#பாகவி #baqavi #alim #ulama #usthath #முஹம்மது பாகவி பூக்கொளத்தூர் #mohammedbaqavi #pokkolathur
360 அரபி நூல்களை எழுதிய வாழ்ந்து கொண்டிருக்கும் கேரள அறிஞர்.
#உஸ்தாத்_முஹம்மது_பாகவி_
#பூக்கொளத்தூர்_மலப்புரம்_கேரளா
#எழுத்து_உலகில்_ஒரு_அபூர்வ_நபர்...
=======================================
🖋️தமிழில்:
M.#சிராஜுத்தீன்அஹ்ஸனி...
கேரளாவில் உள்ள தர்ஸ் மற்றும் அரபுக் கல்லூரிகளில் படிக்கும் பெரும்பாலான மாணவர்களுக்கு முஹம்மது பாகவி பூக்கொளத்தூர் என்ற பெயர் மிகவும் பரிச்சயமாக இருக்கும்.
(محمد الباقوي الفوكوتوري المليباري).
அறிஞர்களில் சிலர் இப்படி இருக்கிறார்கள்.
அதாவது மக்கள் கூட்டங்களில் தோன்றுவது குறைவாகவே இருக்கும்.
ஆராவாரங்களை விரும்ப மாட்டார்கள்,
மக்கள் திரள் சங்கமங்களிலும் அவர்களை காண்பது அரிது.
ஆனால் அவர்கள் தங்கள் இலக்குகள் மற்றும் கனவுகளைப் பின்தொடர்வதில் நிலையான முயற்சி மற்றும் பெரும் உழைப்புடன் தங்கள் உலகில் வாழ்கிறார்கள்.
அவர்களின் வாழ்க்கை அற்புதமானது.
அப்படிப்பட்ட ஒருவராகவே முஹம்மது பாகவி பூக்கொளத்தூர் என்ற பேரறிஞரை நான் காண்கிறேன்...
சுமார் நானூறு நூல்களை இயற்றிய இந்த வாழும் மலையாளி அறிஞரைப் போல தற்போது அரபு எழுத்துத் துறையில் முனைப்புடன் செயல்படுபவர் வேறு யாராவது இருக்கிறார்களா என்பது சந்தேகமே.
அனேகமாக கேரளாவில் அரபி மொழியில் மிகவும் அதிகமாக நூல்கள் இயற்றிய மிகச் சிறந்த எழுத்தாளர் இவர்தான் என்று எனது வரையறுக்கப்பட்ட ஆய்வுகள் மூலம்
நான் புரிந்து கொண்டுள்ளேன்..
தர்சு துறையில் நீண்ட காலமாக சேவையாற்றி வரும் இவர், மலப்புரம் மாவட்டம் பூக்கோட்டூரில் உள்ள மாரியாட் என்னும் ஊரில்1965 ஆம் ஆண்டு ஜூலை 1 ஆம் தேதி (ஹிஜ்ரி 1384) கனகச்சேரி மாஹீன் மற்றும் பாத்திமா தம்பதியருக்கு மகனாகப் பிறந்தார். தொடக்கக் கல்வி 7 ஆம் வகுப்பு வரை ஊரில் உள்ள பாபுல் உலூம் மதரஸாவிலும், பூக்கோட்டூர் ஏ.யு.பி பள்ளியிலும் பயின்றார். பின்பு காப்பாட்டுங்கல் பள்ளி தர்சில் சேர்ந்தார். அதன்பின், ஒழுகூர், கூட்டிலங்காடி, மின்னார்குழி, மஞ்சேரி, முண்டுபரம்பு, பொன்னானி மஃஊனத்துல் இஸ்லாம் அரபிக் கல்லூரி, ,என பல்வேறு இடங்களில் படிப்பைத் தொடர்ந்தார்.
பொன்னானி மஊனத்துல் இஸ்லாம் அரபிக் கல்லூரியில் தனது முதன்மை ஆசிரியரும், முதல்வருமான ஷேக் அன்வர் அப்துல்லாஹ் ஃபல்ஃபரி அவர்களின் ஆசியுடன் 1985 ஆம் ஆண்டு பாக்கியத்துக்குச் சென்று அங்கு இரண்டாண்டுகள் படித்து 1987 ஆம் ஆண்டு முதல் தரவரிசையில் பாகவி பட்டம் பெற்றார்.
