நாற்பது வயது
*உங்களுக்கு 40+வயதா?*
மதீனாவாசிகள் 40வயதை அடைந்ததும்,
இபாதத்திற்காக -துன்யாவினின்றும் ஒதுங்கிக் கொள்வார்கள்....*நவவி இமாம்*/ரியாளுஸ் ஸாலிஹீன்.
மதீனாவாசிகளில் உள்ள அறிவாளிகள்-40வயதை எய்தியதும்-துன்யா சம்பந்தமான தொடர்புகளை ,சந்ததிகளிடம் ஒப்படைத்துவிட்டு, இபாதத்தின் பக்கம் ஒதுங்கிக் கொள்வார்கள்....
*மாலிக் இமாம்*/தப்ஸீர் குர்துபி.
மதீனாவாசிகள் 40வயதை அடைந்ததும்- (மேற்கொண்டும் சம்பாதிக்க முயலாமல்) சம்பாதித்ததை-இறைவழியில் செலவு செய்வதில் மட்டும், கவனம் செலுத்துவார்கள்....
*ரியாளுஸ் ஸாலிஹீன்*/பாபுல் முஜாஹிதா.
மதீனாவாசிகள் 40வயதை எய்தியதும்,துன்யா சம்பந்தமான தொடர்புகளை துண்டித்துக் கொள்வார்கள்......35:37 & 46:15-16 ஆயத் விரிவுரை/ *தப்ஸீர் இப்னுகதீர்,தப்ஸீர் அமானி, தப்ஸீர் ஸஃதீ*.
மாபெரும் முஜ்தஹிதான-ஹழ்ரத் உமர்பின் அப்துல் அஸீஸ் ரஹ்மதுல்லாஹி அலைஹி அவர்கள்-40வயதுவரை மட்டுமே ஜீவித்திருந்தார்கள். உம்மத்தே முஹம்மதிய்யாவின் வயது-60க்கும் 70க்கும் இடைபட்டதே-ஹதீஸ்/திர்மிதி:3550.
இதனை மையமாக வைத்து- *ஹழ்ரத் இப்னு அப்பாஸ்,இமாம் மஸ்ரூக்,இமாம் ஷவ்கானீ* ....
போன்றவர்களும்,
இதனை பேணும்படி வலியுறுத்தியுள்ளார்கள்.
வல்லபம் -அதற்கும் மேலோர் மனதுக்கும் இடையினுள்ளே,
*இல்லறம் எவர்க்கும் எட்டாது* இருக்கும் ஒன்றிங்கு வாய்த்த,
நல்லறம் எதற்கும் ஒப்பாத - நான்மறைதனிலும் காணாச்,
சொல்லறம் அதற்கு-இன்பம் சொரிந்தருள்-அருந்துய்யோனே.
(ஞானப்புகழ்ச்சியில் *பீரப்பா நாயகம்*/386)....qit
கருத்துகள்
கருத்துரையிடுக