மருத்துவம்

*ஓரிரு_ வரிகளில்_ வார்த்தைகளில்_ யோக மருத்துவம்_ இயற்கை_மருத்துவம்* *சித்த_மருத்துவம்* *பற்றி_தெரிந்து_ கொள்வோமா???*

*👉 அதிகாலையில் எழு.... அகத்தில் ஆண்டவனை தொழு..!*

*👉 பேச்சை நிறுத்து. மூச்சை கவனி....!*

*👉 காலைக்கடன் களை கண்டிப்பாக முடி...!*

*👉 அதிகாலைக் குளியல் அற்புதக் குளியல்....!*

*👉 அனுதினமும் (யோக )ஆசனம் பழகு...!*

*👉 மனதுடன் போராடாதே மனதை கவனி....!*

*👉 உடலையும் உள்ளத்தையும் ஊடுருவி, பத்து நிமிடம் பரவெளியில் பறந்து செல்....!*

*👉இயற்கை வாழ்வே இனிய நல்வாழ்வு...!*

*👉தேங்காயும் வாழைப்பழமும் சிறந்த மனித உணவு...!*
 
*👉கனிகளும் காய்களும் பிணிகளைப் போக்கும்...!*

 *👉 காற்று ஒரு மிகச் சிறந்த நுண் உணவு...!*
 
*👉வெயிலில் தோய்க... மழையில் நனைக...!*

*👉கண்ட மருந்து காலனுக்கு விருந்து...!*

*👉மாத்திரை ,இறுதி யாத்திரைக்கு வழிவகுக்கும்...!*

*👉மருந்தே உணவு அல்ல.. உணவே மருந்து...!*

*👉 உண்ணா நோன்பே உயரிய நோன்பு...!*

*👉 பசித்த பின் புசி...!*

*👉 நீரை உண்...! உணவை குடி..!*

*👉 தாகம் எடுத்தால் தண்ணீர் குடி..!*

*👉 பசியும் தாகமும் அற்றுப்போனால் நீ ஒரு ஜடம்...!*

*👉 பசியும் தாகமுமே உன்னை உயிர்ப்போடு வைக்கும்...!*

*👉 நொறுங்க தின்றால் நூறு வயது...!*

*👉 தரையில் அமர்ந்து உண்ணுங்கள்... உணவை மட்டுமே எண்ணுங்கள்...!*

*👉உடலை பொன் போல் ஆக்கும் பொன்னாங்கண்ணி.!*

*👉 கூந்தலை கருமையாக்கும் கண்ணை பாதுகாக்கும் கரிசலாங்கண்ணி...!*

*👉 சுக்குக்கு மிஞ்சிய வைத்தியமில்லை...!*


*👉வரட்டு இருமலுக்கு சிறந்தது திராட்சை...!*

*👉 முதுகுத் தண்டு வலிக்கு பாப்பாளிப் பழம் சாப்பிடு....!*

*👉 இரத்த அழுத்தம் குறைய எலுமிச்சை....!*

*👉 மூளைக்கு வலுவூட்ட வல்லாரை....!*

*👉 காது மந்தம் போக்கும் சளியை அகற்றும் தூதுவளை...!*

*👉 உடற் சூடு அகல ஆண்மை சக்தி பெருக முருங்கைக் கீரை....!*


*👉 இரத்தத்தை சுத்திகரிக்க வெள்ளைப்பூண்டு...!*

*👉 கண் பார்வை அதிகரிக்க கேரட், புதினா, ஏலக்காய்....!*

*👉 கடுமையான ஜலதோசத்திற்கு தேனும் எலுமிச்சையும்...!*

*👉வாழ் நாளை நீடிக்க தினம் ஒரு நெல்லிக்கனி....!*

*👉 உடல் சூட்டை தணித்து சர்க்கரை நோயை கட்டுப்படுத்தும் வெந்தயம்...!*

*👉 கொழுப்புச் சத்தை மிளகு குறைக்கும்....!*


*👉பொடுகைப் போக்க தயிரை தலையில் தேய்த்து குளி....!*

*👉 முகம் பளபளக்க தக்காளியையும் வெண்ணையையும் முகத்தில் தேய்த்து பன்னீரில் கழுவு...!*

*👉 மூலநோய்க்கு கருணைக்கிழங்கு...!*

*👉இதய பலவீனம் போக்க மாதுளை....!*

*👉வெள்ளை வெட்டை தீர அன்னாசி...!*

*👉 தலைவலி நீங்க மிளகுப் பொடியுடன் வெல்லம் சேர்த்து உண்...!*

*👉பொன்னாங்கண்ணி உண்டால் நோய் தணிந்து உடல் தேறும்...!*

*👉 வாழைத்தண்டு சிறு நீரகக்கற்களை கரைக்கும்....!*

*👉 மலத்தை இளக்கும் ரோஜா இதழ்கள்....!*

*👉மாதுளம் பிஞ்சு பேதியை நிறுத்தும்....!*

*👉கருப்பை நோய்க்கு வாழைப்பூ....!*

*👉 ஜீரண சக்தியை அதிகரிக்கும் மிளகும் இஞ்சியும்....!*

*👉 மூளைக்கு வலுவூட்டுவது பேரிச்சம்பழம் பாதாம் பருப்பு....!*

*👉 மருதோன்றி வேர்ப்பட்டையை அரைத்துக்கட்ட கால் ஆணி குணமாகும்....!*

*👉"வாதம்" மலத்தில் ஒடுங்கும்... பேதிக்கு எடுத்தால் அடங்கும்...!* 

*"பித்தம்" சிறுநீரில் ஒடுங்கும்.... வாந்தி எடுத்தால் அடங்கும்...!!*

*"கபம்" விந்து,சுரோனிதத்தில் ஒடுங்கும்.... எண்ணெய் குளியலில் அடங்கும்...!*

*👉 யோகிக்கு ஒருவேளை உணவு... போகிக்கு இருவேளை உணவு... ரோகிக்கு (நோயாளி) மூன்று வேலை உணவு...!*

👉 *குறள்.1:-*

 *"மருந்தென வேண்டாவாம் யாக்கைக்கு அருந்தியது அற்றது போற்றி உணின்...!"*

 *விளக்கம்:-*
*"உடலுக்கு மருந்தே வேண்டாம் .... எப்போது? சாப்பிட்ட உணவு நல்ல முறையில் ஜீரணம் ஆகி சத்துக்கள் உடலில் சேர்ந்து விட்டு ,கழிவுகள் முறைப்படி வெளியேறி விட்டால் நமக்கு மருந்தே வேண்டாம்...! உணவே மருந்தாகும்.. .!!"* 

👉 *குறள்.2:-*

  *"மாறுபாடு இல்லா உண்டி மறுத்துண்ணின் ஊறுபாடு இல்லை உயிர்க்கு...!"*

*விளக்கம்:-*
*ஒருவன் உடம்பிற்கு ஒவ்வாத உணவுகளை விலக்கி உண்டால், அவன் உயிர்க்கு நோயால் வரும் துன்பம் இல்லை....!!"*

*உண்ணும் உணவே உடலாகும் எண்ணும் எண்ணமே வாழ்க்கையாகும்...!"*

*"நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் என்பதை உணர்ந்து, மருந்து மாத்திரைகளை மறந்து, இயற்கையோடு இணைந்து பிணைந்து வாழ்வோம்...!!"*

*"ஓகம் (யோகம்) ஒவ்வொரு மனித உயிரின் தாகம்...!!!"*

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அரபி மதரஸாக்கள்

மவ்லித் ஷரீஃப் ஓதுவோம் வாருங்கள்

கல்வியா?செல்வமா?