அலி ரலி அறிவாற்றல்

ஒரு மனிதர் இமாம் அலீ கர்ரமல்லாஹு வஜ்ஹஹு அவர்களின் சமூகத்திற்கு வந்து நான்கு கேள்விகளுக்கு விடையளிக்குமாறு வேண்டிக் கொண்டார், அவை யாவன:

1) எது கடமையானது எது அதனினும் கடமையானது..?

2) எது அண்மித்துவிட்டது, எது அதனினும் அருகிலுள்ளது..?

3) எது விசித்திரமானது எது அதனினும் விசித்திரமானது..?

4) எது கடுமையானது எது அதனினும் கடுமையானது..?

அதற்கு இமாம் அலீ கர்ரமல்லாஹு வஜ்ஹஹு அவர்கள் பதிலளித்தார்கள்:

1) இறைவனுக்கு அடிபணிவது கடமையாகும், அதனினும் கடமையானது பாவங்களை விட்டுவிடுவதாகும்.

2) நியாயத் தீர்ப்புநாள் அண்மித்துவிட்டது, அதனினும் அருகிலிருப்பது மரணமாகும்.

3) இந்த உலகம் விசித்திரமானது, அதனினும் விசித்திரமானது அதனை விரும்புவதாகும்.

4) மண்ணறை கடுமையானது அதனினும் கடுமையானது அதற்கு ஆயத்தமில்லாமல் அதனுள் செல்வதாகும்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அரபி மதரஸாக்கள்

மவ்லித் ஷரீஃப் ஓதுவோம் வாருங்கள்

கல்வியா?செல்வமா?