முன்மாதிரி இமாம்
எழுதியது:கான்பாகவி
நான் சிறுவனாக இருந்த போது எங்கள் ஊரில் ஓர் இமாம் இருந்தார்கள்.அன்னார்தான் என் மக்தப் உஸ்தாத்.
கிராஅத், ஹிஃப்ள், ப்ரான், கற்பித்தல்...என் எல்லா சிறப்பு அம்சங்களும் ஒருங்கே அமைந்தவர்.
அத்தோடு மஹல்லா மக்களின் சந்தோஷம், துக்கம்...என அனைத்திலும் பங்கெடுப்பவர்.
அவரைப் பார்த்து ஊரே பயப்படுமே தவிர, அவர் யாருக்கும் அஞ்சமாட்டார்.அனைவராலும் மதிக்கப்படும் பெருமகனார். நீண்ட காலம் எங்கள் ஊரில் பணியாற்றினார்.அவரால் ஊரும் பயனடைந்தது. உரால் அவர் குடும்பமும் ஓரளவு பயனடைந்தது.
1. ஒருநாள் கூட சுன்னத்துகளை விட்டவரல்லர். தம் கடமைகளில் குறைவைத்ததில்லை.
2 ஊர் மக்கள் ஒவ்வொருவரையும் உறவாகப் பார்க்கத் தவறியதில்லை.
3. குடும்பங்களில் ஏற்படும் சண்டை சச்சரவு களைத் தாமே முன்வந்து தீர்த்துவைக்காமல் விலகியதில்லை.
4. இல்லங்களில் நடக்கும் விசேஷங்கள் அவரது வழிகாட்டல் பிரகாரமே நடக்கும்.
5. ஆலிம்கள் அதிகமாக உள்ள ஊரில் ஆலிம்களின் மரியாதைக்குரியவராக விளங்கியவர்.
தேவதானப்பட்டி மெளலானா அப்துல் கரீம் நூரி..
غفر الله له
கருத்துகள்
கருத்துரையிடுக