*மலக்குகளின் துஆவைப் பெறுவோர்கள்*

*மலக்குகளின் துஆவைப் பெறுவோர்கள்*


*1.தொழுத இடத்தில் அமருபவர்*

477- حَدَّثَنَا مُسَدَّدٌ قَالَ : حَدَّثَنَا أَبُو مُعَاوِيَةَ ، عَنِ الأَعْمَشِ ، عَنْ أَبِي صَالِحٍ ، عَنْ أَبِي هُرَيْرَةَ ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ :
صَلاَةُ الْجَمِيعِ تَزِيدُ عَلَى صَلاَتِهِ فِي بَيْتِهِ وَصَلاَتِهِ فِي سُوقِهِ خَمْسًا وَعِشْرِينَ دَرَجَةً فَإِنَّ أَحَدَكُمْ إِذَا تَوَضَّأَ فَأَحْسَنَ وَأَتَى الْمَسْجِدَ لاَ يُرِيدُ إِلاَّ الصَّلاَةَ لَمْ يَخْطُ خُطْوَةً إِلاَّ رَفَعَهُ اللَّهُ بِهَا دَرَجَةً وَحَطَّ عَنْهُ خَطِيئَةً حَتَّى يَدْخُلَ الْمَسْجِدَ ، وَإِذَا دَخَلَ الْمَسْجِدَ كَانَ فِي صَلاَةٍ مَا كَانَتْ تَحْبِسُهُ وَتُصَلِّي ، يَعْنِي عَلَيْهِ – الْمَلاَئِكَةُ مَا دَامَ فِي مَجْلِسِهِ الَّذِي يُصَلِّي فِيهِ اللَّهُمَّ اغْفِرْ لَهُ اللَّهُمَّ ارْحَمْهُ مَا لَمْ يُحْدِثْ فِيهِ.
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

ஒருவர் தமது வீட்டில் தொழுவதைவிடவும், தமது கடைத் தெருவில் தொழுவதை விடவும் “ஜமாஅத்துடன் (கூட்டுத் தொழுகை) தொழுவது, மதிப்பில் இருபத்தி ஐந்து (மடங்குகள் தொழுகைகள்) கூடுதலாகும். ஏனெனில், உங்களில் ஒருவர் அங்க சுத்தி (உளூ) செய்து, அதை செம்மையாகச் செய்து, தொழு கின்ற ஒரே நோக்கத்துடன் பள்ளி வாசலுக்கு வந்தால் அவர் பள்ளி வாசலுக்குள் வரும் வரை எடுத்துவைக்கும் ஒவ்வோர் எட்டுக்கும் ஓர் அந்தஸ்த்தை அவருக்கு அல்லாஹ் உயர்த்துகின் றான்; ஒரு பாவத்தை அவரை விட்டு நீக்குகின்றான்.

(கூட்டுத்) தொழுகையை எதிர்ப்பார்த்து அவர் பள்ளிவாசலில் இருக்கும்போது அவர் தொழுது கொண்டிருப்பவராகவே கரு தப்படுகிறார். மேலும் அவர் (வெளியேறிவிடாமல்) எந்த இடத் தில் தொழுகின்றாரோ அந்த இடத்திலேயே இருக்கும்வரை அவ ருக்காக வானவர்கள் பிராத்தனை செய்கிறார்கள். ஆனால், (அங்க சுத்தியை அகற்றிவிடக் கூடிய) சிறுதுடக்கு (காற்று பிரிதல் மூலம்) அவர் பள்ளிக்குள் உபத்திரவம் செய்யாமல் இருக்க வேண்டும். அப்போது வானவர்கள், “இறைவா! இவருக்கு கருணை புரிவா யாக! என்றுபிரார்த்திக்கின்றார்கள்.
நூல் : புகாரி-477 

