#kaleelahamed#keeranori#கலீல்அஹ்மத்கீரனூரி#கீரனூரி#ஆலிம்#இமாம்#imaam #aalim
*அஸ்ஸலாமு அலைக்கும்.*
*ஒரு உளியின் 67 வருட* *பயணம்.....*
📕 *நெஞ்சில் நிறைந்த* *சிந்தனைச்* *சுடர்,* *சொல்லறுவி*
*மர்ஹும்* *கலீல் அஹ்மத் கீரனூரி* *(ரஹ்).* ✔
📕 *'கீரனூரி* ’ என்ற பெயரை அறியாத தமிழ் பேசும் முஸ்லிம்கள் யாரும் இருக்க மாட்டார்கள்
என்று சொன்னால் அது மிகையாகாது. .✔
📕 " தென்னிந்தியாவின் திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள கீரனூர் எனும் ஊரில் 13-06-1944 ( ஹிஜ்ரி 1363 ஜமாதுல் ஆகிர் பிறை 20) செவ்வாய்க் கிழமை செல்வச் செழிப்போடு வாழ்ந்த
தப்லீகுக்காக தனது வாழ்நாள் முழுவதையும் தியாக உணர்வோடு அர்ப்பணம் செய்த
மர்ஹூம் அல்ஹாஜ் அப்துல் லத்தீப் அவர்களின் இரண்டாவது மகனாக ஹழ்ரத் அவர்கள் பிறந்தார்கள். . ✔
📕 67 வருடங்கள் இவ்வூலகில் வாழ்ந்து 16-12-2010
(ஹிஜ்ரி 1432 முஹர்ரம் பிறை 09)
வியாழக் கிழமை மறைந்த அறிவூச் சூரியன் கலீல் அஹ்மத் கீரனூரி ஹழ்ரத் அவர்கள் சமுதாயத்திற்கு விட்டுச் சென்ற படிப்பினைகள் ஏராளம். . ✔
📕 ஹஜ்ரத் ரஹ் அவர்கள் தமது வாழ்வின் அந்திம காலத்தில் எழுதி 2009 ஆகஸ்டில் வெளியிட்ட
*“நினைவுகள் ”* என்ற நூலைப் படித்தவர்கள் அவர்களைப் பற்றி நன்றாகவே புரிந்திருப்பார்கள்.
தஃவத்துடைய உழைப்பில் தன்னை ஈடுபடுத்திக் கொண்ட தந்தையின் கண்டிப்பும் தாயின் பாசமும் கலந்த ஒரு நல்ல குடும்பச் சூழலில் வளர்க்கப்பட்ட ஹழ்ரத் அவர்கள் 7 வயதிலேயே குர்ஆனை முழுமையாக ஓதி முடித்தார்கள்.✔
📕 1956 ஆம் ஆண்டு இறுதியில் தனது 12 வது வயதில் லால்பேட்டை மன்பஉல் அன்வார் அரபுக் கல்லூரியில் சேர்ந்து ஏழாண்டுகள் அங்கு கல்வி பயின்றார்கள். அதன் பிறகு பெங்களூரிலுள்ள ஸபீலுர் ரஷாத் அரபிக் கல்லூரியில்
உருது மற்றும் பார்ஸீ மொழிகளைக் கற்றார்கள்.
1964 ஆம் ஆண்டு தாருல் உலூம் தேவ்பந்தில் ஹதீஸ் கலையைக் கற்றுக் கொண்டிருக்கும் போதே திருச்சி ஜாமிஆ அன்வாருல் உலூம் அவர்களின் வருகையை எதிர்பார்த்துக் காத்திருந்தது. ✔
📕 "திருச்சியில் எட்டு வருடங்கள் உஸ்தாதாகப் பணிபுரிந்தர்கள்.
இந்தக் காலப் பகுதியில்தான் அவர்களுடைய திருமணமும் நடந்தது.
