அரபிகள் வியந்து போற்றும் ஆன்மீக அரபுக் காவியம் அல்லஃபல் அலிஃப்
அரபிகள் வியந்து போற்றும் ஆன்மீக அரபுக் காவியம் அல்லஃபல் அலிஃப் தமிழகத்தில் பிறந்து மதீனாவில் மஸ்ஜிதுன் நபவியில் தலைமை ஞான ஆசிரியராக பல வருடங்கள் பாடம் நடத்திய மகான்
தென் இந்தியா காயல்பட்டணம் மறைந்து வாழும் கௌதனா ஷெய்ஹனா உமர் வலியுல்லாஹ் ரலியல்லாஹு தஆலா அன்ஹு அவர்களால் கோர்வை செய்யப்பட்ட அற்புதமான கிரந்தங்களில் ஒன்றான அல்லஃப் அல் அலிஃப் என்ற அரபி கவிதை ஆன்மீக தொகுப்பு.
https://youtu.be/Z8lk5GdXetw
உலகப் பிரசித்தி பெற்றது.
அரபியை தாய்மொழியாக கொண்டவர்களும் வியக்க கூடியதாக இவை அமைந்துள்ளன.
இந்த கவிதை தொகுப்பின் தனிச்சிறப்பு
அரபு எழுத்துக்களில் ....ا ب ت ... வரிசையில் ஒவ்வொரு எழுத்துகளுக்கும் இரண்டு அடிகள் என 29 ஈரடிகள் எழுதப்பட்டுள்ளது
அந்த ஒவ்வொரு ஈரடி கவிதையிலும் பயன்படுத்தப்பட்டுள்ள வார்த்தையும் அனேகமாக அந்த கவிதையின் ஆரம்ப எழுத்தை போன்றே உள்ளது
உதாரணமாக س. என்ற எழுத்தைக் கொண்டு ஆரம்பிக்கப்பட்டுள்ள கவிதை வரிகளில் பயன்படுத்தப்பட்ட வார்த்தைகளிலும் س என்ற எழுத்தே அதிகமாக அமைந்துள்ளது
سَلْ سَبِـيْلاً سَارَ فِـيْهِ سَيِّدُ السَّادَاتِ سِرْ
سَلْسَـبِـيْلاً تُسْقَ فِي الْحَالَاتِ كَالسَّلْسَالٍ سَالْ
இவ்வாறு ஒவ்வொரு அடிகளிலும் இந்த அமைப்பு காணப்படுகின்றது
அடுக்கடுக்கான ஒரே அமைப்பில் இருக்கக்கூடிய வார்த்தை சொற்றொடர்கள் பயன்படுத்தப்பட்டாலும் முழுமையான பொருளை தரக்கூடியதாகவும் ஆழமான ஆன்மீக கருத்துக்களை போதிக்க கூடியதாகவும் முழு கவிதை தொகுப்பும் உள்ளது
உலகப் பிரசித்திப் பெற்ற அரபி பல்கலைக்கழகங்களில் உயர் கல்வி மாணவர்களுக்கும் அரபி மொழி ஆராய்ச்சி மாணவர்களுக்கும் இந்தக் கவிதைத் தொகுப்பு பாடத்திட்டத்தில் உள்ளது
இந்தக் கவிதைத் தொகுப்பிற்கு விளக்கம் சொல்ல பல விரிவுரைகள் சொல்லப்பட்டுள்ளன .
இன்றளவும் இந்தக் கவிதையை எழுதிய ஞான குருவின் சீடர்கள் தொடரின் மூலமாக மாணவர்களுக்கு ஞானம் அளிக்கப்பட்டு வருகின்றது.
அரபி எழுத்து உச்சரிப்பு பயிற்சிக்காக இது சிறு வயதினருக்கும் கற்றுக் கொடுக்கப்படுகின்றது
கருத்துகள்
கருத்துரையிடுக