கல்வியா?செல்வமா?

🌹🌹🌹🌹🌹🌹🌹  அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) 🌹🌹🌹🌹🌹🌹

ஒரு சிறிய குறிப்பு
🗒🗒🗒🗒🗒🗒🗒

செல்வம் சிறந்ததா?
கல்வி சிறந்ததா?   என்கிற தலைப்பில் கல்வியின் கடலான ஹஜ்ரத் அலி (ரலி) அவர்களிடம் ஒரு தடவை 10 பேர் கொண்ட கூட்டம் வந்து நாங்கள் ஒரே கேள்வி கேட்கிறோம் அந்த கேள்விக்கு பத்து விதமான பதில்கள் வேண்டும் என்று கூறினார்கள்:

அந்த கேள்விக்கு பத்து விதமான பதில்கள் சொன்ன ஹஜ்ரத் அலி (ரலி) அவர்கள்:

(1) செல்வத்தை நீ பாதுகாக்க வேண்டும்
________________________
ஆனால் கல்வி உண்னை பாதுகாக்கும் என்றார்கள்.

(2) செல்வம் செலவழித்தால் காலியாகி விடும்
____________________________ ஆனால் கல்வி செலவழித்தால் பெருகிவிடும் என்றார்கள்.

(3) செல்வம் பிர்அவுன் இன்னும் ஹாமானின் சொத்து
____________________________ஆனால் இல்மு நபிமார்களின் சொத்து என்றார்கள்.

(4) செல்வம் நீண்டகாலம் கழியும் போது கெட்டு விடும்
____________________________ஆனால் கல்வி கெடாது என்றார்கள்

(5) செல்வம் திருட்டு போகும் அபாயம் உள்ளது
____________________________ஆனால் கல்வி அபாய மற்றது என்றார்கள்.

(6) செல்வந்தர்கள் கஞ்ஜர்கள் என்று சொல்லப்படுவார்கள்.
____________________________ஆனால் கல்வி உடையவர்களை வள்ளல்கள் என்று சொல்ல ப்படுகிறார்கள்.

(7)செல்வத்தால் உள்ளம் இருலடைந்து விடுகிறது
___________________________ ஆனால் கல்வியால் உள்ளம் பிரகாசம் அடைகிறது என்றார்கள்.

(8) செல்வத்தால் பெருமை, கர்வம்,உண்டாகிறது
____________________________ஆனால் கல்வியால் பனிவு உண்டாகிறது என்றார்கள்.

(9) செல்வத்தால் விரோதிகள் உறுவாகிறார்கள்
___________________________ஆனால் கல்வியின் மூலமாக நல்ல நண்பர்கள் உறுவாகிறார்கள்.

(10) கியாமத்து நாளில் செல்வந்தர்கள்  கணக்கு கொடுக்க வேண்டும்
____________________________
ஆனால் கல்விக்கு கேள்வி கணக்கு இல்லை என்றார்கள்.

கடைசியாக ஹஜ்ரத் அலி (ரலி) அவர்கள்  தன்னுடைய  கல்வியின் திறமையால் அற்ப்புதமான பதில்களை அழித்து கல்வி தான் சிறந்தது என்று நிர்பித்தார்

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அரபி மதரஸாக்கள்

மவ்லித் ஷரீஃப் ஓதுவோம் வாருங்கள்