தர்மம்

*இமாம் ஸுயூத்தி (ரஹிமஹுழ்ழாஹ்) அவர்கள் ஒரு நூலில் பதிவு செய்துள்ளார்கள்.* 

*ان ثواب صدقة خمسة انواع*

*தான தர்மத்தின் நன்மைகள் ஐந்து படித்தரங்களாகும்.*

*واحدة بعشرة وهو علي صحيح الجسم*

*ஒன்று முதல் பத்துவரை கூலி கிடைக்கும் தர்மம்..*

*ஆரோக்கியவும், உடல் வலிமையையும், நல்ல வேலையும் உள்ள நபருக்கு ஸதக்கா வழங்கினால் இந்த நன்மை கிடைக்கும்...*

*وواحدة بتسعين وهي علي الأعمي والمبتلي*

*ஒன்று முதல் 90 வரை கூலி கிடைக்கும் தர்மம்..*

*கண்பார்வை இழந்தவனுக்கும், மிகவும் பெரிய ஆபத்தில் சிக்கித் தவிப்பனுக்கும் தான தர்மங்கள் வழங்கும் போது அல்லாஹ் இந்த கூலியை வழங்குகிறான்...*

*وواحدة بتسع مئة وهي علي ذي قرابة محتاج*

*ஒன்று முதல் 900 வரை கூலி கிடைக்கும் தர்மம்*

*மிகவும் தேவையுடைய, ஏழை, எளிய, நம்மோடு மிகவும் நெருங்கிய குடும்ப உறவினர்களுக்கு வழங்கும் போது அல்லாஹ் இந்த கூலியை கொடுக்கிறான்.*


*وواحدة بمئة الف وهي علي الأبوين*

*ஒன்று முதல் ஒரு லட்சம் கூலிப் பெற்றுத் தரும் தர்மம்.*

*தாய், தந்தையர்களுக்கு வழங்கும் தர்மம் இந்த மகத்தான கூலியை நமக்கு பெற்றுத் தருகிறது..*


*وواحدة بتسع مئة الف وهي علي عالم أو فقيه*

*ஒன்று முதல் ஒன்பது லட்சம் வரை கூலிப் பெற்றுத் தரும் தர்மம்..*

*அல்லாஹ்வை பயப்படுகிற யதார்த்த ஆலிம்களுக்கு, செய்யும் ஸதக்கா இந்த மகத்தான அளப்பறிய கூலியை பெற்றுத் தருகிறது..*

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அரபி மதரஸாக்கள்

மவ்லித் ஷரீஃப் ஓதுவோம் வாருங்கள்

கல்வியா?செல்வமா?