#அம்பேத்கர்#ambedkar#சுதந்திரம்#குடியரசு
*இன்று பாபா சாகேப் என்றழைக்கப்படும் முனைவர் பீம்ராவ் ராம்ஜி அம்பேத்கர் அவர்களின் நினைவு நாள்!*
*இந்திய விடுதலைக்குப் பின்னர் நாட்டின் முதலாவது சட்ட அமைச்சராக பதவியேற்றவர்.*
*உயர் கல்வி பெறுவதற்காக அமெரிக்கா சென்ற முதல் இந்தியர் இவரே..!*
*பட்டியல் சாதி மக்களுக்கென கழகம் ஒன்றைத் தொடங்கியவர்.*
*பரோடா மன்னருடன் இணைந்து தீண்டாமை ஒழியப் போராடியவர்.*
*பொருளாதாரம், அரசியல், வரலாறு, தத்துவம், சட்டம் ஆகிய துறைகளில் தேர்ந்தவர்; ஆசிரியராகவும், இதழாளராகவும், எழுத்தாளராகவும் சமூகநீதிப் புரட்சியாளராகவும் விளங்கியவர் இவர்!*
*திராவிட புத்தம்' என்ற பெயரில் பல ஆயிரக்கணக்கான பட்டியல் சாதி மக்களை புத்தசமயத்தைத் தழுவச்செய்தவர்.*
*இவை யாவற்றுக்கும் மேலாக இந்திய அரசியலமைப்புச் சாசனத்தை வரைவதற்கான குழுவின் தலைவராகவும் பொறுப்பேற்றவர்.*
*2012 ஆம் ஆண்டில் வரலாற்றுத் தொலைக்காட்சியும், சி.என்.என்- ஐ.பி.என் தொலைக்காட்சியும் நடத்திய வாக்கெடுப்பில் மிகச்சிறந்த இந்தியராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்!*
*இந்தியாவின் மிகச்சிறந்த உயரிய விருதான 'பாரத ரத்னா' விருது இவரது இறப்புக்குப் பின் 1990 இல் இவருக்கு வழங்கப்பட்டது.🇮🇳*
கருத்துகள்
கருத்துரையிடுக