உலக அரபி மொழி தினம்

உலக அரபி மொழி நாள்
டிசம்பர் - 18ஆம் தேதி
✓✓✓✓✓✓✓✓✓✓✓✓✓✓✓

திருக்குர்ஆன், நபிமொழி மற்றும் இஸ்லாமிய தரவுகளின் பதிவுகள் நிறைந்த செம்மொழிதான் அரபி மொழி.உலகில் 47கோடிக்கும் அதிகமானோர் பேசும் மொழி. அரபு நாடுகள் மட்டுமன்றி அதன் அண்டை நாடுகளான மேற்கு ஈரான் (அஹ்வாஸ்) , துருக்கி, ஷாட், மாலி, செனிகல் போன்ற நாடுகளிலும் அரபியைத் தாய் மொழியாகக் கொண்டவர்கள் வசிக்கின்றனர்.

அரபியர் அல்லாத முஸ்லிம்கள் இரண்டாம் மொழியாகப் பேசுவோர் அதே எண்ணிக்கையில் உள்ளனர்.செம்மொழிகளில் ஒன்றாக அங்கீகரிக்கப்பட்டுள்ள மொழிகளில் அரபியும் ஒன்று.ஐக்கிய நாடுகள் சபையில் அங்கீகரிக்கப்பட்டுள்ள ஆறுக்கும் மேற்பட்ட மொழிகளில் அரபியும் ஒன்று.

அரபி மொழி நாள்
~~~~~~~~~~~~~~
ஐக்கிய நாடுகள் சபை அறிவித்துள்ள நினைவு நாட்களில் அரபி மொழி நாளும் உண்டு. ஆண்டுதோறும் டிசம்பர் 18ஆம் நாள் உலக அரபி மொழி தினமாக அனுசரிக்கப்படுகிறது.

இந்நாளில் அரபி மொழியின் தொன்மை, மொழி சொல் வளம், இலக்கிய ஆளுமை, பொருள் செறிவு, வார்த்தைச் சிக்கனம், எல்லாவற்றையும்விட பாதுகாப்பு பலகையான லவ்ஹுல் மஹ்ஃபூளில் பதிவான வேத மொழி.

இத்தனைச் சிறப்புகளைக் கொண்ட அரபி மொழிக்குச் சிறப்புச் செய்யும் வகையில் ஒரு நாள் ஒதுக்கப்பட்டிருப்பது பொருத்தமே.

தமிழ்நாட்டில்?
??????????????
சென்னைப் பல்கலைக் கழகத்தில் அரபிக் துறை சார்பாக இந்நாள் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது.முனைவர் ஜாகிர் பாகவி சிறப்பாக முன்னெடுக்கிறார். நானும் ஒரு முறை கலந்துகொண்டிருக்கிறேன். புதுக்கல்லூரி, ஜமால் முஹம்மது கல்லூரி, சதகத்துல்லாஹ் அப்பா கல்லூரி போன்ற கல்லூரிகள் மற்றும் பள்ளிகளில் இந்நாள் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது என எண்ணுகிறேன்.

அரபிக் கல்லூரிகள் இந்த விஷயத்தில் ஏன் கவனம் செலுத்தக் கூடாது? புதுவை ஜாமிஅத்துல் சிக்மா, பெரியகுளம் அஷரத்துல் முபஷ்ஷரா,சென்னை ஜாமிஆ இல்மிய்யா போன்ற வெகுசில மத்ரஸாக்கள் மட்டுமே ஈடுபாடு காட்டுவதாகத் தெரிகிறது.

மாணவர்களுக்கு அரபி மொழிமீது ஆர்வம் உண்டாக்க அரபியில் பேச்சுப்போட்டி, எழுத்துப்போட்டி, கலந்துரையாடல்...போன்ற நிகழ்ச்சிகளுக்கு. இந்நாள் நினைவாக ஏன் ஏற்பாடு செய்து உற்சாகப்படுத்தக் கூடாது?

வஸ்ஸலாம்.
அன்புடன் உங்கள்
கான் பாகவி 

.

?????????????

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அரபி மதரஸாக்கள்

மவ்லித் ஷரீஃப் ஓதுவோம் வாருங்கள்

கல்வியா?செல்வமா?