வாலிபம்

﷽ *வாலிபம் ஓர் அருள்*

🔷உன் வாலிபத்தை கண்டு ஏமாந்து விடாதே... விரைவில் அது உன்னை விட்டு பறிக்கப்பட்டுவிடும்.

- _ஷெய்ஹ் முஹ்யித்தீன் அப்துல் காதிர் ஜீலானி (ரஹ்)_

🔷 *உனது முதுமை வருவதற்கு முன் உனது இளமையைப் பயன்படுத்திக் கொள்!’* என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அனஸ்(ரலி), அம்ர் இப்னு மைமூன்(ரலி)

நூல்: நஸாஈ 11832, ஹாகிம் 7846📗

🔷சிலை வணக்கத்திற்கு எதிரான *இப்றாஹீம் நபியின் (அலை)* ஈமானிப் போராட்டம் இளமைக் காலத்திலேயே நடந்ததாகக் குர்ஆன் குறிப்பிடுகின்றது.

‘இப்றாஹீம் எனக் கூறப்படும் ஓர் இளைஞன் இவை குறித்துக் குறை கூறக் கேட்டிருக்கின்றோம்’ என அவர்களில் (மற்றும்) சிலர் கூறினர்.

_அல் குர்ஆன்- 21:60📗_

🔷அவர்களது செய்தியை உண்மையாக உமக்கு நாம் கூறுகிறோம். நிச்சயமாக அவர்கள் தமது இரட்சகனை நம்பிக்கை கொண்ட சில இளைஞர்களாவர். மேலும், அவர்களுக்கு நேர்வழியை நாம் அதிகப் படுத்தினோம்.

_அல் குர்ஆன்- 18:13📗_

🔷அல்லாஹ்வின் நிழலைத் தவிர வேறு நிழலே இல்லாத அந்நாளில் அல்லாஹ் 07 கூட்டத்தினருக்கு தனது நிழலில் இடம் கொடுப்பான் எனக் கூறிய நபியவர்கள் அதில் ஒரு கூட்டமாக தனது இளமைக் காலத்தை இபாதத்தில் கழித்த இளைஞர்களையும் குறிப்பிட்டார்கள்.

அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி)

_நூல்: புகாரி📗_

🔷அவன்தான் மண்ணிலிருந்தும் பின்னர்; இந்திரியத் துளியிலிருந்தும் பின்னர் (கருவறைச் சுவரில்) ஒட்டிக் கொள்ளக் கூடியதிலிருந்தும் உங்களைப் படைத்தான். பின்னர் உங்களை சிசுவாக வெளியேற்றுகின்றான். பின்னர் உங்கள் இளமையை நீங்கள் அடைவதற்காகவும், பின்னர் உங்கள் வயோதிபத்தை நீங்கள் அடைவதற்காகவும் (உங்களுக்கு ஆயுளை ஏற்படுத்தினான்.) இதற்கு முன்னரே மரணிப்போரும் உங்களில் உள்ளனர். குறிப்பிட்ட தவணையை நீங்கள் அடைவதற்காகவும், நீங்கள் விளங்கிக் கொள்வதற்காகவும் (இவ்வாறு செய்தான்.)’ 

_அல் குர்ஆன் - 40:67📗_


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அரபி மதரஸாக்கள்

மவ்லித் ஷரீஃப் ஓதுவோம் வாருங்கள்

கல்வியா?செல்வமா?