*2.தொழுகையில் முதல் வரிசையில் நிற்பவர்*
عنِ البَراءِ بنِ عازبٍ، قالَ: سمِعْتُ رسولَ اللهِ صلَّى اللهُ عليه وسلَّم يقول: "إنَّ اللهَ وملائكتَه يُصلُّونَ على الصَّفِّ الأوَّلِ"،

முதல் வரிசையில் இருப்பவர்களின் மீது அல்லாஹ் அருள் புரிகிறான். மலக்குகள் இறைவனிடம் (அவர்களுக்காக) அருள் வேண்டுகிறார்கள் என நபிகள் நாயகம் (ஸல்)அவர்கள் கூறினார் கள்.

இதை பராஃ பின் ஆஸிப் அறிவிக்கின்றார்கள்
நூல்கள்: இப்னு மாஜா-997 (987), அஹ்மத்(17878), நஸயீ (642)
عن أُبَيِّ بنِ كعْبٍ رضِيَ اللهُ عنه، قال: قال النَّبيُّ صلَّى اللهُ عليه وسلَّم: "الصَّفُّ المُقدَّمُ على مثْلِ صَفِّ الملائكةِ، ولو تَعلمونَ فَضيلتَه لَابْتدرتُموه"،
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள் முதல் வரிசை என்பது அது மலக்குகளின் வரிசையை போல
முதல் வரிசையில் மகத்துவத்தை நீங்கள் அறிந்தால் சீட்டு குலுக்கி போடப்படும்
அறிவிப்பாளர் கஃப் இபுனு மாலிக் ரலி 

*3.ருகூவுக்கு பிறகு*
عن أبي هريرة رضي الله عنه أن رسول الله صلى الله عليه وسلم قال : “إذا قال الإمام سمع الله لمن حمده فقولوا اللهم ربنا لك الحمد فإن من وافق قوله قول الملائكة غفر له ما تقدم من ذنبه” وفي رواية: فقولوا ربنا ولك الحمد” رواه البخاري ومسلم . 

தொழுகையில் இமாம் ஸமி அல்லாஹு லிமன் ஹமீதா என்று கூறும் பொழுது நீங்கள் ரப்பனா லக்கல் ஹம்து என்று கூறுங்கள் அப்பொழுது மலக்குகள் ஆமீன் என கூறிவிட்டால் அவருடைய முந்தைய பாவங்கள் மன்னிக்கப்படுகிறது

من حديث رفاعة بن رافع الزُّرقي  قال: كنا يومًا نُصلي وراء النبي ﷺ، فلمَّا رفع رأسَه من الركعة قال: سمع اللهُ لمن حمده، قال رجلٌ وراءه: "ربنا ولك الحمدُ حمدًا كثيرًا طيبًا مُباركًا فيه"، فلمَّا انصرف -يعني: النبيّ ﷺ- من صلاته قال: مَن المتكلم؟ قال: أنا. قال: رأيتُ بضعةً وثلاثين ملكًا يبتدرون أيّهم يكتبها أوَّل؟

நாங்கள் ஒரு நாள் நபி (ஸல்) அவர்களுக்குப் பின்னால் (அவர்களைப் பின்பற்றித்)தொழுது கொண்டிருந்தோம். அவர்கள் ருகூவிலிருந்து தலையை உயர்த்திய போது "சமிஅல்லாஹு லிமன் ஹமிதஹ்' (அல்லாஹ் தன்னைப் புகழ்வோரின் புகழுரையை ஏற்றுக் கொள்கிறான்) எனக் கூறினார்கள். அவர்களுக்குப் பின்னாலிருந்த ஒரு மனிதர் "ரப்பனா வல(க்)கல் ஹம்து. ஹம்தன் கஸீரன் தய்யிபன் முபாரக்கன் ஃபீஹீ - எங்கள் இறைவா! புகழ் அனைத்தும் உனக்கே உரியது. தூய்மையும் சுபிட்சமும் மிக்க உனது திருப்புகழை நிறைவாகப் போற்றுகிறேன்'' என்று கூறினார். தொழுது முடித்ததும் நபி (ஸல்) அவர்கள், "(இந்த வார்த்தைகளை) மொழிந்தவர் யார்?'' என்று கேட்டார்கள். அந்த மனிதர், "நான்தான்'' என்றார். "முப்பதுக்கும் மேற்பட்ட வானவர்கள் "இதை நம்மில் முதலில் பதிவு செய்வது யார்' என (தமக்கிடையே) போட்டியிட்டுக் கொள்வதை நான் கண்டேன்'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: ரிஃபாஆ பின் ராஃபிஉ அஸ்ஸுரக்கீ (ரலி), நூல்: புகாரி 799