5 குழந்தைகள் (மூன்று ஆண் குழந்தைகளும் இரண்டு பெண் குழந்தைகளும்) பிறந்தார்கள்.
திருச்சியைத் தொடர்ந்து ஆறு வருடங்கள் ஈரோடு தாவூதிய்யா அரபிக் கல்லூரியில் தீன்பணி செய்தார்கள். ✔
📕 " 05-09-1979 ல் பலரின் வேண்டு கோளுக்கிணங்க தாருல் உலூம் யூசுபிய்யாவில் காலடி எடுத்து வைத்தார்கள். ✔
📕 " அன்று முதல் மௌத்துவரை மொத்தம் 31
வருடங்கள் அங்கேயே முஹ்தமிமாக பணியாற்றினார்கள்.
மத்ரஸா யூசுபிய்யா என்பது ஹழ்ரத் அவர்களின் கனவுக் கோட்டை.
யூஸீஃபிய்யா எனது தாஜ் மஹால் என்று குறிப்பிடுவார்கள்.
யூசுபிய்யாவின் வளர்ச்சிக்கு தன்னையே உரமாக்கினார்கள்.
ஒரு சிறிய அறைக்குள் இருந்து கொண்டு முழு உலகையும் பற்றி சிந்தித்தார்கள்.
மதரஸாவின் பாடத் திட்டத்தில் மாற்றம் கொண்டு வந்தர்கள். ✔
📕 " முதாலஆவூக்காக சுயமாகக் கற்றல்
மாணவர்களுக்கு நேரம் ஒதுக்கிக் கொடுத்து நாளை நடக்க இருக்கும் பாடத்தை
இன்றே மாணவர்கள் சுயமாக முடிந்த வரை படித்து விளங்கிக் கொண்டு
மறு நாள் பாடத்தில் தமக்கு ஏற்பட்ட சந்தேகங்களை கேட்டுத் தெளிவு பெற்றுக் கொள்வது
என்ற ஒரு புதிய முறையை அறிமுகப்படுத்தியமை போன்றவை குறிப்பிடத்தக்கவைகளாகும். ✔
📕 "நான் பெற்ற பிள்ளைகள் எனது உடலணுக்கள் என்றால் என்னுடைய மாணவர்கள் எனது உயிரணுக்கள் ’ என்று சொல்வார்கள்.. ✔
📕 " உண்மையில் அப்படித்தான் நடக்கவும் செய்தார்கள்.
ஒரு குழந்தையின் மீது தகப்பனுக்கு இருக்க வேண்டிய கண்டிப்பும் பாசமும்தான் அவர்களிடம் மிகைத்துக் காணப்பட்டது. ✔
📕 " அவர்களைப் பார்த்து மாணவர்கள் பயப்பட்டார்கள் என்று சொல்வது கடினம்.
மாறாக அவர்களைப் பற்றிய மரியாதை கலந்த ஓர் அச்ச உணர்வு மாணவர்களுடைய உள்ளங்களில் எப்போதும் இருந்தது எனலாம். ✔
📕 " அவர்கள் மாணவர்களுக்குச் சொன்ன புத்திமதிகள் முழு உலகுக்கும் உள்ள புத்திமதிகளே.
200 க்கும் மேற்பட்ட பயான்கள் பதிவு செய்யப்பட்டிருப்பதாகக் கேள்வி.. ✔
📕"விரல்களுக்கு ஈட்டியின் வலிமையுண்டு காது குடைந்து சுகம்காண முயற்சிக்காதீர்கள், சந்திரனைப் பிளக்க முயற்சியுங்கள்’
என்பார்கள். ✔
📕 "இறப்பு எழுதியவனுக்குத் தான் எழுத்துக்கல்ல....
ஆகவே பேனாவின் கழுத்து சுளுக்கும் வரை எழுதுங்கள் ’
என்றார்கள். ‘
முதல் நபராக நுழைய வேண்டும் கடைசி நபராக வெயியேற வேண்டும் ...
