#இமாம் #அபூஹனீபா #ஹனபி#ஆன்மீகம்

⚘⚘⚘💜💜💜⚘⚘⚘
சூபிசத்தின் அஸ்திவாரமே சலாமதுல் கல்ப்(பிறரின் குறைகள் பற்றிய தப்பெண்ணம் இல்லாத இதயம்)
⚘⚘⚘
ஆறு இலட்சம் ஹதீஸ்களின் தொகுப்பாளரான செய்யதுனா இமாமுல் அஃலம் அபூ ஹனீபா ரஹ்மதுல்லாஹி அலைஹி. செய்யதுனா இமாம் ஜஃபர் சாதிக் நாயகங்களின் அருளான தொடர்பினால்தான் தான் மேன்மை அடைந்ததாகவும் அவர்களினால்தான் சூபிசத்தின் வாடையை நுகர்ந்து உணர்ந்ததாகவும் கூறுவார்கள்…

அவர்கள் கூறும் பிரபல்யமான வார்த்தை

لولا السنتان لهلك النعمان
இமாம் ஜஃபர் சாதிக் நாயகத்தின் தொடர்பு இல்லாமல் இருந்திருந்தால் இந்த நுஃமான் அழிந்துபோய் இருப்பேன் என்பார்கள்

இமாம் ஜஃபர் சாதிக் நாயகத்தின் தொடர்பின் பின் அந்த பெருமானாரின் வாழ்வில் அவர்கள் கண்ட பேரற்புதங்கள் சொல்லி முடிக்க முடியாதவை…

மனிதர்கள் வுழுசெய்யும்போது அவர்களின் உடலுறுப்புகளில் இருந்து வழிந்துஓடும் தண்ணீரை கொண்டே அவர்களின் பாவங்களை சொல்லுவார்கள்,ஓர் நாள்

கூபா நகர ஜாமிஆ மஸ்ஜிதிலுள்ள வுழு செய்யுமிடத்தில் அமரந்திருந்த போது அங்கே வந்த ஓர் வாளிபர் வுழு செய்துகெண்டிருந்தார் அவரின் வழிந்தோடும் நீரை கண்டு நீங்கள் பெற்றோரின் மனது புண்படும் படி நடக்கின்றீர்கள் எனவே அதனை விட்டும் உங்களை பாதுகாருங்கள் என்றார்கள் இமாம்,அந்த வாலிபரும் தவ்பா செய்து தன்னை திருத்திக்கொண்டார்…

இப்படியே..!விபச்சாரம் புரிபவர்,மது அருந்துபவர் என்று பட்டியல் நீண்டு செல்கின்றது…

இதன் ஆபத்தினை புரிந்து கொண்ட இமாமவர்கள் ரப்புவிடம்!

இறைவா இதுவரைகாலம் அகப்பார்வை அற்ற இல்மை தந்தாய் அதன்மூலம் வெளிரங்க பார்வை மாத்திரம் இருந்தது இப்போது,ஜபர் சாதிக் என்ற பெருமகனாரை தந்து அகப்பார்வையை திறந்துவிட்டாய்.

ரப்பே!இப்பொழுது மற்றவர்களின் குறை,நிறைகள் எல்லாமே வெளிச்சமாகின்றது இது எனக்குகிடைத்த மிகப்பெறும் சோதனை எனவே மற்றவர்களின் குறைகளை காணுவதைவிட்டும் என்னை பாதுகாத்துவிடு என்று துஆசெய்தார்கள் அல்லாஹ்வும் அவர்களின் துஆவை ஏற்றுக்கொண்டான்…

அந்த காலத்தில்தான் பாவங்களை கழுவிக்கொண்டுவரும் வுழுசெய்த நீர் அசுத்தமானது என்பதை சொல்லிக்கொண்டிருந்த இமாமவர்கள்,அதன்பின் வுழுசெய்த நீர் அசுத்தம் என்று கூறுவதையும் விட்டுவிட்டார்கள்…

அல்லாமா அப்துல் வஹ்ஹாப் ஷஃரானி ரஹ்மதுல்லாஹி அலைஹி
நூல்:-மீஜானுல் குப்ரா

சுப்ஹானல்லாஹ்..!
சங்கு சுட்டாலும் வெண்மை என்பதுபோல் மேன்மக்கள் என்றும் மேன்மக்களே

~ஆலிம் முஸ்தகீம்(நஜாஹி)~

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அரபி மதரஸாக்கள்

மவ்லித் ஷரீஃப் ஓதுவோம் வாருங்கள்

கல்வியா?செல்வமா?