#முன்மாதிரி மனிதர் #நபிகள் நாயகம்

பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம் அல்லாஹும்ம ஸல்லி அலா சையதினா முஹம்மதின் வ அலா ஆலி சையதினா முஹம்மதின் வ பாரிக் வஸல்லிம் அலைஹி

நபியே! நாயகமே!
மனிதர்களில் நீங்கள் ஒரு மாதிரி 
ஆம்! நீங்கள் ஓர் அழகிய முன்மாதிரி !

யாரைப் படைக்கா விட்டால் இவ்வையகம் உதித்திருக்காதோ
அப் புகழுக்குரியோரே!
 நீர் தான் ஈருலகின் பெரும் முன்மாதிரி !

குழந்தைகளும் பாடம் கற்க
 தன் பாதையிலே பாடம் சொன்ன
 தாஹா நபியே- நீங்கள் முன்மாதிரிகளுக்கெல்லாம் ஓர் அழகிய முன்மாதிரி!

வாலிப மிடுக்கில் 
வயதுக் கோளாறில்
 பாவங்கள் சூழ்ந்து கொள்ள சைத்தான் துணை நிற்க
 இளமை பருவத்திலும் 
இறையோன் வழி நடக்க
வழிகாட்டிய வள்ளலே
 நீர் அழகிய முன்மாதிரி 


குடும்பத் தலைவராய்!
 மனைவிக்கு கணவராய்!
 தாய்க்குப் பிள்ளையாய்!
 பிள்ளைக்கு நல் தந்தையாய்!
உறவுக்கு ஊன்றுகோலாய்! 
அகிலத்திற்கே அருட்கொடையாய்!
வாழும் கலை பயிற்றுவிக்கும் 
மேன்மை நபி நாதரே!
 நீர் ஓர் அழகிய முன்மாதிரி 

அரசியலா ?ஆன்மீகமா ?
விஞ்ஞானமா? மெஞ்ஞானமா?குடும்பவியல் முதல் பொருளியல் வரை அனைத்து துறைகளுக்கும் தாங்களே இவ்வுலகில் அழகிய முன்மாதிரி !

உயர்ந்த நற்குணத்தில் உதித்தவரே !
உயர் வாழ்க்கை வழி உரைத்தவரே!
நாளை மஹ்ஷரிலும் எம் கரம் பிடிப்பீரே நாயகரே!


மௌலானா மௌலவி 
S.முஹம்மது இல்யாஸ் பாகவி
மேட்டுப்பாளையம்
Cell-8695553384

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அரபி மதரஸாக்கள்

மவ்லித் ஷரீஃப் ஓதுவோம் வாருங்கள்

கல்வியா?செல்வமா?