#புஹாரி #புகாரி #இமாம் #buhari


இமாம் புகாரி ரலியல்லாஹு அன்ஹு ஹிஜ்ரி 194(கி..பி.810) ஷவ்வால் பிறை 13 வெள்ளிக்கிழமை அந்தி வேளை புகாராவில் பிறந்தார்கள். இமாம் அவர்களின் இயற்பெயர் முஹம்மது அபூ அப்தில்லாஹ். ஹதீதில் அமீறுல் முஃமினீன், நாஸிறுல் அகாதீஸின் நபவிய்யா, நாஷிறுல் மவாரீதில் முஹம்மதிய்யா என்பன சிறப்புப் பெயர்களாகும். ஆனால், ‘புகாரி‘ என்ற பெயராலேயே இமாமவர்கள் பிரபலமாயிருந்தார்கள்.

இமாமவர்களின் முப்பாட்டனார்‘முஙீறா‘ என்பவர் அப்போது புகாறாவின் அதிகாரியாக விளங்கிய யமான் ஜுஃபி என்பவர் மூலம் இஸ்லாத்தைத் தழுவினார்கள். இமாமவர்களின் தந்தை இஸ்மாயீல் பின் இப்றாஹீம் பின் முஙீறா என்பவர் மிகச் சிறந்த அறிஞரும் கண்ணியத்திற்குரிய மகானாகவும் விளங்கினார்கள்.

குழந்தை பருவம்

இமாமவர்கள் சிறு வயதிலேயே தந்தையை இழந்து அநாதையானார்கள். தாயின் மடியிலேயே வளர்ந்தார்கள். குழந்தைப் பருவத்தில் பார்வையை இழந்தார்கள். இயலுமான எல்லா வழிகளாலும் பரிகாரம் தேடியும் பலன் கிட்டவில்லை. தனது செல்ல மகனின் நயனம் திறக்க நாளெல்லாம் தாய் அழுது அல்லாஹ்விடம் இறைஞ்சிக் கொண்டேயிருந்தார்கள்.

ஒரு நாள் கலீலுர் ரஹ்மான் ஹழரத் இப்றாஹீம் அலைஹிஸ்ஸலாம் அவர்களை இமாமவர்களின் அன்னையவர்கள் கனவில் கண்டார்கள். அல்லாஹ் உங்கள் இறைஞ்சுதலை ஏற்றுள்ளான். உங்கள் செல்லப் பிள்ளையின் பார்வை மீண்டுள்ளது என்று சோபனம் கூறினார்கள். பொழுது புலரும்போது பார்வையுடன் கண் விழித்தார்கள் இமாமவர்கள் அவர்களின் கூர்மையான பார்வையால் நிலா ஒளியிலும் ஏடெடுத்து வாசிக்கும் திறன் பெற்றிருந்தார்கள்.அறிவிப்பாளர்களின் நம்பகத்தன்மை அறியப்படுகிறது. 16லட்சம் ஹதீஸ்களை சேகரித்துள்ளார்கள், அவைகளில் 7275ஷஹீஹான ஹதீஸ்களை நமக்கு தொகுத்துத் தந்துள்ளார்கள். இவைகளை மூன்று முறை சரி பார்த்துள்ளார்கள்.)

அவற்றில் சில 1.அல் அதபபுல் முஃப்ரத் 2.அத்தாரீகுல் கபீர் 3.அத்தாரீஸ் ஸஃகீர் 4.அல் முஸ்னதுல் கபீர் 5.அத்தஃப்சீரல் கபீர் 6.அல் மப்சத் 7.அல்ஹிபா 8.அல் அ`ரிபா 9.அல்வஹ்தான் 10.அல் இலல்.
அறிவிப்பாளர்கள் பற்றிய அறிவும், அதில் உள்ள குறைகள் பற்றிய தெளிவும் இமாம் புகாரியை விட அதிகம் தெரிந்தவர் எவரும் இருக்கவில்லை“

இமாம் முஸ்லிம் அவர்கள் இமாம் புகாரி அவர்களைச் சந்தித்தால் உங்களை மிகைத்த பேரறிஞர் உலகில் எவருமில்லை. என்று கூறிவிட்டு முகத்திதுகளின் தலைவரே! ஆசான்களுக்கெல்லாம் பெரிய ஆசானே! உங்கள் பாதத்தை முத்தமிடுவதற்கு எனக்கு அனுமதி தாருங்கள் என்று கூறுவார்கள்.