பாக்கியத்தில் படிக்கும் கடைசி நாட்களில் கண்ணியமிக்க மடவூர் சி.எம்.வலியுல்லாஹி (ரழி) அவர்களைப் பார்க்கச் சென்றார். அவரைப் பார்த்ததும், “ஆ..நீங்க..போங்க.. முதலில் உங்களுக்கு தான் என்றார். அவர்கள் சொன்னது அப்படியே நடந்தது
"குட்டி முஸ்லியார்" என்று அழைக்கப்படும் மௌலானா எம்.கே.அப்துர்ரஹ்மான் ஃபல்ஃபரி,
பானாயிக்குளம் அப்துர்ரஹ்மான் ஹஜ்ரத், மௌலானா எம்.கே.அப்துல்லாஹ் ஃபல்ஃபரி,
ஷேக் எம்.கே.அன்வர் அப்துல்லாஹ் ஃபல்ஃபரி (குட்டி முஸ்லியாரின் மகன்), மொரயூர் இ.கே.அபுபக்கர் முஸ்லியார்.
(தற்போது நந்தி தாருஸ்ஸலாம் அரபிக் கல்லூரியின் முதரிர்ஸ்), அப்துல் ஜப்பார் ஹஜ்ரத், மம்மிகுட்டி ஹஜ்ரத், கமாலுத்தீன் ஹஜ்ரத், ஜைனுல் ஆபிதீன் ஹஜ்ரத், ஹனீஃப் ஹஜ்ரத், மூஸக்குட்டி ஹஜ்ரத் (தற்போது சமஸ்த கேரள ஜம்மிய்யியத்துல் உலமா முஷாவறா உறுப்பினர், நந்தி தாருஸ்ஸலாம் அரபிக் கல்லூரியின் முதல்வர் ) போன்றவர்கள் இவரின் முக்கிய உஸ்தாத்மார்களாகும்.
பாகவி பட்டம் பெற்ற அதே ஆண்டில் தன்னுடைய 22 வயதில் எடப்பால்,
அங்காடி ஜும்ஆ மஸ்ஜிதில் (மர்ஹூம் கே.வி. உஸ்தாத் அவர்களின் ஜமாஅத்) தர்ஸை ஆரம்பித்தார்கள். அதன் பிறகு, மலப்புரம் ஷுஹதா பள்ளி, ஆலத்தூர்பாடி (பொடியாட்), இரிங்கல்லூர், பாலானி படிக்கல், பொன்முண்டம், வெளிமுக்-பாலக்கல் போன்ற பல இடங்களில் காழி, முதர்ரிஸ், கத்தீப் என பல துறைகளிலும் பணியாற்றினார். இப்போது வைலத்தூர் அருகே ஓமச்சபுழா புத்தன் பள்ளி ஜமாஅத்தில் 7 ஆண்டுகளாக சேவை செய்து வருகின்றார்கள்..
அங்கு சுமார் 100 மாணவர்கள் படித்து வருகின்றனர்.
பாசம் நிறைந்த அப்துஸ்ஸலாம் ஃபைசி எடப்பால்,
அப்துல் ஜலீல் ரஹ்மானி வானியன்னூர், இப்ராஹிம் பாக்கவி எடப்பால் போன்ற சமூகத்தின் பல்வேறு துறைகளில் மார்க்க சேவைத் துறையில் பணியாற்றும் நூற்றுக்கணக்கான திறமையான சீடர்களை இவர் உருவாக்கினார்...
சும்மா இருப்பவர் அல்ல உஸ்தாத் அவர்கள். தொடர் ஆராய்ச்சி, தியானம் மற்றும் கற்றல் போன்றவை மேலும் உஸ்தாத் அவர்களின் வாழ்க்கையை அழகாக்குகிறது.
வெள்ளிக்கிழமை தவிர ஒவ்வொரு நாளும் தர்ஸ். ஒரு நாள் கூட வகுப்பை தவறவிடுவதில்லை. மிகவும் பாதகமான சூழ்நிலைகளிலும் லீவு எடுக்காமல் வகுப்புக்கு வந்துவிடுவார்கள்..
