#தரித்திரம் #வறுமை
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்..
நமக்கு நாமே தரித்திரங்களைத் தேடிக் கொள்ளும் 33 விஷயங்கள்!!
அவசியம் படித்து விட்டு வேறு வேலை பாருங்கள்! இல்லையேல் தரித்திரம் வீட்டிலேயே குடிகொண்டிருக்கும்!
அல்லாஹ்வின் கூற்று இதோ..
وَمَاۤ اَصَابَكُمْ مِّنْ مُّصِيْبَةٍ فَبِمَا كَسَبَتْ اَيْدِيْكُمْ وَيَعْفُوْا عَنْ كَثِيْرٍ
உங்களுக்கு ஏற்பட்டிருக்கும் எந்த ஒரு துன்பமானாலும் அது உங்கள் கைகள் சம்பாதித்தவைதான். மேலும், அவன் பெரும்பாலான பிழைகளைப் பொருட்படுத்தாமல் விட்டுவிடுகின்றான்.
(அல்குர்ஆன் : 42:30)
நபி ஸல் அவர்களின் கூற்று இதோ....
1,பிஸ்மில்லாஹ்... சொல்லாமல் சாப்பிடுதல்!
2,விருந்தாளியை கேவலமாக பார்ப்பது!
3, செருப்பு போட்டிருக்க சாப்பிடுதல்!
4, திறந்த தலையுடன் சாப்பிடுதல்!
5,பள்ளிவாசல்களில் உலக பேச்சுக்கள் பேசுவது!
6,மூத்தவர்களை முந்திச் செல்வது!
7, அன்னியப் பெண்களைப் பார்ப்பது!
8,பொய் பேசுவது!
9,ஏழைகளை விரட்டுவது!
10,மஃரிபிற்குப் பின் தூங்குவது!
11,கழிவறைக்கு திறந்த தலையுடன் செல்வது!
12, கழிவறைக்குள் உமிழ்வது!
13,குளியலறைகுள் சிறுநீர் கழிப்பது!
14,பாடல்களில் உள்ளம் இலயிப்பது!
15,குர்ஆனை ஒலுவின்றி தொடுவது!
16,நின்றுகொண்டு சாப்பிடுவது!
17,கைகளை கழுவாமல் சாப்பிடுவது!
18,உண்ட பாத்திரத்தை கழுவாமல் போட்டுவிடுவது
19,தொழுகையைக் கழாச் செய்வது!
20, வாசற்படியில் அமர்வது!
21,குழந்தைகளை சபிப்பது!
22, விடியற்காலையில் தூங்குவது!
23, பல் உடைந்து போன சீப்புகளைக் கொண்டு சீவுவது!
24, உடைந்த பாத்திரங்களை உபயோகப் படுத்துவது!
25, பாத்திரங்களை திறந்தே வைத்திருப்பது!
26,பெரிய பாத்திரத்தில் நீர் பருகுவது!
27,தண்ணீரைப் பார்க்காமல் குடிப்பது!
28,நடுவீட்டில் தலை சீவுவது!
29,குடும்பத்தில் சண்டை சச்சரவுகள் ஏற்பட்டுக் கொண்டே இருப்பது!
30, நின்றுகொண்டு சிறுநீர் கழிப்பது!
31, நிர்வாணமாக குளிப்பது!
32,முன்னோர்களை திட்டுவது!
33,பெற்றோர்களை புண்படுத்துவது!
இவைகளில் பெரும்பாலானவை நம் குடும்பங்களில் இருப்பவையே!
இப்ப தெரிந்து கொண்டோமல்லவா இன்ஷாஅல்லாஹ் இனிமேல் திருத்திக் கொள்வோம்!
முடிந்தால் இதை ஒரு பிரின்ட் அவ்ட் எடுத்து ஃபிரேம் போட்டு வீடுகளில் மாட்டிவைப்போம்!
பல பேர்களுக்கு பிரயோஜனமாக இருக்கும்!
என்றும் துஆவுடன்:
மௌலானா, அல்ஹாஜ், அஃப்ஸலுல் உலமா, *கம்பம்* *முஹம்மது அப்பாஸ் காஸிமி, ஜமாலி**
கருத்துகள்
கருத்துரையிடுக