பாகவி #பாக்கியாத் #துஆ
தமிழகத்தின் தாய் கல்லூரியாக திகழும் பாக்கியாத்துஸ் ஸாலிஹாத்தின் ஸ்தாபகர் அண்ணல் அஃலா ஹழ்ரத் (ரஹிமஹுல்லாஹ்) அவர்கள் ஒரு நாள் வாணியம்பாடியில் புதிதாய் கட்டப்பட்ட எத்தீம் கானாவின் திறப்பு விழாவிற்கு அழைக்கப்பட்டார்கள். அந்த அழைப்பை ஏற்று அஃலா ஹழ்ரத் (ரஹிமஹுல்லாஹ்) அவர்கள் வருகை தந்தார்கள். அவர்களின் வருகை அதன் நிறுவாகிகள் மற்றும் ஊர் மக்களுக்கு பேரானந்தமாக இருந்தது.
திறப்பு விழாவிற்கு பின் அதன் நிறுவாகிகள்
அண்ணல் அஃலா ஹழ்ரத் (ரஹிமஹுல்லாஹ்) அவர்களிடம் இந்த நிறுவனத்தின் வளர்ச்சிக்காக துஆ செய்ய வேண்டினார்கள்.
அதற்கு அஃலா ஹழ்ரத் (ரஹிமஹுல்லாஹ்) அவர்கள் “இந்த நிறுவனத்தின் வளர்ச்சிக்காக நான் துஆ செய்ய மாட்டேன்” என்று கூற அதன் நிறுவாகிகளும், ஊர் மக்களும் அதிர்ந்து விட்டனர்.
இதை கண்ட அஃலா ஹழ்ரத் (ரஹிமஹுல்லாஹ்) அவர்கள் அதற்கா காரணத்தை பின் வருமாறு விவரித்தார்கள். இந்த நிறுவனம் வளர்ச்சியடைய வேண்டுமானால் எத்தீம்கள் (அனாதைகள்)
பெருக வேண்டும். அனாதைகள் பெருக வேண்டுமானால் அவர்கள் தாய் தந்தையர்கள் மரணிக்க வேண்டும்.
ஆகவே இதன் நிறுவாகிகள் மற்றும் இதற்கு உதவிபுரிபவர்களுக்காக துஆ செய்யுமாறு கூறுங்கள் நான் துஆ செய்கின்றேன்” என்று கூறினார்கள்.
அஃலா ஹழ்ரத் (ரஹிமஹுல்லாஹ்)
அவர்களின் இந்த தூரநோக்கு சிந்தனை நம்மை பிரம்மிப்பில் ஆழ்த்துகிறது.
அண்ணல் அஃலா ஹழ்ரத் (ரஹிமஹுல்லாஹ்) அவர்களின் ராஜபாட்டையில் வரக்கூடிய நமக்கும் இடம் , பொருள் , ஏவல் அறிந்து சிந்திக்கும் தெளஃபீக்கை அல்லாஹ் தருவானாக.
தகவல் தருபவர் அண்ணல் அஃலா ஹழ்ரத் அவர்களின் அருமை பேரர்
ரயீசுல் இஸ்லாம் ஃபாஜில் பாகவி (ரஹிமஹுல்லாஹ்) ஹழ்ரத் அவர்கள்.
கருத்துகள்
கருத்துரையிடுக