பாடம் எடுக்கும் நேரத்தைத் தவிர பெரும்பாலான நேரம், மடிக்கணினி உள்ளிட்ட நவீன தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி கிதாப் ஆராய்ச்சியில் தனது நேரங்களை செலவிடுவது வழக்கம்.
உஸ்தாத் அவர்கள் தனது நேரத்தை மிகவும் மதிப்பவர்கள்.
அவர் தனது அறையின் வாசலில் இப்படி எழுதி வைத்துள்ளார். "ஒவ்வொரு கணமும் விலை மதிப்பானவை. தேவையில்லாமல்
அறைக்குள் நுழைய வேண்டாம்."
இது அவர்கள் நேரத்தை எவ்வளவு மதிக்கிறார்கள் என்பதற்கான தெளிவான அறிகுறியாகும்.
#எழுத்து_என்னும்_அற்புதம்..
ஆழ்ந்த மற்றும் விரிவான எழுத்தை விட, மாணவர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் தேவையான அனைத்துத் துறைகளிலும் சிறு சிறு பங்களிப்புகளைச் செய்ய வேண்டும் என்பதே எழுத்துத் துறையில் அவரது விருப்பம்.
ஒரு வருடத்தில் 40 அரபு புத்தகங்கள்,
10 மலையாள புத்தகங்கள் உட்பட குறைந்தது 50 புத்தகங்களை எழுத முடிவு செய்துள்ளார். இது கடந்த 3-4 ஆண்டுகளாக வழக்கமாக நடந்து வருகிறது".
மகா அற்புதம்...!!! ஸுப்ஹானல்லாஹ்
சிறுவயதில் இருந்தே எழுதுவதில் அலாதியான விருப்பம் கொண்டவர்கள் உஸ்தாத் அவர்கள். தர்ஸில் படிக்கும் காலத்தில் சில பாடல்களை இயற்றினார்கள்.
எடப்பால் முதர்ரிஸாக பணியாற்றிய காலத்தில் நபிகளாரின் நகைச்சுவை மற்றும் திருமணம் ஒரு கண்ணோட்டம் என்ற இரண்டு நூல்களை எழுதி தனது எழுத்து பணிக்கு துவக்கம் குறித்தார்கள்..
பின்னாளில் மலப்புரம் ஷுஹதா பள்ளிவாசலில் தர்ஸ் நடத்தும் காலம். அங்கு நடைபெறும் கந்தூரி விழாவில் அங்கு நல்லடக்கம் செய்யப்பட்டுள்ள வலிமார்கள் குறித்து ஓதுவதற்கு மவ்லிது கிதாப் இல்லாததைக் கவனித்தார்கள்.
அதன் பிறகு அங்கு நல்லடக்கம் செய்யப்பட்டு இருக்கும் வலிமார்களின் பெயரில் ஒரு மவ்லிது கிதாபை இயற்றினார்கள்..
அவர்கள் அரபியில் எழுதிய முதல் நூல் மவ்லிது கிதாப் நூலே என்று சொல்லலாம்.
பின்னர், எழுத்துத் துறையில் இவர்களின் ஆர்வம் அதிகரித்து, அரபு மொழி எழுத்திலேயே அதிக கவனம் செலுத்தினார்கள். பின்னர், உஸ்தாத் அவர்கள் குர்ஆன், உஸுல் குர்ஆன், ஹதீஸ், மவ்லிது, அரபு இலக்கணம், இலக்கியம் போன்ற பல்வேறு தலைப்புகளில் பல படைப்புகளை எழுதினார்கள்.
முக்கியமாக
தர்ஸில் கற்பிக்கப்படும் அனைத்து புத்தகங்களுக்கும்
சிறிய விளக்கங்கள் மற்றும் குறிப்புகளுடன்
மாணவர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் பயனுள்ள வகையில் ஏராளமான நூல்களை எழுதினார்கள்..
அரபு மொழியில் மட்டும் சுமார்
300க்கும் மேற்பட்ட புத்தகங்களை எழுதியுள்ளார்கள். இதுவரை அரபு மற்றும் மலையாளத்தில் பல்வேறு பாடங்களில் 360 புத்தகங்களை எழுதியுள்ளார்கள்.