*4. ஸலவாத்து சொல்வது*

عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَامِرِ بْنِ رَبِيعَةَ، عَنْ أَبِيهِ قَالَ: سَمِعْتُ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: «مَا مِنْ عَبْدٍ يُصَلِّي عَلَيَّ إِلَّا صَلَّتْ عَلَيْهِ الْمَلَائِكَةُ مَا صَلَّى عَلَيَّ، فَلْيُقِلَّ مِنْ ذَلِكَ أَوْ لِيُكْثِرْ»
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மீது சலவாத்து சொல்லும் காலமெல்லாம் மலக்குகள் அவருக்காக மன்னிப்பு கேட்கிறார்கள்

*ஸஹர் உணவு சாப்பிடுபவர்கள்*

أبي سعيد الخدري -رضى الله عنه- أن رسول الله -صلى الله عليه وسلم-إِنَّ اللهَ عَزَّ وَجَلَّ وَمَلَائِكَتَهُ يُصَلُّونَ عَلَى الْمُتَسَحِّرِينَ

ஸஹர் உணவு சாப்பிடுபவர்கள் மீது அல்லாஹ்வும் அவனுடைய மலக்குமார்களும் துஆ செய்கிறார்கள்

*6. கல்வியை கற்றுத் தருபவர்கள்*

قالَ رسولُ اللَّهِ صلَّى اللَّهُ عليْهِ وسلَّمَ إنَّ اللَّهَ وملائِكتَهُ وأَهلَ السَّماواتِ والأرضِ حتَّى النَّملةَ في جُحرِها وحتَّى الحوتَ ليصلُّونَ على معلِّمِ النَّاسِ الخيرَ
الراوي : أبو أمامة الباهلي

நல்லதை கற்றுக் கொடுக்கக் கூடிய மனிதர்களுக்கு அல்லாஹ்வும் மலக்குகளும் உயிரினங்களும் கடலில் இருக்கின்ற மீன்கள் உட்பட அனைத்தும் துஆ செய்கிறது

*7. தன் சகோதரருக்கு துஆ செய்பவர்*

وَعَن أَبي الدَّردَاءِ  أَنَّهُ سمِعَ رَسُولَ اللَّهِ ﷺ يَقُولُ: مَا مِن عبْدٍ مُسْلِمٍ يَدعُو لأَخِيهِ بِظَهرِ الغَيْبِ إِلاَّ قَالَ المَلكُ ولَكَ بمِثْلٍ رواه مسلم.
2/1495- وعَنْهُ أَنَّ رسُول اللَّه ﷺ كانَ يقُولُ: دَعْوةُ المرءِ المُسْلِمِ لأَخيهِ بِظَهْرِ الغَيْبِ مُسْتَجَابةٌ، عِنْد رأْسِهِ ملَكٌ مُوكَّلٌ كلَّمَا دَعَا لأَخِيهِ بخيرٍ قَال المَلَكُ المُوكَّلُ بِهِ: آمِينَ، ولَكَ بمِثْلٍ رواه مسلم.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

ஒருவர், கண்ணெதிரே இல்லாத தம் சகோதரருக்காகப் பிரார்த்தித்தால், அதற்கென நியமிக்கப்பட்டுள்ள வானவர், “ஆமீன் (இறைவா! ஏற்றுக்கொள்வாயாக) அதைப் போன்றே உமக்கும் கிடைக்கட்டும்!” என்று கூறுகிறார்.

