apabubakkarmusliyar #abubakkaarusthad #kerala #markas saqafa
#நாம்_அறிந்த_A_P_அபூபக்கர்_பாகவி
#ஹஸ்ரத்_அவர்களை_மற்றவர்களுக்கு #அறிமுகப்படுத்துவதில்_மகிழ்ச்சி #அடைகிறோம்...
இந்தியாவிலுள்ள காஷ்மீர் முதல் கேரளா வரை பல்வேறு மாநிலங்களிலுள்ள
8000 க்கும் மேற்பட்ட யத்தீம் குழந்தைகளின் பாதுகாவலர் உஸ்தாத் அவர்கள்..
புகழ் வாய்ந்த இமாம்கள், முதர்ரிஸுகள், அரபிக்கல்லூரி முதல்வர்கள், முஅல்லிம்கள்,மருத்துவர்கள், வழக்கறிஞர்கள்,பொறியாளர்களுமான 10000 க்கும் மேற்பட்ட ஸக்காபிகளின் பாசம் நிறைந்த குரு.
மதக்கல்வி சென்றிடாத உலககல்வி பெற்றிட இயலாத பல்வேறு மாநிலங்களில் 3000 க்கும் மேற்பட்ட பள்ளிவாசல்களும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட கல்வி நிறுவனங்களும் உருவாக்க முன்வந்த ஒரே ஒரு முஸ்லிம் அறிஞர் AP_உஸ்தாது அவர்கள்.
இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் குடிநீர் வசதி இல்லாதவர்களுக்கு
பல ஆயிரம் அடிபைப்புகள், வீடு, உணவு, உடை,போன்ற எண்ணிலடங்கா சமூக சேவைகளை ஏழை எளிய மக்களுக்கு செய்த,செய்து கொண்டிறிக்கிற ஒரே ஒரு ஆளுமை உஸ்தாத் அவர்கள்.
கோழிக்கோடு மர்கஸுஸ்ஸகாஃபத்தில் இஸ்லாமிய்யாவின் கீழில் மட்டும் 38000 க்கும் மேற்பட்ட மாணவர்கள் கல்வி கற்கிறார்கள், அதில் 6000 க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு உணவு, உடை, தரமான கல்வி, தங்கும் வசதி போன்றவைகளையெல்லாம் இலவசமாக வழங்கி வருகிறது மர்கஸ். சாதாரணமாக ஒருதினம் 1 லட்சம் ரூபாய் வீதம் ஒரு மாதத்தில் 1 கோடிக்கும் மேல் செலவு செய்ய தைரியம் காட்டுகிற உஸ்தாத். இந்த மாதிரி ஒரு ஸ்தாபனத்தை நடத்த யாருக்கு சாதிக்கும்.
மர்கஸின் கீழில் பல லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் பல்வேறு இடங்களில் கல்வி கற்கிறார்கள்.
மேலும் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் சுன்னத் வல் ஜமாஅத் இயக்கங்களின் கீழில் பல ஆயிரம் ஸ்தாபனங்கள் மிக அழகாக செயல் பட்டு வருகிறது. இன்னும் பல உருவாகிக்கொண்டு இருக்கின்றன. இவற்றை யெல்லாம் அழகான முறையில் நடத்தி கொண்டு இருப்பவர்கள் யார் தெரியுமா? உஸ்தாதின் அருமை மாணவர்கள்
ஒவ்வொரு நாளும் 100 க்கும் மேற்பட்ட நபர்கள் அவர்கள் எதிர்நோக்கும் பல்வேறு சிரமங்களை சொல்லி உஸ்தாது அவர்களின் உதவியை நாடி வருகின்றனர். உஸ்தாது அவர்களை எந்நேரமும் விமர்சனம் செய்பவர்களும் பல கட்டங்களிலும் உஸ்தாது அவர்களிடம் உதவி தேடிய சந்தர்ப்பங்கள் உண்டு.
நாடு,மாநிலம்,மதம், மொழி, சாதி,இயக்கம்,கட்சி,போன்ற எவ்வித பாகுபாடும் இன்றி உஸ்தாது அவர்களால் இயன்றவரை உதவிகள் புரிவது உஸ்தாதின் வழக்கம்.எவரையும் ஏமாற்றமடைய செய்ய மாட்டார்கள்
உலகெங்கிலும் இஸ்லாமிய,
சமூக செயல்பாட்டுகளுக்கு
#A_P. உஸ்தாத் அவர்கள்.
#SYS.#SSF.#SBS.#ICF.#KCF.#TMJ.#RSC. போன்ற பல்வேறு விதமான இயக்கங்களை உருவாக்கியுள்ளார்கள்.*
மாஷா அல்லாஹ் அவர்கள் உருவாக்கிய அனைத்து இயக்கங்களும் சமூக சேவைகள் செய்வதில் மிக மும்முரமாக செயல்பட்டு வருவதை அனைவரும் அறிவீர்கள்*
கேரளா,கர்நாடகம், குஜராத்,காஷ்மீர்,மேற்கு வங்காளம்,
தமிழ் நாடு,பீகார்,மும்பை,மத்திய பிரதேசம்,டெல்லி,அஸ்ஸாம்,லட்சத்தீவு போன்ற பல்வேறு மாநிலங்களிலும் உலக நாடுகளிலும் மத,சமூக,கலாச்சார,இஸ்லாமிய,
ஈமானிய,கல்வி,போன்ற காரியங்களில் இஸ்லாமிய சமூகத்தின் முன்னேற்றம், வளர்ச்சி,ஏற்படுத்த கமறுல் உலமா A.P.உஸ்தாத் அவர்களின் தலைமையில் மர்கஸும், சுன்னத் வல் ஜமாஅத் போராளிகளும் எப்போதும் நிரந்தரமாக செயல்பட்டு வருகிறார்கள்.