அவற்றில் சில இரண்டாம் மற்றும் மூன்றாம் பதிப்புகளில் மறுபதிப்பு செய்யப்பட்டுள்ளன.
இதுவரை பாடம் வாரியாக எழுதிய புத்தகங்களின் எண்ணிக்கை கீழே உள்ளது.
அரபு = 306
மலையாளம் = 54
▪️உலுமுல் குர்ஆன் (குர்ஆன் விஞ்ஞானம்)
= 61
▪️இல்முல் ஹதீஸ் = 14
▪️ஃபிக்ஹ் (மார்க்க சட்டங்கள்) = 29
▪️அகீதா, மன்திக் (நம்பிக்கை, தர்க்க சாஸ்திரம்) = 10
▪️தஸவ்வுஃப், அதப் (ஆன்மீகம்,) = 44
▪️தாரிக் (வரலாறு) = 58
▪️சீரத்துந்நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்)
= 18
▪️நஹ்வ் (இலக்கணம்)
= 28
▪️ஸர்ஃப் (சொற்றொடர்வியல்)= 11
▪️லுகா, பலாகா (அரபு மொழி மற்றும் இலக்கியம்) = 23
▪️ திக்ர், ஸலாத், துஆ
= 24
▪️பைத்துகள் (கவிதைகள்) = 23
▪️திப்பு (மருந்து)= 16
உஸ்தாத் அவர்கள் தனது ஒவ்வொரு நூலுக்கும் பெயரிடும் விதம் கொஞ்சம் வித்தியாசமாக இருக்கும்.
நூல் எழுதப்பட்ட ஆண்டு (ஹிஜ்ரி நாட்காட்டியின் படி) புத்தகத்தின் பெயரிலிருந்தே (அப்ஜத் கணக்கின்படி) புரிந்துகொள்ளக்கூடிய வகையில் பெயரிடப்பட்டிருக்கும்.
உதாரணமாக, ஃப்ரூக்குல் அல்ஃபாழ் என்ற பெயரில் உள்ள எழுத்துக்களின் எண்ணிக்கையைக் கூட்டினால், அது எழுதப்பட்ட வருடமான 1429 ஆம் ஆண்டு கிடைக்கும்.
தனது பதிப்பகத்திற்கு அப்ஜதிய்யா பப்ளிகேஷன்ஸ் என்று பெயர் வைத்துள்ளார்கள்.
மஞ்சேரியை மையமாகக் கொண்ட அப்ஜத் பப்ளிகேஷன்ஸ் உஸ்தாத் அவர்களின் எழுத்துக்களை வெளிச்சத்திற்கு கொண்டு வர உஸ்தாதால் தொடங்கப்பட்டது.
உஸ்தாத் அவர்களே அதன் மேலாளர்.
அவரது ஒவ்வொரு புத்தகமும் தர்ஸ் மற்றும் அரபிக் கல்லூரி மாணவர்களால் நன்கு வாசிக்கப்படுகிறது குறிப்பாக, அரபு மொழி அறிவியல் துறையில் எழுதப்பட்ட படைப்புகள் அதிக வரவேற்பைப் பெற்றுள்ளன.
#உஸ்தாதை_தேடிவந்த_அங்கீகாரங்கள்
எழுத்துத் துறையில் அவரது சிறப்பான சேவைகளுக்காக பல விருதுகளையும் அங்கீகாரங்களையும் பெற்றுள்ளார்கள்.
2011 ஆம் ஆண்டில், காலிகட் பல்கலைக்கழகத்தால் சிறப்பாகக் கௌரவிக்கப்பட்டார். 2018 ஆம் ஆண்டில், கேரளா பல்கலைக்கழகம், அஸ்ஹரி தங்கள் அவர்களின் பெயரில் நிறுவப்பட்ட அரபு மொழி பங்களிப்புக்கான முதல் விருதைப் பெற்றார். மேலும், வண்டூர் ஸதக்கத்துல்லாஹ் முஸ்லியார் அவர்களின் பெயரில் நிறுவப்பட்ட ஒரு விருதும் பெற்றார். ஆனால் அவர் மிகவும் அன்பாக நினைவில் வைத்திருக்கும் மற்ற பாராட்டுக்கள் உள்ளன. அது என்னவெனில் படிக்கல் தர்ஸ் நடத்தும் காலத்தில் குட்டி முஸ்லியாரின் ஆண்டு விழா நிகழ்ச்சிகளுக்கு பாக்கியாத் ஸாலிஹாத் அரபிக் கல்லூரியின் முதல்வர் முன்னாள் முதல்வர் மர்ஹூம் ஜைனுல் ஆபிதீன் ஹஜ்ரத்தை அழைக்கும் பணி இவரிடம் ஒப்படைக்கப்பட்டது.