*8. தர்மம் செய்பவர்*
وعن أبي هُريرة  قَالَ: قالَ رَسُول اللَّه ﷺ: مَا مِنْ يَوْمٍ يُصبِحُ العِبادُ فِيهِ إِلَّا مَلَكَانِ يَنْزِلانِ، فَيَقُولُ أَحَدُهُمَا: اللَّهُمَّ أَعْطِ مُنْفِقًا خَلَفًا، وَيَقُولُ الآخَرُ: اللَّهُمَّ أَعْطِ مُمْسِكًا تَلَفًا متفقٌ عَلَيْهِ.
ஒவ்வொரு நாள் காலையிலும் இரண்டு மலக்குகள் பூமிக்கு இறங்குகிறார்கள் ஒரு மலக்கு யா அல்லாஹ் செலவழிக்கக்கூடிய ஒவ்வொருவருக்கும் நீ அதிகமாக்கு என்று துஆ செய்கிறார் இரண்டாவது மலக்கு யா அல்லாஹ் செலவழிக்காமல் கஞ்சத்தனம் செய்பவருக்கு என் நாசத்தை ஏற்படுத்து என்று துஆ செய்கிறார்

*9. நோயாளியை நலம் விசாரிப்பவர்*

عن أبي هريرة -رضي الله عنه- قال: قال رسول الله -صلى الله عليه وسلم-: «مَنْ عَادَ مَرِيضًا أَو زَارَ أَخًا لَهُ فِي الله، نَادَاهُ مُنَادٍ: بِأَنْ طِبْتَ، وَطَابَ مَمْشَاكَ، وَتَبَوَّأتَ مِنَ الجَنَّةِ مَنْزِلاً».

யார் நோயாளியை நலம் விசாரிக்க செல்கிறாரோ அல்லது அல்லாஹுக்காக தன்னுடைய சகோதரனை சந்திக்க செல்கிறாரோ அவருக்கு ஒரு மலக்கு கூறுகிறார் நீங்கள் மனமானவர் உங்களுடைய நடை அழகானது சொர்க்கத்தில் ஒரு இடத்தை நீங்கள் ஒதுக்கிக் கொண்டீர்கள் என்று அவர் துஆ செய்கிறார்

*10 சேவல் கூவும் பொழுது*
عن أبي هريرة - رضي الله عنه - أن رسول الله - صلى الله عليه وسلم - قال إذا سمعتُم صِياحَ الدِّيكةِ فسَلُوا الله تعالى من فَضْلِه؛ فإنَّها رأت مَلَكًا، وإذا سمعتُم نهيقَ الحِمارِ فتعَوَّذوا بالله من الشَّيطانِ؛ فإنَّها رأت شيطانًا

நீங்கள் சேவல்கள் கூவுகிற சத்தத்தைக் கேட்டால் அல்லாஹ்விடம் அவனுடைய அருளைக் கேளுங்கள்: ஏனெனில், அவை வானவரைப் பார்த்திருக்கின்றன. (எனவே தான் கூவுகின்றன.) கழுதை கத்தும் சத்தத்தை நீங்கள் கேட்டால் ஷைத்தானிடமிருந்து அல்லாஹ்விடம் பாதுகாப்புக் கோருங்கள். ஏனெனில், அது ஷைத்தானைப் பார்த்திருக்கிறது. (எனவே தான் கத்துகிறது.) என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். புஹாரி : 3303 அபூஹுரைரா (ரலி).

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அரபி மதரஸாக்கள்

மவ்லித் ஷரீஃப் ஓதுவோம் வாருங்கள்

கல்வியா?செல்வமா?