சர்வதேச பிறை 2022
சந்தி சிரிக்கிற சர்வதேசப் பிறை
____________________________________
பிறை விவகாரத்தில் விஞ்ஞான வளர்ச்சிகளின் பின்னணியில் மாற்றம் தேவையா என்பது குறித்து 1960 களிலிருந்து தொடர்ந்து நடை பெற்ற ஆய்வுகளின் முடிவாக, இமாம் நவவி ரஹ் அவர்களின் கூற்றான லிகுல்லி பலதின் ருஹ்யதுஹு “ஒவ்வொரு ஆளுகைக்கு உட்பட்ட பகுதிக்கும் அது பார்க்கும் பிறையின் படியே முடிவு” என அறிவிக்கப் பட்டது.
பிறை பார்த்து நோன்பை நோற்கவும் பெருநாளை தீர்மானிக்கவும் கூறிய பெருமானார் (ஸல்) அவர்களின் எதார்த்த அறிவுரையே இஸ்லாமின் முடிவான கருத்து என அப்போது அறிஞர்கள் உறுதிபட அறிவித்தார்கள்.
சர்வதேச பிறையோ, கணக்கீடுகளின் படியான பிறையோ இஸ்லாமின் தேடலில் இல்லை என்பதும் காரண காரியங்களோடு தெளிவாகவே விவரிக்கப் பட்டிருக்கிறது.
உலக அளவில் ஒற்றுமை என்று சொல்லி ஊரளவில் பிரிந்து விட வேண்டாம் என்று சவுதியில் இருந்து எகிப்து வரை உள்ள சர்வதேச்முஃப்திகள் கொஞ்சாத குறையாக கோரிக்கை வைக்கிறார்கள்.
சவூதி அரசு இதைத்தான் பல ஆண்டுகளாக அதனிடம் விசாரிப்போருக்கு பதிலாகவும் கூறிவருகிறது. தேவையுடையோர் இப்போதும் கூட சவூதியின் பத்வா பிரிவிடம் கேட்டுப்பார்க்கலாம்.
இஸ்லாமிய சமூகத்தின் பெயரால் அடையாளம் காணப்படுகிற தீவிரவாதிகளுக்கு இது பிடிப்பதே இல்லை.
சர்ச்சைகளுக்கு வழி இல்லாமல் போய்விடும் அல்லவா ? குடும்பங்களை பிரித்து குதூகலம் காணவும் உண்டியல் ஏந்தி வயிறு வளர்க்கவும் வாய்ப்பில்லாமல் போய்விடும் அல்லவா?
சவூதியே வேண்டாம் என்று சொன்னாலும் எங்களுக்கு சவூதி பிறை தான் என்று உடும்பு பிடியாக இருந்தார்கள். ஆனால் அதை அப்படியே சொல்லி விட்டால் சவூதியில் வாங்கும் சமபளம் வெளியே தெரிந்து விடும் என்பதற்காக சவூதி பிறையை சர்வதேச பிறை என்றார்கள்.
நேற்றிரவு சவூதியில் பிறை காணப்படவில்லை பெருநாள் திங்கட் கிழமை என்று அறிவித்தது. இரவு 10 மணிக்கு பிறகு அதை அதையே இங்கு “தலையகத்திலிருந்து” லெட்டர் பேடில் கையெழுத்திட்டு அறிவித்தார்கள்.
மாட்டு மந்தைகளின் கூட்டம் லயீப் ஸஹீஹ்களை அசை போட்ட படி பின்னே சென்றது. தலைவர் போராடி 2 ம் தேதி விடுமுறை வாங்கிக் கொடுத்தது வீண் போக வில்லை என்று தலைவரின் ராஜ தந்திரத்தை கிளாகித்து கிளாகித்து கை கொட்டியது.
ஆப்கானிஸ்தானின் அரச பேச்சாளர் ஜபீஹுல்லாஹ் முஜாஹித் திடீரென அவர்களின் தலையில் ஒரு இடியை இறக்கினார்..அங்குள்ள ஃபராஹ், காந்தகார், கஜ்னி பகுதிகளில் சுமார் 27 பேர் ஷவ்வால் பிறையை கண்டது ஆப்கான உச்சநீதிமன்றத்தில் நிரூபிக்கப்பட்டதன் அடிப்படையில் மே 1 ம் தேதி ஆப்கானில் ஈதுல் பித்ரு பெருநாள் என்று அறிவித்தார்.
இன்னும் ஒரு வேட்டு ஆப்ரிக்காவின் நைஜீரியாவிலிருந்து வந்தது. அங்கும் பிறை காணப்படட்டது.
இதை எல்லாம் விட பெரிய ஒரு குண்டை மாலி தூக்கிப் போட்டது. தங்களது நாட்டில் இரண்டு இடங்களில் 8 பேர் ஷவ்வால் பிறையை பார்த்தாக கூறியது, இது எப்படி பெரிய குண்டு என்கிறீர்களா? கணக்கீடுகளின் அடிப்படையில் மாலியில் பிறை தெரிய வாய்ப்பே இல்லை என்று அறிஞர்கள் (?) கூறியிருந்தனர்.
சர்வதேச பிறைக் காரர்களுக்கு இது பெரிய ஷாக் தான் என்று நண்பர் கூறினார். அப்படி எல்லாம் ஒன்றும் இல்லை. ஆப்கானிஸ்தான் நைஜீரியா மாலி எதுவும் சமபளம் கொடுப்பதில்லை என்பதால் அமைப்புக்கள் லெட்டர் பேடை வீணாக்க மாட்டார்கள் என்பது தொண்டர்களுக்கு தெரியும் என்றேன்.
ஒரு அமைப்பில், ஆப்கானிஸ்தான் பிறையை என்ன செய்யலாம் என தொண்டர்கள் கேட்டனர்.
மூச்! நமது தலைவர் பாடுபட்டு இரண்டம் தேதி விடுமூறை வாங்கியிருக்கிற போது ஆப்கானிஸ்தானை எல்லாம் பற்றி பேசக் கூடாது. அது இன்னும் ஐநாவில் இடம் பெறவில்லை என்றார்களாம்.
அப்பாவி தொண்டர்களை நினைத்தால் தான் கவலையாக இருக்கிறது.
ஃபித்ரா காசை வேண்டுமானால் உங்கள் அமைப்புகளுக்கு கொடுத்து விடுங்கள்! நோன்பையும் பெருநாளையும் இப்படி வேடிக்கையாக்கிவிடாதீர்கள்.
தபீஹுல்லா முஜாஹிதிடம் 5g வசதி இல்லை. அதனால் அவர் அறிவித்தது தாமதாகத்தான் கிடைத்த்து என்று ஒரு சிலர் கூறினார்களாம்.
அப்படியானால் இப்போது நோன்பை விட்டு விட வேண்டும் அல்லவா என ஒரு தொண்டர் காலையில் அப்பாவித்தனமாக கேட்டிருக்கிறார்.
பாய் அதெல்லாம் லயீபான அறீவிப்புகள் பாய்! என்று பதில் கொடுக்கப் பட்டிருக்கிறது.
நான் கலீஜ் டைம்ஸின் பிரதியை இத்துடன் இணைத்திருக்கிறேன்.
கருத்துகள்
கருத்துரையிடுக