#ரமளான் #ramalan சூரத்துல் பதஹ் #sura alfathah
قال *إبن مسعود رضي الله عنه* : بلغني عن *النبي صلي الله عليه وسلم* قال من قرأ سورة الفتح في أول ليلة من رمضان مر عامه كله في غني
تفسير روح البيان والقرطبي والإمام خطيب الشربيني
*இமாம் ஹதீபுஷ் ஷர்வேனி ரழியல்லாஹு தஆலா அன்ஹு* அவர்கள் தனது தஃப்ஸீர் கிதாபான *அஸ்-ஸிராஜுல் முனீர்* ரில் கூறுகிறார்கள் ,
மேலும் *இஸ்மாயில் ஹக்கி பரூஸி ரழியல்லாஹு தஆலா அன்ஹு* அவர்கள் தனது தஃப்ஸீர் கிதாபான *ரூஹுல் பயானி* லும் ,
*இமாம் குர்துபி ரழியல்லாஹு தஆலா அன்ஹு* அவர்கள் *தஃப்ஸீர் குர்துபி* யிலும் ,
*கண்மணி நாயகம் ஸல்லல்லாஹூ அலைஹி வ ஸல்லம்* அவர்களை தொட்டும் *இப்னு மஸ்ஊது ரழியல்லாஹு தஆலா அன்ஹு* அவர்கள் அறிவிக்கின்ற ஹதீஸ் பின்வருமாறு :
யார் ரமழான் மாதத்தின் முதல் பிறை இரவில் ஒரு முறை *சூரத்துல் ஃபத்ஹு* ஓதுவாரோ அந்த வருடம் முழுவதும் அவர் செல்வச்செழிப்பாக இருப்பார் என்று *கண்மணி நாயகம் ஸல்லல்லாஹூ அலைஹி வ ஸல்லம்* அவர்கள் கூறுகிறார்கள்....
மேலும் நமது *ஷேய்கு நாயகம் தைக்கா ஷுஐபு ஆலிம் வலியுல்லாஹ் நாயகம் ரழியல்லாஹு தஆலா அன்ஹு* அவர்களும் தனது கிதாபான *அல்-முன்ஜியா* த்தில் *சூரத்துல் ஃபத்ஹு* உடைய சிறப்புகளை குறிப்பிடும் இடத்தில் இத்தகவலை பதிவு செய்துள்ளார்கள்...
மேலும் இதை குறித்து *இமாம்கள்* கூறும்போது:
ரமழான் மாத பிறைக்கு முந்திய 3 இரவுகளில் இதை ஓதினால் ரமலான் மாதத்தின் சிரமங்களை இது நீக்கிவிடும் என்று கூறுகிறார்கள்..
இன்று ஷாபான் பிறை 28 (27- ஃபிப்ரவரி-2025), எனவே இன்றிலிருந்தே ஓதவும்..
முதல் நாள் இரவில் எப்போது வேண்டுமானாலும் ஓதலாம்.
ஆனால் மஃரிப் தொழுகைக்கும் இஷாத் தொழுகைக்குமிடையில் இதை ஓதுவது மிகச் சிறந்தது என்று கூறியுள்ளார்கள்.
மேலும் *இமாம் ஹஸன் ஷத்தாது ரழியல்லாஹு தஆலா அன்ஹு* அவர்கள் :
சுன்னத் தொழுகையில் ஓதுவது மிகச் சிறப்பானது என்று கூறினார்கள்...
எனினும் பலருக்கு *சூரத்துல் ஃபத்ஹு* மனனம் இல்லாத காரணத்தால் இரண்டு ரக்அத் தொழுது அதில் முதல் ரக்அத்தில் *குல்யா அய்யுஹல் காஃபிரூன் சூரா* வையும் , இரண்டாவது ரக்அத்தில் *சூரத்துந் நாஸை* யும் ஓதி தொழுது விட்டு அந்த இடத்திலேயே அமர்ந்து யாரிடமும் பேசாமல் இதை ஒதினாலும் இந்த சிறப்பு கிடைத்துவிடும் என்று சில *மஹான்கள்* கூறுகிறார்கள்...
எப்படி இருந்தாலும் இதை ஓதிமுடித்துவிடுங்கள் ! இன்ஷா அல்லாஹ் !
நானும் , எனது *தந்தை ஷேய்கு நாயகம் தைக்கா ஷுஐபு ஆலிம் வலியுல்லாஹ் நாயகம் ரழியல்லாஹு தஆலா அன்ஹு* அவர்களும் *ஷேய்கு நாயகம்* அவர்கள் ஹயாத்தாக இருந்த இறுதி ரமழானில் ஒன்றாக இதை ஓதி அமல் செய்தோம்...
பிறருக்கும் கற்றுத் தருமாறு கூறினார்கள்...
அதனால் இந்த வருடம் உங்களை இந்த அமலை கற்றுத் தருகிறேன்.
முடிந்தவர்கள் ஓதி அமல் செய்யுங்கள் !
*அல்லாஹு தஆலா* அவனுடைய ரஹ்மத்தையும், பரக்கத்தையும் பெறுவதற்கும் , நமது *ஷேய்கு நாயகம் ரழியல்லாஹு தஆலா அன்ஹு* அவர்களின் பொருத்தத்தையும் பெறுவதற்கும் நம்மனைவருக்கும் அருள் புரிவானாக.,
தங்களின் புனிதமான துஆக்களில் என்னையும், என் குடும்பத்தார்களையும், என் நண்பர்களையும் சேர்த்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன்..
அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்துல்லாஹி வ பரகாத்துஹு...
✍ தைக்கா முஹம்மது ஸதகத் ஜலாலி கௌஸி ( ஙஃபரல்லாஹு லஹூ)
கருத்துகள்
கருத்துரையிடுக