இது பள்ளிவாசலுக்கு மட்டுமல்ல நூலகத்துக்கும் தான்’ என்றார்கள்.
‘மாணவர்களே! நீங்கள் நிமிர வேண்டும். கேள்விக்குறியின் முதுகில் மிதித்து அதை ஆச்சரியக் குறியாக நிமிர்த்த வேண்டும்!
என்பார்கள்.
இது போன்ற சிதறிய முத்துக்கள் ஏராளம். ✔
📕 "தென்னிந்திய அறிஞர்கள் ஹழ்ரத் அவர்களை
“ *சிந்தனைச் சுடர்* ” என்று மிகச் சரியாகத்தான் சொல்லியிருக்கிறார்கள்.
ஹழ்ரத் அவர்கள் தீனுக்குச் செய்த சேவைகள் ஏராளம்.
அனைத்தையும் எழுத முடியா விட்டாலும்
ஒரு சிலதை எழுதித்தான் ஆக வேண்டும். ✔
📕 "விண்ணியல் அல்லது வானவியல் என்று சொல்லப்படும் கலையில் ஹழ்ரத் ரஹ் அவர்களுக்கு
போதிய அறிவும் தேர்ச்சியும் இருந்தது.
பொதுவாகவே அவர்கள் எதிர்காலத்தில் ஏற்படும் சவால்களுக்கு முகம் கொடுக்கக் கூடிய தகுதியும் தைரியமும் உள்ளவர்களாக ஆலிம்கள் உருவாக வேண்டுமென்று சிந்தித்தவர்கள். ✔
📕 " இந்த விண்ணியற்கலை சம்பந்தமாக அரபி மத்ரசாக்களில் போதிக்கப்பட்டு வந்த கிதாப்கள்
சுமார் எழுநூறு வருடங்களுக்கு முன்பு எழுதப்பட்டவை. குர்ஆனுக்கும் ஹதீஸ்களுக்கும் ஒத்துப் போகக்கூடிய நவீன விஞ்ஞான ஆய்வுகளின் அடிப்படையில் இத்துறையில் சில கிதாப்கள்
எழுதப்பட்டிருந்தாலும்
அவை மத்ரஸாக்களின் பாடத்திட்டத்தில் சேர்த்துக் கொள்ளக்கூடிய அமைப்பில் இருக்கவில்லை.
எனவே மிக நீண்ட ஆய்வுக்குப் பின்னால்
*“அல் அப்லாக் வல்* *அவ்காத்”*
என்ற கிதாபை எழுதினார்கள். ✔
📕 "வானியல் தொடர்பான விஞ்ஞான உண்மைகள் - உண்மையிலேயே உண்மையாக இருந்தால் - அவை குர்ஆனுக்கு எவ்வகையிலும் முரண்படாது’
என்ற கருத்தை சுருக்கமாகவும் தெளிவாகவும் இந்த கிதாபில் விளக்கியிருக் கிறார்கள். ✔
📕 " இதில் வானவியல்
புவியியல்
தொழுகை நேரங்களை அறிந்து கொள்ளும் முறை
கிப்லாவை அறிந்து கொள்ளும் முறை
இரவு பகல் மாற்றங்கள் பற்றியெல்லாம் ஹழ்ரத் அவர்கள் தெளிவு படுத்தியுள்ளார்கள். ✔
📕 " 1990 களிலிருந்து இதன் கையெழுத்துப் பிரதியை வைத்தே ஹழ்ரத் அவர்கள் பாடம் நடத்தினார்கள். ✔
📕 " 2000 இல் அது அச்சு வடிவம் பெற்றது, ஹழ்ரத் அவர்கள் ஹயாத்தாக இருந்த காலத்திலேயே
தமிழ்நாடு கேரளா இலங்கை
ஆகிய இடங்களிலுள்ள அரபி மத்ரஸாக்களின் பாடத்திட்டத்தில் இக்கிதாபு சேர்க்கப்பட்டு விட்டது. ✔
📕 " இன்று லெபனானில் அச்சாகி அரபு நாடுகளிலும் விற்பனை செய்யப்படுகிறது.