இமாம் புகாரி ரழியல்லாஹு அன்ஹு பகுதாதிலிருந்து ஹிஜ்ரி 250இல் நைஸாபூர் வந்து சேர்ந்தார்கள். அன்னாரின் வருகையை அறிந்த நைஸாபூர் மக்கள் பல பாதத் தூரம் சென்று அவர்களை வரவேற்றார்கள். இமாமவர்களைவரவேற்பதில் உலமாக்கள், தலைவர்கள், கனவான்கள் என்று எல்லாத்தரப்பினரும் பங்கேற்றனர்.

இமாம் புகாரி அவர்கள் ஹதீது வகுப்புக்களை ஆரம்பித்ததும் எட்டுத்திசையிலிருந்தும் மக்கள் திரண்டு வர ஆரம்பித்தனர். மக்கள் வெள்ளம் அரங்கை நிரைந்து வெளியிலும் மிகத்தூரம் வரை நீண்டிருந்தது. இதனால் அங்கு பல்வேறு இடங்களிலும் வழக்கமாக நடை பெற்றுக் கொண்டிருந்த ஹதீஸ் வகுப்புக்கள் ஆள் இல்லாமல் ஸ்தம்பித்து போய்விட்டது.

இமாமவர்கள் வாழ்ந்த காலம் முஹ்தஸிலாக்களின் வளர்ச்சி பெற்ற காலமாகும். குர்ஆன் படைக்கப்பட்டது என்ற முஃதஸிலாக்களின் வாதம் பட்டி தொட்டி எங்கும் அதிகம் விவாதிக்கப்பட்டுக்கொண்டிருந்தது. குர்ஆன் அல்லாஹ்வின் கலம் (பேச்சு) ஆகும். அல்லாஹ்வின் ஏனைய பண்புகள் போன்று அல்லாஹ்வின் பேச்சும் ஒரு பண்பாகும். அல்லாஹ்வின் எப்பண்பும் படைக்கப்பட்டவை அல்ல அவை பூர்வீகமானவையாகும் என்பது சுன்னத் வல்ஜமாஅத்தின் அசையாத நம்பிக்கையாகும்.

திருக் குர்ஆன் அல்லாஹ்வின் பேச்சாக இருப்பதினால் திருக்குர்ஆன் ஒரு படைப்பு அன்று அது அநாதியானது. இந்த வாதம் முஃதஸிலாக்களுக்கு எதிராகும். இவர்கள் குர்ஆன் படைக்கப்பட்டது என்று வாதிக்கின்றனர்.

இமாம் புகாரி ரலியல்லாஹு அன்ஹுநைஸாபூரில் 2, 3 நாட்களாக எந்த சலசலப்புமின்றி ஹதீஸ் வகுப்பை நடாத்திக் கொண்டிருந்தபோது சபையில் ஒருவர் எழுந்து குர்ஆன் படைக்கப்பட்டதா? இல்லையா? என்று ஒரு கேள்வி எழுப்பினார். இமாம் புகாரி அவர்கள் இவர் கேள்வியை கணக்கில் எடுக்கவில்லை. அம்மனிதர் விடவில்லை. பலமுறை கேட்டு நச்சரித்தார். ஈற்றில் வேறு வழியின்றி குர்ஆன் படைக்கப்பட்டதல்ல மனிதனின் செயல்கள்தான் படைக்கப்பட்டது. இது பற்றிய சோதனை பித்அத் என்று இமாமவர்கள் விடை பனர்ந்தனர்.
சிரமத்துடன் இருபது எட்டுக்கள் எடுத்து வைத்தார்கள். அவர்களால் நடக்க முடியவில்லை.

