மாற்றம்
*மாற்றம் என்ற சொல்லைத் தவிர அனைத்தும் மாறும்!*
*நட்பு உடைந்து முகநூலானது.*
*சுற்றம் உடைந்து வாட்சப் ஆனது.*
*வாழ்த்துகள் உடைந்து ஸ்டேட்டஸ் ஆனது.*
*குளக்கரை உடைந்து குளியலறை ஆனது.*
*நெற்களம் உடைந்து கட்டடமானது.*
*காலநிலை உடைந்து வெப்ப மயமானது.*
*விளைநிலம் உடைந்து தரிசாய் ஆனது.*
*துணிப்பை உடைந்து நெகிழியானது.*
*அங்காடி உடைந்து அமேசான் ஆனது.*
*விளை நிலம் உடைந்து மனைநிலம் ஆனது.*
*ஒத்தையடி உடைந்து எட்டு வழியானது.,*
*கடிதம் உடைந்து இமெயிலானது.*
*விளையாட்டு உடைந்து வீடியோ கேம் ஆனது.*
*புத்தகம் உடைந்து இ-புக் ஆனது.*
*சோறு உடைந்து 'ஓட்ஸ்'சாய்ப் போனது.*
*இட்லி உடைந்து பர்கர் ஆனது.*
*தோசை உடைந்து பிட்சாவானது.*
*பசும்பால் உடைந்து பாக்கெட் ஆனது.*
*வெற்றிலை உடைந்து பீடாவானது.*
*தொலைபேசி உடைந்து கைபேசியானது.*
*நூலகம் உடைந்து கூகுள் ஆனது.*
*வங்கி உடைந்து பேட்டிஎம் ஆனது.*
*பொது நலம் உடைந்து சுயநலமானது.*
*பொறுமை உடைந்து அவசரமானது.*
*ஊடல் உடைந்து விவாகரத்தானது.*
*நிரந்தரம் உடைந்து நிதர்சனம் ஆனது.*
*ஆகையால் இனி உடைவது உலகினில் நிரந்தரமானது!*
கருத்துகள்
கருத்துரையிடுக