திக்ரு
திக்ரின்-மகத்துவம்.
பொருமையுடன் படிக்கவும்.
அஹ்மத் இப்னு ஹம்பல் (ரலி) அவர்கள் இஸ்லாத்தின் 4 ஆவது மத்ஹபை தொகுத்து வழங்கிய சட்டமேதை.
ஒரு நாள் பக்தாத் நகரம் வந்தார்கள்.
இரவு நேரம் ஆகிவிட்டதால் ஒரு பள்ளிவாசலில் இரவு தொழுகையை முடித்து விட்டு காலையில் சென்று விடலாம் என்ற எண்ணத்தில் அங்கேயே தங்கினார்.
அந்த காலத்தில் தகவல் தொழில்நுட்ப வசதிகள் இல்லாததால் அஹ்மத் இப்னு ஹம்பலை (ரலி) யாருக்கும் தெரியவில்லை. பள்ளியின் வாட்ச்மென் வந்து, பெரியவரே! இங்கே தங்க கூடாது.
இப்னு ஹம்பல் (ரலி) அவர்கள் சொன்னார்கள் இரவு மட்டும் இருந்து தங்கி விட்டு காலையில் சென்று விடுகிறேன். "அதெல்லாம் முடியாது இங்கே தங்க கூடாது என்றார். பள்ளிக்கு வெளியே விரிப்பு விரித்து அமர்ந்தார்கள். உடனே, வாட்ச்மென் அவர்களை தரதரவென இழுத்து கொண்டு வந்து நடுத்தெருவில் விட்டுவிட்டார்.
எதிரில் ஒரு ரொட்டி கடை. அந்த கடைக்காரர் பார்த்து விட்டு பெரியவரே! இப்படி வந்து உட்காருங்கள் இரவு மட்டும் தானே இங்கே உமது விரிப்பை விரித்துக் கொள்ளுங்கள் என்றார். அஹ்மது இப்னு ஹம்பல் (ரலி) அவர்கள் வந்து உட்கார்ந்தார்கள்.
அந்த கடைக்காரர் "ஸுப்ஹானல்லாஹி வ பிஹம்திஹி, ஸுப்ஹானல்லாஹில் அளீம்" எனும் திக்ரை ஓதிக்கொண்டே இருந்தார்.
இரண்டு மூன்று மணிநேரமாக ரொட்டி சுட்டுக் கொண்டே, ஓதிக் கொண்டிருந்தார். அஹ்மது இப்னு ஹம்பல் (ரலி) அவர்கள் அந்த கடைக்காரரிடம் கேட்டார்கள்.
இது இன்னிக்கு மட்டும் தானா?
கடைக்காரர் சொன்னார், இல்லை பல வருஷமா தொடர்ச்சியாக சொல்லி வருகிறேன். எனக்கு களைப்பு தெரியவில்லை பழகி விட்டது. ரொட்டி போடும் போது நான் விரும்பாமல் கூட என் வாய் உச்சரித்து கொண்டு இருக்கும். ஆச்சரியப்பட்டு போனார் அஹ்மது இப்னு ஹம்பல் (ரலி) அவர்கள்,
"சரி சங்கைக்குரியவன் அல்லாஹ்!!
இப்படி பல வருஷமா ஓதிகிட்டு இருக்கிறாயே, அல்லாஹ் உனக்கு எதாவது செஞ்சானா? அந்த அனுபவம் இருக்கா?
கடைக்காரர் சொன்னார் இருக்கு, நான் என்ன துஆ கேட்டாலும் அது கபூல் ஆகிவிடும். இந்த தஸ்பீஹ்க்கு உள்ள சக்தி என்னன்னா, எப்ப துஆ கேட்டாலும் கபூல் ஆகும் இன்னும் ஒன்று மட்டும் நடக்கவில்லை. அஹ்மது இப்னு ஹம்பல் (ரலி) அவர்கள் ஆச்சரியப்பட்டு கேட்டார்கள்.
என்ன அது?
பேசி கொண்டு இருப்பது யார் என்று கூட தெரியாது அந்த ரொட்டி கடைகாரருக்கு, எவ்வளவு பெரிய இமாம் என்றும் அவருக்கு தெரியாது.
அவர் சொன்னார், நான் மௌத் ஆகுவதற்குள் ஒருமுறை அஹ்மத் இப்னு ஹம்பல் (ரலி) அவர்களை பார்க்கனும் என்று அல்லாஹுவிடம் கேட்டு இருக்கேன். அல்லாஹ் இன்னும் அதை மட்டும் தரவில்லை.
ஆனால், நான் மரணம் அடைவதற்குள் அவரை பார்ப்பேன் என்ற நம்பிக்கை இருக்கு. அவரை எதிர்பார்த்து இருக்கிறேன் என்று சொன்னபோது அல்லாஹ் கூட்டிட்டு வரவில்லை அஹ்மத் இப்னு ஹம்பலை இழுத்து கொண்டு வந்து உன் கடையிலே நிறுத்தி இருக்கிறான். எந்த நிபந்தனையும் இல்லை. அல்லாஹ் என் கால்களை உன்னிடம் இழுத்து கொண்டு வந்து இருக்கிறான் என்றார்கள்.
அதற்கு அவர் அல்ஹம்துலில்லாஹ் !
அல்ஹம்துலில்லாஹ் !
என்னுடைய மௌத் வரை இந்த நாவு தஸ்பிஹை மட்டும் நிறுத்தவே நிறுத்தாது.
எவருடைய நாவு எங்கெல்லாம் அல்லாஹ்வை திக்ரு செய்து கொண்டே இருக்கிறதோ,அல்லாஹ் அவருக்கு தருகிற மிகப்பெரிய கூலி சில உண்டு.
அஹ்மத் இப்னு ஹம்பல் (ரலி) அவர்கள் எழுதுகிறார்கள்.
எவருடைய நாவு அல்லாஹ்வை திக்ரு செய்து கொண்டு இருக்கிறதோ அவர் எங்கிருந்தாலும் சரி, அவர்களுக்கு நான்கு அடையாளம் .
1) அவருடைய முகத்தில் பிரகாசம் இருக்கும்.
2) அவர்களின் உள்ளத்தில் எப்போதும் வெளிச்சம் இருக்கும்.
3) அவர்களின் குழந்தைகள் அவர் சொற்படி நடப்பார்கள்.
4) உலகத்தில் உள்ள படைப்புகள் காரணம் தெரியாமல் அவரை நேசிக்கும்.
திக்ரை உச்சரிக்காத நாவுகளுக்கு
நான்கு அடையாளம்
1) அவருடைய முகம் இருள் அடைந்து காணப்படும்.
2) அவருடைய உள்ளத்தில் கரும்புள்ளிகள் நிறைந்து காணப்படும் அவருடைய உடலில் எப்போதும் நோய் இருக்கும்.
3) அவருடைய குழந்தைகள் அவர் சொற்படி நடக்க மாட்டார்கள் .
4) உலகத்தில் உள்ள படைப்புகள் அவரை காரணம் தெரியாமல் கோபம் கொள்ளும்.
எல்லாம் வல்ல அல்லாஹ் நம்முடைய நாவுகளை அதிகம் திக்ரு செய்யக்கூடிய நாவாக ஆக்கி அருள் புரிவானாக!
ஆமீன்.
கருத்துகள்
கருத்துரையிடுக