தொப்பி
தப்பியும் தொப்பியை இழக்காதீர்கள்
••••••••••••••••••••••••••••••••••
இன்று பஜார் வீதியில் வினாயகர் சிலை ஊர்வலம்
சாலையோரம் நிறுத்தப்பட்டுள்ள வாகனங்களை அப்புறப்படுத்தச் சொல்லி காவல்துறை முன்னறிவிப்பு செய்துகொண்டு வந்தது
ஏய் சீக்கிரம் எடு எடுய்யா கொஞ்சம் எடுடாவும் வந்தது
அங்கே எனது வாகனமும் நின்றது
பாய் சீக்கிரம் எடுங்க !
எடு
எடுய்யா
எடுடா
இவைகளுக்கு மத்தியில்
எடுங்க பாய்
இது எனது தலையை அலங்கரிக்கும் தொப்பியினால்
எனக்கு கிடைத்த கண்ணியம் !
தொப்பி புண்ணியமா
என்று சிலர் விவாதிக்கிறீர்கள்
அது எனக்கு தெரியவில்லை
ஆனால் கண்ணியம் என்று விளங்கிக் கொண்டேன் !
தொப்பி அவசியமா
என்று கேட்கிறீர்கள்
அது அனாச்சாரம் இல்லை என்று
விளங்கிக் கொண்டேன் !
இரவு நேரத்தில் வெளியிலிருந்து வர தாமதமாகிவிடுகிறது
சாலை நடுவே பேரிகாட் அமைத்து வாகனத்தை நிறுத்தி வாயை ஊதச் சொல்லி பலரையும் அதில் தாடி வைத்தவரும் அடங்குவார் அதில் என்னை மட்டும் நீங்க போங்க பாய் என்று அனுப்பிவிடுகிறது
அது என்னை அல்ல ?
என் தொப்பியை !
அல்ஹம்துலில்லாஹ் மிக மிக அழகிய பதிவு! அனுபவித்து எழுதியிருக்கிறார்! அதுதான் உண்மை..!!
ஒன்றை நன்றாய் விளங்கிக் கொள்ளுங்கள்!தொப்பி அணிந்து செல்வது தான் பள்ளியை அழகு படுத்தியதாகும்!! அல்லாஹ் கூறும் போது..
يٰبَنِىْۤ اٰدَمَ خُذُوْا زِيْنَتَكُمْ عِنْدَ كُلِّ مَسْجِدٍ
ஆதத்தின் மக்களே! ஒவ்வொரு தொழுகையின் போதும் உங்களை அலங்கரித்துக் கொள்ளுங்கள்!
(அல்குர்ஆன் : 7:31)
பள்ளி வாசலுக்குள் நுழையும் போது தொப்பி அணிந்து செல்வதும்
வெளியில் செல்லும் போது தொப்பியோடு செல்வதும்
இஸ்லாத்தின் அடையாளமாய் திகழும் தொப்பியை அணிந்து கொண்டு பிற சமூக மக்களோடு பழகுகிற போதும்
வியாபாரம் செய்கிற போதும் வண்டி வாகனங்களில் செல்கிற போதும் உயர்ந்த அந்தஸ்தையும் கண்ணியத்தையும் வல்ல ரஹ்மான் வழங்குவான் என்பதில் சந்தேகமில்லை!
கருத்துகள்
கருத்துரையிடுக