இடுகைகள்

பிப்ரவரி, 2023 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

நாற்பது வயது

*உங்களுக்கு 40+வயதா?* மதீனாவாசிகள் 40வயதை அடைந்ததும், இபாதத்திற்காக -துன்யாவினின்றும் ஒதுங்கிக் கொள்வார்கள்....*நவவி இமாம்*/ரியாளுஸ் ஸாலிஹீன். மதீனாவாசிகளில் உள்ள அறிவாளிகள்-40வயதை எய்தியதும்-துன்யா சம்பந்தமான தொடர்புகளை ,சந்ததிகளிடம் ஒப்படைத்துவிட்டு, இபாதத்தின் பக்கம் ஒதுங்கிக் கொள்வார்கள்.... *மாலிக் இமாம்*/தப்ஸீர் குர்துபி.  மதீனாவாசிகள் 40வயதை அடைந்ததும்- (மேற்கொண்டும் சம்பாதிக்க முயலாமல்) சம்பாதித்ததை-இறைவழியில் செலவு செய்வதில் மட்டும், கவனம் செலுத்துவார்கள்.... *ரியாளுஸ் ஸாலிஹீன்*/பாபுல் முஜாஹிதா. மதீனாவாசிகள் 40வயதை எய்தியதும்,துன்யா சம்பந்தமான தொடர்புகளை துண்டித்துக் கொள்வார்கள்......35:37 & 46:15-16 ஆயத் விரிவுரை/ *தப்ஸீர் இப்னுகதீர்,தப்ஸீர் அமானி, தப்ஸீர் ஸஃதீ*.  மாபெரும் முஜ்தஹிதான-ஹழ்ரத் உமர்பின் அப்துல் அஸீஸ் ரஹ்மதுல்லாஹி அலைஹி அவர்கள்-40வயதுவரை மட்டுமே ஜீவித்திருந்தார்கள். உம்மத்தே முஹம்மதிய்யாவின் வயது-60க்கும் 70க்கும் இடைபட்டதே-ஹதீஸ்/திர்மிதி:3550. இதனை மையமாக வைத்து- *ஹழ்ரத் இப்னு அப்பாஸ்,இமாம் மஸ்ரூக்,இமாம் ஷவ்கானீ* .... போன்றவர்களும், இதனை பேணும்படி வ...

#மதரஸாக்கள்

மதரஸாக்கள் மூன்று வகை மக்தபு மதரஸாக்கள், பெண்கள் மதரஸாக்கள்,அரபு மதரஸாக்கள் எனும் அரபுக் கல்லூரிகள். அரபு மதரஸாக்கள் ஆலிம் களை உருவாக்கும் மதரஸாக்கள் .இந்தியாவிலேயே முன்னுதாரணமாக தேவ் பந்த் மதரஸாவும்,தமிழ் நாட்டு மதரஸாக்களின் தாய்க்கல்லூரி வேலூர் பாக்கியாத் தும் இருக்கின்றன. இந்த மதரஸாக்கள் ஏழு வருட காலங்கள் மாணவர்களை தங்கவைத்து மூன்று வேளை தரமான உணவு கொடுத்து , மருத்துவம் பார்த்து அன்றாட செயல்பாடுகளை கண்காணிக்கும்! தொழுகை ஒழுக்கம் ,நடைமுறை உணவு உடை ,ஐவேளை தொழுகை தஹ்ஜுத் தொழுகை .இரவு பாடம் பார்க்குதல் அனைத்தையும் கவனிக்கவேண்டும். மொத்தத்தில் காலேஜ் போல் அல்லாமல் தர்பிய்யத் கொடுத்து கண்காணிக்கப்பட்டுதான் ஆலிம்களாக பட்டம் கொடுக்கப்படும்.  இது சாதரணம் அல்ல! இது போன்ற மதரஸாக்கள் தான் அங்கீகரிக்க பட்ட மதரஸாக்கள். அரபுக் கல்லூரியில் உள்ள எல்லா ஆசிரியர்களிடமும் நற்பெயர் எடுத்தால் தான் அவருக்கு ஸனது டிகிரி வழங்குவார்கள்! மற்ற இரு மதரஸாக்களை விட பொறுப்பு, கண்காணிப்பு உழைப்பு பொருளாதாரம் இதற்கு அதிகம் தேவைப்படும்.

#வஹ்ஹாபி #மத்ஹப் #குழப்பவாதிகள் #tntj #jaac #இயக்கங்கள்

வஹ்ஹாபிகளிடம் சில கேள்விகள்... 1. ஜுமுஆவிற்கு இரட்டை பாங்கு சொல்வது பித்அத் என்றால் அதை உருவாக்கி அறிமுகம் செய்து அனுமதித்த உஸ்மான் ரலியல்லாஹு அன்ஹு அவர்களின் நிலை உங்கள் பார்வையில் என்ன....? 2. தராவீஹ் தொழுகையை ஜமாத் நடத்தி தொழும் படி ஏவியதோடு அந்த தொழுகையை 20 ரக்அத்துக்களாக தொழுவதற்கு ஆணையிட்ட உமர் ரலியல்லாஹு அன்ஹு அவர்களின் நிலை உங்கள் பார்வையில் என்ன..? 3. நபி அவர்களின் காலத்திற்கு பின்னால் வந்த அனைத்துமே பித்அத் தான் என்றால் குர்ஆனை ஒருங்கிணைத்து இரண்டு அட்டைக்கு நடுவில் நூல் வடிவில் அமைப்பதற்கு அனுமதி கொடுத்த கலீபா அபூபக்கர் ரலியல்லாஹு அன்ஹு அவர்களின் நிலை உங்கள் பார்வையில் என்ன..? 3. எனது ஹதீஸ்களை எழுத வேண்டாம் என்று நேரடியாக நபி அவர்கள் தம் தோழர்களுக்கு தடை விதித்த நிலையில்... அனைத்து நபி மொழிகளையும் எழுதி சமுதாயத்திற்கு கொடுத்த ஹதீஸ்களை வல்லுனர்கள் அனைவரின் நிலை உங்கள் பார்வையில் என்ன...? 4. மத்ஹப்களை பின்பற்றுவது வழிகேடு என்பது உங்களின் வாதம் என்றால் அந்த மத்ஹப்களை உருவாக்கிய நான்கு பரிசுத்த இமாம்களின் நிலை உங்கள் பார்வையில் என்ன..? 5. நபித்தோழர்களை மார்க்க விஷயத்தில் பின்பற்...

#arab #அரபி #பழமொழி

படம்
அறபு மொழியின்‌ அழகை ரசிக்க விரும்புவர்களுக்காக!* கீழுள்ள அறபு வரிகள் சொல்லும் செய்தியை தமிழில் தருகிறேன். "மக்களில் சிறந்தவர், குறைந்த பேச்சும் நிறைவான செயல்பாடும் உள்ளவரே! மக்களில் தீயவர், நிறைவான பேச்சும் குறைந்த செயல்பாடும் உள்ளவரே! எத்தனையோ செயல்திட்டங்கள், ஆரவாரம் இன்றி நிறைவேற்றப்படுகின்றன. எத்தனையோ பேச்சுக்கள், செயல் உருவம் பெறாமலேயே செத்துப் போய் விடுகின்றன. வாய்களை பூட்டி வையுங்கள்! கைகளை அவிழ்த்து விடுங்கள்!!"