இஃராபுல் இஃராப் என்ற புத்தகத்தை எழுதும் பணியில் ஈடுபட்டிருந்த நேரம் அது. மர்ஹூம் ஜைனுல் ஆபிதீன் ஹஜ்ரத் அவர்கள் நிகழ்ச்சிக்கு வந்தார்கள். ஹஜ்ரத் அவர்கள் உஸ்தாத் தர்ஸ் நடத்திக் கொண்டிருந்த மசூதியில் சாப்பிட்டுவிட்டு சிறிது நேரம் ஓய்வெடுக்க வந்தார்கள். இதற்கிடையில், உஸ்தாத் எழுதிக்கொண்டிருந்த இஃராபுல் இஃராப் என்ற புத்தகம் ஹஸ்ரத்தின் கவனத்தை ஈர்த்தது. அதைப் பார்த்தும் ஹஸ்ரத் அவர்கள் மிகவும் மகிழ்ச்சியடைந்தார்கள்
இந்தியாவில் இந்த விஷயத்தில் ஒரு நூல் கூட இல்லை என்று கூறி, பெரும் முயற்சி எடுத்து எப்படியாவது இந்நூலை எழுதி முடிக்க வேண்டும் என்று அறிவுறுத்தினார்கள்.
ஹஸ்ரத் அவர்கள் தன்னிடம் சொன்ன வார்த்தைகள்
தனக்கு தைரியமாகவும், ஊக்கமாகவும் இருந்ததை உஸ்தாத் அவர்கள் நினைவு கூறினார்கள்.
உஸ்தாத் அவர்கள் மருத்துவ துறையிலும் சிறந்து விளங்கிறார்கள். அத்தோடு தனித்துவமான சிகிச்சை சேவைகளையும் மக்களுக்கு வழங்குகிறார்கள்.
ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும்,
பல்வேறு நாட்டு மக்கள் சிகிச்சை பெற இங்கே வருகிறார்கள்.
தனது குரு அன்வர் அப்துல்லா ஃபல்ஃபரியின் சகோதரி மைமூனாவின் மகள் ரஷீதா என்பவர் தான் உஸ்தாத் அவர்களின் துணைவி. பாதிரமன்னா என்ற ஊரைச் சேர்ந்தவர் இவர். இத்தம்பதியினருக்கு
மூன்று மகன்கள் மற்றும் இரண்டு மகள்கள் உட்பட ஐந்து குழந்தைகள் உள்ளனர்.
டாக்டர். மன்சூர் ஹுதவி பாதிரமன்னா மற்றும் ஹுசைன் வாஃபி பரப்பூர் ஆகியோர் மருமகன்களாகும்.
தீன் சேவை துறையில் இன்னும் பிரகாசமாக, வலுவாக களமாட அல்லாஹ் உஸ்தாத் அவர்களுக்கு வலிமையையும், ஆற்றலையும், தௌபீக்கையும் தந்தருள்வானாக - ஆமீன்.
உஸ்தாத்தின் புத்தகங்களின் விலைத் தகவல் அடங்கிய துல்லியமான விளக்கப்படம் கருத்துப் பெட்டியில் சேர்க்கப்பட்டுள்ளது.
புத்தகங்களுக்கு அப்ஜத் வெளியீடுகளை தொடர்பு கொள்ளவும்:
+91 99471 60967
🖋️ஓ. எம் ஸெய்யித் ஆதில் ஹசன் வாஃபி..
தமிழில்:
M.#சிராஜுத்தீன்அஹ்ஸனி...
7598769505
கருத்துகள்
கருத்துரையிடுக