வாட்ஸ் அப் குரூப்

குரூப்போ...குரூப்பு.
+++++++++++++++++

ஹிப்ளு ஓதிய மதரஸாவின் கணக்கிலிருந்து துவங்குகிறது குரூப்புகளின் படையெடுப்பு.

ஜும்ரா ஓதிய மதரஸாக்களின் தனித்தனி குரூப்புகள்.

ஸனது வாங்கிய மதரஸாவின் குரூப் ஒன்று.

"மாநிலத்தின் உலமாக்கள் கலந்தாய்வு" செய்ய ஒரு குரூப்.

 "தமிழக ஆலிம்கள் கலந்தாய்வு" செய்ய வேண்டுமென்பதற்காக மற்றொரு குரூப்.

 "உலமாக்கள் மஜ்லிஸாக" இருந்து பேசவேண்டும் என்பதற்காக ஒரு குரூப்.

 "ஆலிம்கள் ஆய்வுசெய்தே ஆக வேண்டும்" என்று அழுத்தம் திருத்தமாக ஒரு ஆய்வரங்க குரூப்.

"நண்பர்கள்" னு ஒரு குரூப்பு.
அதையே ஆங்கிலத்தில் பொரட்டி
"Friends" னு ஒரு குரூப். 

நண்பர்கள் "ரகசியம் பேச" ரகசியமாய் ஒரு குரூப்.
அந்த ரகசியத்திற்குள்ளும் ரகசியம் பேச மற்றொரு குரூப்.

மறுமையை நோக்கி... என்று ஒரு குரூப். உலகம் ஜெயிக்க வா என்றொரு குரூப்.

மருத்துவ குறிப்புகளுக்கென ஒரு குரூப். தினசரி பேப்பர் அனுப்புகிறேன் என்று ஒரு குரூப்.

இதற்கிடையில் சொந்தம் விட்டுப் போகக் கூடாதென சொந்தக்காரர்கள் குரூப். (தந்தை வழியில் ஒன்று. தாய் வழியில் ஒன்று.கட்டுன கடமைக்கு ஒன்னு ).

தப்ளிக் காரர்களை திட்ட ஒரு குரூப். ஆன்மீகம் சொல்லித்தர மற்றொன்று.
"நம்ம தரீக்கா தான் பெஸ்ட்.மத்ததெல்லாம் வொஸ்ட்" என இன்னொன்று.

இது போதாதென பெரிய பெரிய பேச்சாளர்களின் பெயர்களில் தனித்தனியாய் சில குரூப்புகள்.

"ஃபேஸ்புக் நண்பர்கள் குழு" என்று வாட்ஸ் அப்பில் ஒரு குரூப்.
 "சமூகத் தொண்டு செய்யலாம் வா" என இன்னொன்று.

மாநில பொறுப்புதாரிகள் கூடிப்பேச என ஒன்று.
மாவட்டத்திற்கு தனி.
வட்டாரத்திற்கு தனி என்று 3 குரூப்புகள்.

தஜ்வீத் சொல்லித்தருகிறேன் என்று ஒரு குரூப். பிடிஎப் ல் புத்தகம் அனுப்புவதாய் சொல்லுகிறது மற்றொரு குரூப்.

உள்ளூர் மக்களை பகைச்சுக்கக் கூடாது என்பதால் 4 உள்ளூர் குரூப்.
அதில் தங்கள் இயக்கம் சார்ந்தவர் என நினைத்து நம்மை இணைத்துக்கொண்ட தனித்தனி குரூப்கள்.

எல்லாவற்றிலும் அலையலையாய் ஒரே மாதிரியான ஃபார்வேர்டுகள்.

"இவ்வளவு குரூப் இப்போது தேவையா வாருங்கள் ஒரே குரூப்பாக ஆகிவிடுவோம்" என்று புதிதாக ஒரு குரூப்.

செல்போன் சூடாகி வெடிக்கிற வரை... சிலதில் ஆக்ரோஷமாய்... 
சிலதில் அமைதியாய்...
சிலதில் அட்மினாய்...
சிலதிலிருந்து வெளியேறியும்...
சிலதில் திணிக்கப்பட்டுமாய்...

வாட்சப் வாழ்க்கை கழிகிறது.

-மீள் பதிவு.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அரபி மதரஸாக்கள்

மவ்லித் ஷரீஃப் ஓதுவோம் வாருங்கள்

கல்வியா?செல்வமா?