அரபியல்லாத ஒருவர் இப்படி ஒரு கிதாபை எழுதியிருப்பதை லெபனான் பதிப்பகத்தார்களே புகழ்ந்திருக்கிறார்கள். ✔
📕 " 2001-05-13-15 ஆகிய தினங்களில் அக்குரணை ஜாமிஆ ரஹ்மானிய்யாவில்
அல் அப்லாக் வல் அவ்காத் கிதாபை பாடம் நடத்தினார்கள்.
அதில் 250 ஆலிம்கள் கலந்து கொண்டு பயன் பெற்றனர். ✔
📕 " அதற்குப் பிறகு இலங்கையிலிருந்து 15
ஆலிம்கள் யூசுபிய்யா மத்ரஸாவிற்குச் சென்று
ஏறத்தாழ பத்து நாட்கள் அங்கு தங்கியிருந்து
வானவியல் சம்தமாக ஹழ்ரத் அவர்களிடம் கற்றுக் கொண்டு
அதற்கான சான்றிதழ்களையும் பெற்று நாடு திரும்பினார்கள். ✔
📕 " இதற்கு முன்பு தமிழக ஆலிம்களுக்கும் யூசுபிய்யா மத்ரஸாவில் வானவியல் சம்பந்தமான ஒரு கருத்தரங்கு நடத்தினார்கள்.
அதில் மூன்று நாட்கள் அல் அப்லாக் வல் அவ்காத் கிதாபை பாடம் நடத்தினர்கள்.
அதன் மூலம் நிறைய ஆலிம்கள் பயன்பெற்றனர். ✔
📕 " மன்திக் தர்க்கவியல் கலை என்றாலே பலருக்கு ஒவ்வாமை.
சிலர் அப்படி ஒரு கலை தேவையில்லை என்றும் சொல்வதுண்டு.
ஹழ்ரத் அவர்கள் அந்தத்துறையிலும் தேர்ச்சி பெற்றிருந்தார்கள்.
அது சம்பந்தமாக அவர்கள்
*அல்கிஸ்தாஸ்*
*அல்பலாகா*
என்று இரண்டு கிதாப்கள் எழுதியிருக்கிறர்கள். ✔
📕 " அதன் கையெழுத்துப் பிரதிகள் சில மத்ரஸாக்களில் ஓதிக் கொடுக்கப்படுகின்றன.
அத்தோடு வாரிசுரிமை சம்பந்தமாகவும்
*அல் ஃபராயிழ்*
என்றொரு கிதாபையும் எழுதியிருக்கிறர்கள்.
அதுவும் யூசுபிய்யாவில் ஓதிக்கொடுக்கப்படுகிறது.
இன்ஷா அல்லாஹ் இவை வெகு விரைவில் அச்சாகி வரும்.. ✔
📕 " தாஃவத்துடைய உழைப்பில் தன்னை முழமையாக ஈடுபடுத்திக் கொண்டார்கள், என்பதை நான் சொல்லித்தான் நீங்கள் தெரியவேண்டுமென்பதில்லை.
உலகில் அதிகமான நாடுகளுக்கு ஜமாஅத்தில் சென்றிருக்கிறார்கள்.
டில்லி மர்கஸோடும் அங்கிருந்த பெரியார்கள் மற்றும் ஆலிம்களோடும் மிக நெருக்கமான தொடர்பு கொண்டிருந்தார்கள். ✔
📕 "தப்லீக் இஜ்திமாக்களிலும் ஜோடுகளிலும்
பெரியார்களின் பயான்களை தமிழில் மிக அழகாக செந்தமிழில் மொழி பெயர்த்த பெருமை அவர்களையே சாரும்.
