மத்ஹப்

*🎤விசித்திரமான கேள்விகளும் , விறுவிறுப்பான பதில்களும்🎤*

*🎤இமாம் அபூஹனீபா (ரஹ்) அவர்களுக்கும் , இமாம் ஹுஸைன் (ரலி)  அவர்களின் பேரர் பாகிர் (ரலி) அவர்களுக்கும் மத்தியில் நடந்த சுவராசிய  உரையாடலின் தொகுப்பு*

*🎤பாகிர் (ரலி) : என் பாட்டனார் நபி (ஸல்) அவர்களின் ஹதீஸ்களை விட்டுவிட்டு உம் சொந்த அறிவில் சட்டம் சொல்வதாக கேள்விப்பட்டேனே? அதர்க்கென்ன காரணம் என வினவினார்கள்.*

*🎤1).அபூஹனீபா (ரஹ்) : தொழுகை ஏற்றமானதா ? நோன்பு ஏற்றமானதா ?*

*🎤பாகிர்(ரலி) : தொழுகைதான் ஏற்றம்.*

*🎤அபூஹனீபா (ரஹ்) : நான் அறிவின்படி சட்டம் சொல்லியிருந்தால் ரமளான் மாதத்தில் மாதவிடாய் உள்ளப் பெண்மணி தொழுகையை களா செய்ய வேண்டும். நோன்பை விடவேண்டும் என விதித்ருப்பேன். ஏனென்றால் நோன்புதான் ஏற்றமானது. நான் இப்படி சட்டம் சொல்லவில்லை.*

*🎤2).அபூஹனீபா (ரஹ்) : கடினமான நஜிஸ் (அசுத்தம்) இந்திரியமா ? சிறுநீரா ?*

*🎤பாகிர் (ரலி) : சிறுநீர்தான் கடுமையான நஜிஸ் (அசுத்தம்).*

*🎤அபூஹனீபா (ரஹ்) : நான் என் அறிவின்படி சட்டம் சொல்லியிருந்தால் சிறுநீர் கழித்தவன் குளிக்க வேண்டுமென்றும் , இந்திரியம் வெளியானவன் கழுவ வேண்டுமென்றும் விதித்திருப்பேன். மாறாக இந்திரியம் வெளியானவன் குளிக்க வேண்டுமென்றும், சிறுநீர் இருந்தவன் கழுவ வேண்டுமென்றும் கூறியுள்ளேன்.*

*🎤3).அபூஹனீபா (ரஹ்) பலகீனமானவர்கள் ஆண்களா? பெண்களா?*

*🎤பாகிர் (ரலி) : பெண்கள்தான் பலகீனமானவர்கள்.*

*🎤அபூஹனீபா (ரஹ்) : நான் என் அறிவின்படி சட்டம் சொல்லியிருந்தால் வாரிசுரிமை சட்டத்தில் பெண்களுக்கு 2 பங்கும், ஆண்களுக்கு 1 பங்கும் கொடுக்கும்படி சொல்லியிருப்பேன். ஆனால் அவ்வாறு கூறவில்லை. பெண்களுக்கு 1 பங்கும் ஆண்களுக்கு 2 பங்கு எனதான் கூறியுள்ளேன்.*

*✳என் மத்ஹபாகிறது குர்ஆன் , ஹதீஸ் மற்றும் ஸஹாபாக்களின் கூற்றின் படிதான் இருக்கும். இவை மூன்றிலும் ஒரு சட்டம் இல்லாவிட்டால் இம்மூன்றயும் வைத்து ஆலோசித்து (கியாஸ் செய்து) சட்டம் கூறுவேன் என இமாமவர்கள் நவின்றார்கள். இதைக்கேட்ட ஹுசைன் (ரலி) அவர்களின் பேரர் பாகிர் (ரலி) இமாமிற்கு மரியாதை செய்து மன்னிப்பையும் கேட்டுக்கொண்டர்கள். இமாமவர்களைப் பற்றி முரண்பாடாக பேசியவர்களை கடிந்துக்கொண்டார்கள்.*

     *🔍ஆதாரம்: ஃபுதூஹாதுஸ்ஸலாம்(فتوحات السلام)*
      *பக்கம் : 157-158*

*✳மனம் போன போக்கில் இமாமவர்களைப்பற்றி தான்தோன்றித் தனமாக வசைப்பாடும் வஹ்ஹாபிகளே படியுங்கள் ! சிந்தியுங்கள் !*

*🔍மத்ஹபைப் புறக்கணித்து சென்றால் கடைசியில் அது மிகப்பெரும் வழிககேட்டின்பால் சேர்ந்துவிடும் என அன்றே ஒரு மகான் கூறிய வாக்கு மிகவும் நிதர்சனமான உண்மையாக காண்கிறோம.்*

*✳தப்ஸீர் ஜலாலைனுக்கு விரிவுரை எழுதிய இமாம் ஸாவி (ரஹ்) கூறுகிறார்கள்:*
*(و لا يجوز تقليد ما عدا المذاهب الاربعة. فالخارج عن المذاهب الاربعة ضال مضل. و ربما عداه ذلك الى الكفر. لان الأخد بظواهر الكتاب والسنة من اصول الكفر)*

        *🔍ஆதாரம்:தப்ஸீர் ஸாவி*
          *பாகம்:* *மூன்று(قديم)*

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அரபி மதரஸாக்கள்

மவ்லித் ஷரீஃப் ஓதுவோம் வாருங்கள்

உம்ரா