#கீரனூர் #பள்ளிவாசல்#மினாரா#keranor#minara#masjith#pallivasal

✤✤✤✤✤✤✤✤✤✤✤✤✤✤✤✤✤
                _*கீரனூர்.*_
✤✤✤✤✤✤✤✤✤✤✤✤✤✤✤✤✤


இந்த ஊரின் மிக பெரும் சிறப்பு
அற்புதமான அழகான பள்ளி வாசல் ஒன்று உள்ளது,

இந்த பள்ளி 1906 ல் முழுக்க முழுக்க கிரானைட் கற்களால்
மிக நேர்த்தியாக அழகாக கட்டபட்டுள்ளது,

இந்த பள்ளி அன்றைய காலத்தில்12ஆண்டுகளாக
கட்டி முடித்துள்ளார்கள்,

சிமெண்டோ மணல்களோ கலக்காமல் கிரானைட் (மார்பல்) கற்கலாலேயே மிக பிரமாண்டமாக கட்டபட்ட அற்புதம்,

பல வண்ண கற்கலால் அழகிய வேலைபாடுடன் அமைத்துள்ளது இப் பள்ளிக்கு மேலும் அழகு சேர்க்கிறது.

மேலும் இப்பள்ளியின் தூன்கள் சுமார் 30 அடி உயரம் உள்ள ஒரே கல்லில் செதுக்கபட்டு 6 தூண்கள் நிறுவி உள்ளார்கள்,

அந்த தூண்களை பார்த்தால் ஆச்சரியம் நிலவுகிறது,

இக் கற்கள் அனைத்தும் பல நூறு மைல்களுக்கு அப்பால் இருந்து கொண்டு வந்திருக்கிறார்கள்.

பர்மாவில் இருந்து கொண்டு வரப்பட்ட தேக்கு மரங்களை உபயோக படுத்தி உள்ளார்கள்,

இப்பள்ளியில் உள்ள ஜன்னல் கம்பிகள் செம்பு பித்தாளையில் அழகிய வேளைப்பாடுடன் அமைத்துள்ளது கண்களை கவருகிறது,

இரண்டு மினாராக்கள் அழகிய வேலைபாடுகளுடன் கம்பீரமாக காட்சி தருகிறது,

இந்த மினாராக்கள் 5 கிலோ மீட்டர் தூரத்திற்கு காட்சி தருகிறது,

இந்த பள்ளியை பார்த்து தான் நம் ஊர் கிழக்கு பள்ளியை வடிவமைத்து கட்டியதாகவும் சொல்கிறார்கள்,

இந்த பள்ளியை கட்ட அன்றைய காலத்தில் 55 ஆயிரம் ரூபாய் சிலவு ஆனதாக குறிப்பு உள்ளது,

அடுத்த சிறப்பு இந்த பள்ளியில் இமாமாக இது வரை பனிபுரிந்தவர்கள்,

கடைசி வரை இதே பள்ளியில் பல ஆண்டுகள் பணிபுரிந்து இங்கேயே மறைந்து இங்கேயே அடக்கபட்டுள்ளார்கள்,

தற்போது அமானுல்லா பாகவி அவர்கள் 1986 முதல் இமாமாக பணிபுரிகிறார்கள்,

இவர்களின் மதுரமான குரலில் கிராஅத்துடன் தொழ வைப்பது மனதை மயக்குகிறது.

இப்படி பட்ட சிறப்புவாய்ந்த இப் பள்ளியில் நாம் ஒரு நேர தொழுகையாவது இன்ஷா அல்லாஹ் தொழ முயற்சி செய்யலாம்.......
  _*அன்புடன் அன்வர்பாஷா பள்ளப்பட்டி 

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அரபி மதரஸாக்கள்

மவ்லித் ஷரீஃப் ஓதுவோம் வாருங்கள்

கல்வியா?செல்வமா?