1970 களிலிருந்து பல தடவைகள் இலங்கைக்கு வந்து போயிருக்கிறார்கள். . ✔
📕 " இலங்கையிலுள்ள மத்ரஸாக்களின் பட்டமளிப்பு விழாக்களில் கலந்து
பட்டம் பெற்று வெளியாகும் மாணவர்களுக்கும் பொது மக்களுக்கும் நிறைய புத்திமதிகள் சொல்லியிருக்கிறார்கள்.
⚧போலித் தவ்ஹீத்வாதத்துக்கு எதிராகத் துணிந்து குரல் கொடுத்தவர்கள்.
போலி தவ்ஹீத்வாதிவாதிகளைப்பற்றி உதாரணம் சொல்லும் போது
*வவ்வால் கண்ணர்கள்*
என்று சொல்வார்கள். ஏனெனில் வவ்வாலுக்குத்தான்
இரவு என்பது பகலாக தெரியும்.
பகல் என்பது இரவாகத் தெரியும்.
பகலில் உறங்கும்.
இரவில் உலா வரும்.
என்னே ஒரு அருமையான *تشبيه*
💢 ஹஜ்ரத் ரஹ் அவர்களிடம் கல்வி கற்ற இலங்கை மாணவர்கள்
கிட்டத்தட்ட 40 பேருக்குக் குறையாமல் இருக்கிறார்கள். ✔
📕 " அல்லாஹ்வுடைய கிருபையினால் எல்லோரும் ஹழ்ரத் அவர்களின் துஆவின் பரக்கத்தால் ஏதோ ஒரு வகையில் தீனுக்கு தங்களாலான சேவைகளைச் செய்து கொண்டிருக்கிறார்கள்.
யாரும் வீண் போகவில்லை.
*அல் அப்லாக் வல்* *அவ்காத்* என்ற கிதாபின்
கையெழுத்துப் பிரதிகூட இலங்கை மாணவர்களால் எழுதப்பட்டதுதான்.
வாழ்க்கையின் கடைசிக் காலத்தில்
“ *கனவுகள்* ” என்றொரு நூலை எழுதிக்கொண்டிருந்தார்கள். ✔
" அது அவர்களின் உளக்கனவுகளையும்
உறங்கி மங்கையை மும்
சுமந்து வந்த ஒரு நூல். முழுக்க முழுக்க ஆலிம்களுக்கும் மத்ரஸா நிர்வாகிகளுக்கும் மாணவர்களுக்குமான புத்திமதிகளும் வழிகாட்டல்களும் அடங்கிய மிகச்சிறந்த ஒரு நூல். துரதிஷ்டவசமாக அது எழுதி முடியும் முன்பு ஹழ்ரத் அவர்களின் நேரம் முடிந்து போனது.
அது இப்போது ஹஜ்ரத் ரஹ் அவர்களின் தம்பி மவ்லவி நிஃமத் இப்றாகீம் அவர்களால் அச்சிடப்பட்டு வெளிவந்திருக்கிறது. ✔
📕 " யூசுபிய்யா மத்ரஸாவில் எப்போதும் பட்டமளிப்பு விழாவுக்கு மக்கள் திரளாக வருவார்கள்.
16-12-2010 ஹிஜ்ரி
1432 முஹர்ரம் பிறை 09
மாலை சூரியன் மறைந்ததிலிருந்து
மக்கள் கூட்டங்கூட்டமாக
மத்ரஸாவை நோக்கி வர ஆரம்பித்தார்கள். ✔
📕 "ஆம்!!!!
மறைந்த சூரியனைப் பார்க்க வந்தார்கள்!!
யூசுபிய்யாவில் பட்டம் கொடுத்தவர்
‘ ஜனாஸா ’ என்ற பட்டத்தோடு படுத்திருக்கிறார் .அவரைப் பார்க்க வந்தார்கள்.