என்னை விட்டுவிடுங்கள். மிகக்கடினமான பலவீனம் என்னில் காணப்படுகின்றது என்று கூறிய இமாமவர்கள் இருகரம் ஏந்தி – சிறிது நேரம் துஆக் கேட்ட பின் சாய்ந்து படுத்தார்கள். அவர்கள் படுத்ததுமே அவர்களின் உயிர் வல்லறஹ்மான் திரு சன்னிதானத்திற்கு ஹிஜ்ரி 256 (கி.பி. 870) ஷவ்வால் மாதம் முதல் நாள் சனிக்கிழமை இரவு சமர்க்கந்து நகரில் பதின்மூன்று நாட்கள் குறைவாக 62ஆம் வயதில் ஷவ்வால் முதல் நாள் ஏகியது. இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி றாஜிஊன்.மறுநாள் பெருநாள் ளுஹர் தொழுகையின் பின் நல்லடக்கம் செய்யப்பட்டார்கள்.
இமாமவர்களின் றூஹ் உடலை விட்டும் பிரிந்தபின் உடலிலிருந்து அதிகம் வியர்வை வெளியேறியது. கபன் அணியும் வரை வியர்வை கட்டுக் கடங்காமல் வெளியேறிக் கொண்டிருந்தது.

இமாமவர்களை நல்லடக்கம் செய்யப்பட்டதன் பின் அன்னாரின் கப்றிலிருந்து கஸ்தூரி வாடை வெளியேறத் தொடங்கியது. மிகத்தூரத்திலிருந்தெல்லாம் மக்கள் திரண்டுவந்து அன்னாரை ஸியாரத் செய்ததோடு கஸ்தூரி மணம் கமழும் கப்று மண்ணையும் எடுத்துச் செல்லத் தொடங்கினார்கள். இமாமவர்களின் இக்கறாமத்தைப் பார்த்த பின் தொல்லை கொடுத்த அதிருப்தியாளர்களும் மக்பறாவுக்கு வந்து ஸியாறத் செய்த பின் மனம் வருந்திச் சென்றனர்.

இமாம் புகாரி ரலியல்லாஹு அன்ஹுவபாத்தாகி ஓர் ஆண்டு கழிந்த பின் ஸமர்கந்தில் மழை பெய்யாததால் கடும் பஞ்சம் ஏற்பட்டது. பல முறை மழைதேடித் தொழுதார்கள். துஆக் கேட்டார்கள். மழை கிடைக்கவில்லை. இறுதியாக ஒரு நல்லடியார் ஸமர்கந்த் காழியிடம் சென்று,

ஸமர்கந்த் மக்களை அழைத்துக் கொண்டு இமாம் புகாரி ரலியல்லாஹு அன்ஹுகப்றடிக்கு சென்று அங்கிருந்து கொண்டு அல்லாஹ்விடத்தில் துஆக் கேழுங்கள். அல்லாஹுத்தஆலா உங்கள் துஆவை கபூல் செய்வான் என்று ஆலோசனை கூறினார்கள்.

மக்களை அழைத்துக்கொண்டு இமாம் புகாரி ரலியல்லாஹு அன்ஹுஅவர்களின் கப்றடிக்குச் சென்ற ஸமர்கந்த் காழி அங்கிருந்து கொண்டு மக்களோடு உருக்கமாக துஆக் கேட்டார். எமது துஆ கபூலாவதற்காக சிபாரிசு செய்யுமாறு இமாம் புகாரி ரலியல்லாஹு அன்ஹுயிடத்திலும் வேண்டுதல் விடுத்தார்.

துஆக் கேட்டுக் கொண்டிருக்கும்போதே வானத்தில் மேகங்கள் திரண்டு சூழ்ந்து கொண்டன. பின் மழை கொட்டு கொட்டாகக் கொட்டியது. மக்கள் ஸமர்கந்த் செல்வதற்கு சிரமப்படும் அளவு மழை கொட்டியது.

ஆதாரம் : தபகாத்துஷ்ஷாபிஅத்துல் குப்றா, பாகம் 02, பக்கம் 15

இமாம் புகாரியின் மாணவர்கள் : இமாம் முஸ்லிம், இமாம் திர்மிதீ, இமாம் இப்னு ஹுஸைமா, இமாம் அபுதாவூத் மற்றும் பலர்

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அரபி மதரஸாக்கள்

மவ்லித் ஷரீஃப் ஓதுவோம் வாருங்கள்

கல்வியா?செல்வமா?