#அம்பேத்கர்
*அண்ணல் அம்பேத்கர் நினைவுநாள் டிசம்பர் - 6 (1956)*
**********
*6-12-1956 இல் அண்ணல் அம்பேத்கர் மறைந்த பின்னர்...*
*36 ஆண்டுகள் கழித்து அதே (1992) டிசம்பர் 6 ல் பாஜக மதவெறியர்கள் பாபர் மசூதியை இடித்துத் தரைமட்டமாக்கினர்.....*
*நாட்டில் ஜாதி, மத, இனவெறி இன்னும் சாகவில்லை என்றும் கூத்தாடிய நாளும் இன்றுதான்.*
*அம்பேத்கரை இன்று சாதித் தலைவர் என்ற கூண்டுக்குள் (அவரது சிலைகள் பல இடங்களில் கூண்டுக்குள் தான் அடைத்து வைக்கப்பட்டுள்ளது) வைத்து கொண்டாடுவது ஏன்?*
*1935 இல் அவரின் சாதி ஒழிப்பு மாநாட்டின் சொற்பொழிவைக் கேட்டவர்கள்...உடனே மாநாட்டைத் தொடராமல் கலைத்துவிட்டனர்.*
*_"வர்க்கப்போராட்டமே சாதி ஒழிப்புக்கு வழிவகுக்கும்"_ என்ற கருத்து அச்சங்கத்தினரால் ஏற்றுக்கொள்ளப்படவில்லை.*
*_"இந்தியாவில் சாதி ஒழிப்பபுப் போராட்டங்கள் வெறும் விளம்பரங்களே"_ என்பதும்,*
*"இவைபோன்ற சாதிச்சங்கங்கள் வணிகமயமாக்கப்பட்டுள்ளன" என்பதும்*
*1935ல் அவர் காலத்திலேயே நிரூபணமாக்கப் பட்டுள்ளது.*
*இன்று சாதிவாரிக் கணக்கெடுப்பு ஏன் தேவை என்பதற்கு சில உண்மைகளை அனைவரும் அறிந்துகொள்வது அவசியம்.*
*1935 இல் 429 சாதிகளுள் தாழ்த்தப்பட்ட மக்கள் இருந்தனர்.*
*அவர்களின் எண்ணிக்கை 60 மில்லியன் (6 கோடி)..*
*இந்தக் கணக்கெடுப்பின் அடிப்படையில்தான் இன்றுவரை (17+1)18 விழுக்காடு இடஒதுக்கீடு அளிக்கப்பட்டு வருகிறது.*
*இன்று தலித்துகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளபோதும்...*
*இடஒதுக்கீடு அதற்கேற்றாற்போல போதுமானதாகத் திருத்தப்பட வேண்டாமா?*
*சாதிவாரிக் கணக்கெடுக்கப்படாமல், அது எப்படி சாத்தியமாகும்?*
*சாதிவாரிக் கணக்கெடுப்பின்போது தங்கள் சாதியின் பெயரைத் துணிவுடன் பதிவு செய்தால், தலித்துகள் கட்டாயம் எல்லாத் துறைகளிலும் கணிசமான அளவு இடஒதுக்கீடு பெற முடியும்.*
*அம்பேத்கர் கண்ட _தலித் தலைமை_ க் கனவு நிச்சயம் நனவாகும்.*
*_அம்பேத்கர் புகழ்பாடும் பாவேந்தரின் பாடல் வரிகைப் பாருங்கள்_.*
*"நாட்டின் உரிமைப் பேரேட்டின் சட்டம் அமைத்தவர்; ஆதலின் சாதி வேற்றுமை குமையத்தானே குலம் உயர்வென்ற ஆரியப்பெண்ணை மணந்தார். அம்பேத்கர்போல் ஆரியப்பெண்ணை நம்மவர் மணக்க நாடுருப் படுமே"*
*- பாவேந்தர் பெருமகனார்*
கருத்துகள்
கருத்துரையிடுக