💢 மேலும் *சிந்தனைச்சுடர்*
*சொல்லறுவி*
என்ற பட்டங்கள் மக்களால் வழங்கப்பட்டது.
📕 " பல வருடங்களாக ஹழ்ரத் அவர்கள் எதிர்பார்த்திருந்த மரணம் இப்போது வந்திருக்கிறது .
2001ம் ஆண்டு அவர்கள் பேசிய ஒரு பயானில்
‘இன்னும் பத்து வருடங்களில் யார் இருப்பார்கள் என்பதற்கு என்ன உத்தரவாதம்!
2010 டிசம்பரில் நான் இறந்து விட்டால் உங்களால் என்ன செயய முடியும் ?’
என்று பேசினார்கள். ✔
📕 " கேட்டது போலவே 2010 டிசம்பர் 16ம் தேதி ஆஷுரா நோன்பு மத்ரஸாவில் நோற்றார்கள். நோன்பு திறக்க அல்லாஹ்விடம் சென்று விட்டார்கள். . ✔
📕 " இறுதியாக 05-08-2010 ல் இலங்கைக்கு வந்துவிட்டுத் திரும்பிச் செல்லும் போது கட்டுநாயக விமான நிலையத்தில் வைத்து அவரது மாணவர்கள் பிரியாவிடை கொடுத்து அனுப்பி வைத்தார்கள்.அப்போது அவர்கள்
இதற்குப் பிறகு இலங்கைக்கு வரமாட்டேன்" என்று நினைக்கிறேன் இது எனது இலங்கைக்கான இறுதிப் பயணம் ’
என்றார்கள். ✔
📕 " 14 ம் தேதி ஹழ்ரத் அவர்களுக்கு பணிவிடை செய்யும் ஒரு மாணவன் விடுமுறை கேட்டிருக் கிறார் அவனிடம் ‘எப்போது வருவாய் ?’
என்று கேட்டதற்கு அவர் வியாழக்கிழமை என்று பதில் சொல்லி இருக்கிறார்.. ✔
📕"அப்படியானால் வெள்ளிக் கிழமை குளிப்பாட்ட வருவாய் ’ என்று சொல்லியிருக்கிறார்கள்.
16ம் தேதி வியாழக் கிழமை அதிகாலை நாற்காலியில் அமர்ந்துகொண்டு தஹஜ்ஜுத் தொழுதிருக்கிறார்கள். ✔
📕 டாக்டர்கள் உடல் நிலை கருதி நோன்பு நோற்க வேண்டாம் என்று கூறியும் நோன்பு வைத்திருக்கிறார்கள்,
வழமைபோல் காலையில் பாடம் நடத்தி இருக்கிறார்கள்.
மிஷ்காத் பாடத்தில் தொழுகை பற்றிய ஹதீஸை நடத்தும் போது
‘ஒவ்வொரு தொழுகையையும் வாழ்க்கையின் கடைசித் தொழுகை என்று நிதை்துத் தொழவேண்டும் ’
என்று கூறிவிட்டு
என்னைப் பார்க்கும் போது ‘
இதுதான் கடைசித் தடவை பார்க்கிறேன்
என்று நினைத்துப் பார்க்க வேண்டும் என்று கூறினார்கள்.
அதற்கு மாணவர்கள் ஏன் ஹஜ்ரத்! இப்படி சொல்கிறீர்கள் என்று கேட்ட போது
✔
உடனே நாளை நான் இருப்பேன் என்பதற்கு என்ன உத்தரவாதம் ’ என்று கேட்டிருக்கிறார்கள்.
மாலை 4.30 மணிக்கு ‘ இப்தார் நேரம் வந்து விட்டதா ?’
என்று கேட்டிருக்கிறார்கள்.