பள்ளிவாசல்கள்,அனாதை இல்லங்கள்,பள்ளிகள்,கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள்,தொழிற்கூடங்கள்,சமூக கலாச்சார நடவடிக்கைகள்,
ஜீவ காருண்ய செயல்பாடுகள்,
மனித நேய மாநாடுகள்,அறிவியல் மாநாடுகள், போன்றவைகளை சுன்னத் வல் ஜமாஅத் போராளிகளின் தலைமையில் செயலாற்றி மிகப்பெரிய வெற்றி கண்டவர்கள் ஸுல்தானுல் உலமா
A.P உஸ்தாத் அவர்கள்.
அல்லாஹ் மேலும் இதுப்போன்ற நற்பணிகளை உஸ்தாத் அவர்களின் தலைமையில் செயலாற்ற அருள்புரியவானாக.
இதற்கு ஊன்று கோலாக திகழும் இந்தியன் கிராண்ட் முஃப்தி
ஹழ்ரத் A.P. உஸ்தாத் அவர்களுக்கும் மற்ற உஸ்தாதுமார்களுக்கும் நீண்ட ஆயுளையும் முழு ஆரோக்கியத்தையும் வழங்கி இனியும் பல ஆண்டு தலைமை தாங்கி பல முன்னேற்றங்களையும் வெற்றிகளையும் சந்திக்க
அருள்புரி யா அல்லாஹ்
இந்தியாவில் A.P. உஸ்தாதின் அளவிற்கு விமர்சனங்களையும், அவதூறுகளையும் வேறு எந்த மார்க்க அறிஞரும் சந்தித்து இருக்க வாய்ப்பில்லை.
விமர்சனம் செய்பவர்கள் ஒரு கணம் சிந்தியுங்கள்
உஸ்தாத் செய்த நற்பணிகளில் ஒரு சின்ன பகுதியை நம்மால் செய்ய முடியுமா? காஷ்மீர் மக்களுக்காக கண்ணீர் வடிக்கும் நாம் அவர்களுக்காக என்ன செய்தோம். ஆனால் உஸ்தாத் அவர்கள் அங்கு சென்று முதலமைச்சரை சந்தித்து ஏழை எளிய அனாதை குழந்தைகளை தன் நிறுவனமான மர்கஸிற்கு கொண்டு வந்து, கல்வி கொடுத்து, குண்டு சத்தங்கள் இல்லாத, பூட்ஸுகளின் ஓசையில்லாத, நிம்மதியான வாழ்வை வழங்கி அவர்கள் இன்று பட்டம் பெற்று பல்வேறு துறைகளில் பணியாற்றுகிறார்கள்.
இப்போதும் காஷ்மீரை சேர்ந்த பல குழந்தைகள் கல்வி கற்றுக் கொண்டு இருக்கிறார்கள். இப்படி உஸ்தாத் அவர்கள் செய்த சேவைகள்தான் எத்தனை
மதநல்லிணக்கம்,மனித நேயம்,சகோதரத்துவம் வளர்ந்து ஓங்க, மனிதர்களுக்கு மத்தியில் குரோதங்கள் விலகிட உஸ்தாத் அவர்கள் தலைமையில் காசர்கோடு முதல் திருவனந்தபுரம் வரை மிகப்பெரிய இரண்டு பயணங்கள் மேற்கொள்ளப்பட்டது.
இது நாள் வரை எந்த மார்க்க அறிஞரும் செய்திடாத ஒரு அழகிய பயணம் இதன் மூலம் பல்வேறு மாற்றங்கள் உருவாக்க முடிந்தது என்று சொன்னால் அது மிகையாகாது.
உஸ்தாதின் ஸ்தாபனங்களிலுள்ள ஆயிரக்கணக்கான மாணவர்கள், அனாதை குழந்தைகள்குழந்தைகள்,
மார்க்க அறிஞர்களின் பிரார்த்தனையும், முன்னோர்களின் துஆவும், நல்லடியார்களின் ஆசிர்வாதமும், உஸ்தாதின் முயற்சியால் கட்டப்பட்ட பள்ளிவாசல்களில் ஜனலட்சங்கள் செய்கிற ஸுஜூதின் மேன்மையும்,லட்சகணக்கான சுன்னத் வல் ஜமாஅத் தொண்டர்களின் துஆவும், சக்தியும், ஒற்றுமையும்தான் எதிரிகளையும் விமர்சனம் செய்பவர்களையும் தகர்த்து,தளர்த்தி கொண்டிருக்கிறது.
அல்லாஹ் மேன்மேலும் உஸ்தாத் அவர்களுக்கு நீண்ட ஆயுளையும் பரிபூரண ஆரோக்கியத்தையும் வழங்கி அருள்புரியவானாக......*
கருத்துகள்
கருத்துரையிடுக