி பேசுபவர்களாக இருந்தார்கள்” என அனஸ் (ரழி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்.*
(நூல் திர்மிதி)
*கேட்பவர்களுக்குத் தோதுவாக நம்முடைய பேச்சு அமைந்திருக்க வேண்டும்.*
*கேட்பவர்கள் பெரியவர்களாக இருப்பின் அதற்கு தோதுவாக பேச வேண்டும்.கேட்பவர்கள் சிறியவர்களாக இருப்பின் அதற்கு தோதுவாக பேச வேண்டும்.*
*ஹஜ்ரத் அலி ரலியல்லாஹே அன்ஹு அவர்கள் கூறுவார்கள்:*
*மக்கள் எதை அறிந்திறிக்கிறார்களோ அதை மட்டும் நீங்கள் அவர்களிடம் பேசுங்கள்.அல்லாஹ்வையும்,அவனுடைய ரஸுலையும் பொய்படுத்துவதை நீங்கள் விரும்புகிறீர்களா!*
(புகாரி)
*இப்னு மஸ்ஊத் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறுவார்கள்:மக்களின் அறிவிற்கு எட்டாத விஷயங்களை நான் பேச மாட்டான்.காரணம்,அதன் மூலம் அவர்களிடையே குழப்பம் ஏற்பட வாய்ப்பு உள்ளது.*
(முஸ்லிம்)
*ஆசிரியர் மாணவர்களின் அறிவுத்திறனுக்கு ஏற்றவாறு பாடம் நடத்த வேண்டும்.*
*இமாம் ஷாஃபியி ரஹ்மதுல்லாஹி அலைஹி அவர்கள் தங்களின் ஆசிரியரைப் பற்றி இவ்வாறு கூறுகிறார்கள்:*
*முஹம்மது இப்னு சைபானி ரஹ்மதுல்லாஹி அலைஹி அவர்கள் தங்களின் அறிவாற்றலுக்குத் தோதுவாக பாடம் நடத்தியிருந்தால் எங்களுக்கு எதுவும் விளங்கியிருக்காது.எனினும் அவர்கள் மாணவர்களாகிய எங்களுடைய அறிவாற்றலுக்குத் தோதுவாக பாடம் நடத்துவார்கள்.எனவே நாங்கள் விஷயங்களை எளிதாக புரிந்து கொள்வோம்.*
*(الاداب الشرعية -ابن مفلح 2/244)*
கருத்துகள்
கருத்துரையிடுக