4.50
மணிக்கு ஒரு மாணவனிடம் தனது ஆடைகளை துவைக்கக் கொடுத்து விட்டு பிறகு துவைக்க தேவையில்லை என்று திருப்பி வாங்கி இருக்கிறார்கள்.
நான்
‘மக்ரிபிற்கு எழுந்திருக்கா விட்டால் எழுப்பி விடு ’ என்று கூறிவிட்டு உறங்கியவர்கள் எழுந்திருக்கவே இல்லை.
எழுப்பிவிட வந்த மாணவன்
வெள்ளைத்துணியால் முழமையாகப் போர்த்திக் கொண்டு படுத்திருந்த ஒரு ஜனாஸாவையே பார்த்தான்.
💢குர்ஆன் ஷரீஃபில் அவர் ஓதி அடையாளம் வைத்த கடைசி ஆயத்து இது தான்:
*نزلا من غغرر الرحيم* ✔
📕 " ஒரு உளியின் 67 வருடப் பயணம் நிறைவு பெற்றது.
ஹஜ்ரத் அவர்கள் எழுதிய *நினைவுகள்* என்ற புஸ்தகத்தின் கடைசிப் பக்கத்தில்
“13.06.2009 ல் 65 வயது பூர்த்தியாக விட்டது.
பன்னிரெண்டாம் வயது முதல்
*ﻗَﺎﻝَ ﺍﻟﻠﻪُ ,ﻗَﺎﻝَ ﺭَﺳُﻮْﻝُ ﺍﻟﻠﻪِ* ;
என்று சொல்லாத நாட்கள் அநேகமாக இல்லை.
அது ஒன்று மட்டுமே மனதுக்கு நிறைவு தருகிற அம்சம் என்பது தவிர வேறொன்றும் தெரியவில்லை.
நடந்த நல்லவைகளெல்லாம் நிஜ நன்மைகளாக மீஜான் தராசுக்கு வர வேண்டும்.
கேள்வி கணக்கின் போது நல்ல சாட்சிகளாக வேண்டும்.
ஸிராதுல் முஸ்தகீம் பாலத்தை மின்னலாகக் கடக்க வைத்து
*ﺍُﺩْﺧُﻠُﻮْﻫَﺎ ﺑِﺴَﻼَﻡٍ ﺁﻣِﻨِﻴْﻦَ*
என்று சொல்லப்படும் கூட்டத்தில் சேர்க்க வேண்டும்
என்ற உண்மை ஆசை நிறைவேற
துஆவின் கோரிக்கையோடு
*முடிகிறேன்*
. அஷ்ஹது அன்லா இலாஹ இல்லல்லாஹ்
வ அஷ்ஹது அன்ன முஹம்மதன் அப்துஹூ வறஸூலுஹூ ”
என்று புத்தகத்தை முடித்திருக்கிறார்கள்.
இது பற்றி ஹஜ்ரத் அவர்களின் தம்பி மவ்லவி நிஃமத் இப்றாகீம் அவர்கள்
ஹஜ்ரத் அவர்களிடம்
*முடிகிறேன்* என்பதில் க் என்ற எழுத்து விடுபட்டு விட்டதே !என்று கேட்டதற்கு க் என்ற எழுத்தை தெரிந்தே தான் எழுதவில்லை என்றும்,
சில தினங்களுக்கு முன் சிலோனிலிருந்து ஒருவர் இது பற்றி கேட்டதற்கும்
இதே பதிலைத் தான் சொன்னேன் என்றார்கள் ✔
📕 " வெள்ளிக்கிழமை பகல் அன்னாரது ஜனாஸா கீரனூரில் நல்லடக்கம் செய்யப்பட்டது. அல்லாஹ் அவர்களது ஆகிரத்து வாழ்வை எல்லா வகையிலும் செழிப்பாக்கி வைப்பானாக !!!!
ஆமீன் ஆமீன் ஆமீன் யாரப்பல் ஆலமீன். ✔
கருத்துகள்
கருத்துரையிடுக