#தர்கா #தர்ஹா



Abdul Azeez Baqavi

*ரப்பே! ரப்பே!* 
———————

*சமீபத்தில் கேரள மாநிலம் மடவூர் ஜியாரத்தின் போது என் காதில் அதிகம் விழுந்த வார்த்தைகள்* 
*ரப்பே! எங்கனயாகிலும் சரியாக்கி தரனுமே! ரப்பு ஷிஃபா நல்கணும்! எங்கள காக்கனும் ரப்பே!* 

*இவர்களிம் எவரும் சி எம் வலியுல்லாஹ்வை ரப்பு என்று சொல்லவில்லை. தர்காவிற்கு வந்து, ரப்பை மறக்கவும் இல்லை.*

*இங்கு வருவோரில் 90 சதவீதம் பேர் குறைந்தது ஒரு யாசீன் ஒதுகிறார்கள். 95 சதவீதம் பேர் ஏதேனும் தர்மம் செய்கிறார்கள். நூறு சதவீதம் பேர் ஒரு முறையாகிலும் ரப்பே என்று அல்லாஹ்வை அழைக்கிறார்கள்.*   

*இங்கு சதகதுல் ஃபித்ரை கொள்ளையடிப்பதில்லை*
*: ஜகாத் பணத்தில் மஜா செய்வதில்லை: கவலையோடு வரும் அடுத்தவர் பெண்டிரை ஆட்கொள்வதுமில்லை*
: *போலீஸ்காரார்களிடமிருந்து தப்பிப்பதற்காக பெண்களை முன்னிறுத்தி அரசியல் செய்வதில்லை எல்லாவற்றிற்கும் மேலாக “தாவா” வியாபரம் நடத்துவதில்லை..* 

*இயக்கத்தை கடவுளாக்கி கொண்ட பேர்வழி ஒருவர் எனது முந்தைய பதிவிற்கு ஷிர்கு பற்றிய் ஒரு குர் ஆன் வசனத்தை கமெண்ட் செய்திருந்தார்.* 

*அவரைப்போன்றவர்களுக்கான ஒரு சின்ன ஆலோசனை!*

*உங்களது இயக்கங்களின் சீல் பிடித்த ஷிர்க் அளவுக்கு தர்காக்களில் தீமைகள் நடப்பதில்லை.*

*அ விலிருந்து ஃ வரைக்குமான உங்களுடைய ஆட்களை கொஞ்சம் பட்டியலிட்டு சிந்தித்துப் பாருங்கள்.*

*பணக்காரகளுக்கும் அரசியல்வாதிகளுக்கும் சலாம் போடுவதற்கும் உங்களை மிஞ்ச யாரும் உண்டா என்று யோசித்து பாருங்கள்!* 

*வலிமார்கள் வாழ்ந்த போதும் அல்லாஹ்வை நோக்கி மக்களை ஈர்த்தார்கள். மறைந்திருந்தும் மக்களை அல்லாஹ்வை நோக்கியே இழுக்கிறார்கள்.*

*மஹப்பத் எனும் கயிறு கொண்டு.*

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அரபி மதரஸாக்கள்

மவ்லித் ஷரீஃப் ஓதுவோம் வாருங்கள்

கல்வியா?செல்வமா?