#வாவர் மசூதி #பாபர் மசூதி
*வடக்கும் தெற்கும்*
*அபு ஹாஷிமா*
தெற்கே ...
ஒரு வாவர் மசூதி
வடக்கே
ஒரு பாபர் மசூதி
இரண்டுக்குமே இருப்பிடம் நதிக்கரைகள்தான் !
பம்பை நதிக்கரையில்
ஐயப்பனும் வாவரும்
சரயு நதிக்கரையில்
ராமனும் பாபரும் !
வாவர் பள்ளியைக் கட்டியவர்கள்
இந்துக்கள்
பாபர் பள்ளியை இடித்தவர்களும்
இந்துக்களே !
மன இணக்கம் உள்ளவர்கள்
ஐயப்ப பக்தர்கள்
மதப் பிணக்கம் கொண்டவர்கள்
ராம பக்தர்கள் !
பேட்டைத் துள்ளலில்
மனம் துள்ளுகிறார்கள்
தெற்கத்தியர்கள்
இடித்துத் தள்ளுவதில்
இன்பம் காண்கிறார்கள்
வடக்கத்தியர்கள் !
மனங்களில்தான்
எத்தனையெத்தனை வேறுபாடு
ஒருநேர உணவிற்கே
உன்பாடு என்பாடு
என்றிருப்பவர்கள் கூட
உன் தெய்வம்
என் தெய்வம்
என்று வரும்போது
உயிர் போவதுகூடத் தெரியாமல்
உதிரத்தைக் கொட்டுகிறார்கள்
மனம் அழகாக இருந்தவர்கள்
கட்டியது வாவர் மசூதி
மனம் அழுக்காக இருந்தவர்கள்
இடித்தது பாபர் மசூதி
இரண்டுமே சேவைதான்
இங்கே
ஒற்றுமையை கட்டியெழுப்பிய
உன்னத சேவை
அங்கே
சகிப்புத்தன்மையை தகர்த்தெறிந்த
கரசேவை
உருவமற்ற இறைவனை
வணங்கி வாழ
உலகில் இருந்தது
ஒரே ஒரு ஆலயம்தான்
அது ...
கஃபா
இன்றோ
எண்ணிக்கையில் அடங்காத
கோடி கோடி ஆலயங்கள்
உலகெங்கும்
இப்ராஹீம் நபி அறுத்த
ஒரே ஒரு ஆட்டின்
உதிரத்தில் பிறந்த
ஆடுகள்
உலகெங்கும்
பெருகி வாழ்வதைப்போல
வாழ்பவர்கள் முஸ்லிம்கள்
எத்தனை ஆடுகளை
அறுத்தாலும்
குர்பானி கொடுத்தாலும்
ஆடுகள் இனம்
அழியவே அழியாது
முஸ்லிம் இனமும் அழியாது
ரபிஆ
முளர்
கூட்டத்தார் வளர்த்த
ஆட்டு மந்தைகளில்
வளர்ந்த ஆடுகளின்
ரோமங்கள் எத்தனை கோடி ?
அவை
கடல்நீரைப்போல
அளக்க முடியாதவை
மழைத் துளிகளைப்போல
எண்ண முடியாதவை
அவற்றைவிட அதிகமான
முஸ்லிம்கள்
இந்த மண்ணில் வாழாமல்
இந்த உலகம்
அழியவே அழியாது
அதனால்
ஒரு பள்ளி இடிபடும்போது
ஓராயிரம் பள்ளிகள்
தானாகவே உருவெடுக்கும்
அற்புத மார்க்கம் இஸ்லாம்
உருவமே இல்லாத
இறைவனுக்கு
பள்ளிகள் எதுவும்
அடையாளங்களில்லை
உலகமே
அவன் உருவாக்கிய பள்ளிதான் !
இறைவன் நாடினால்
கரசேவை செய்தவர்களே
இன்னொருநாள்
கட்டும் சேவையும் செய்வார்கள்
இன்ஷா அல்லாஹ் ...
பொறுத்திருப்போம் !
#படங்கள் ...
முதல் படம் வாவர் மசூதி
இரண்டாம் படம் பாபர் மசூதி
சில வருடங்களுக்கு முன்னால்
போட்ட பதிவுதான் .
டிசம்பர் 6 வரும் போதெல்லாம்
திரும்பவும் போடலாம்.
கருத்துகள்
கருத்துரையிடுக