jakath
ஜகாதின் சட்டங்களில் சில...
ஜகாத் யார் மீது கடமை
ஜகாத் கடமையாகும் நபரிடம் இருக்க வேண்டிய தன்மைகள்.
1) الاسلام :முஸ்லிமாக இருக்க வேண்டும்
2) الحرية :சுதந்திரமானவராக இருக்க வேண்டும்(தற்காலத்தில் எல்லோரும் சுதந்திரமானவர்களே)
3) العاقل :அறிவுள்ளவராக இருத்தல் எனவே பைத்தியம், புத்தி சுவாதீனம் இல்லாதவர்கள் மீது ஜகாத் கடமையில்லை.
4)البالغ :பருவமடைந்தவராக இருத்தல்.
5)ملك النصاب :கடமையாகும் அளவுக்கு செல்வமும் வைத்திருக்க வேண்டும் அச்செல்வம் சுய தேவைகள்,கடன் போக மீதமுள்ளதாக இருப்பதோடு அதன் மீது வருடமும் பூர்த்தியாகி இருக்க வேண்டும்.(நூல்;துர்ருல் முக்தார் மஅரத்-2/263)
ஜகாத் கடமையாகும் பொருட்கள்
மூன்று விதமான பொருட்களின் மீது ஜகாத் கடமையாகும்.
1)தங்கம்,வெள்ளி அல்லது பணம்.
2)வியாபாரப் பொருட்கள்.
3)வளர்ப்புப் பிராணிகளான ஆடு,மாடு,ஒட்டகம்.
இப்பொருட்கள் எவ்வளவு இருந்தால் கடமையாகும்?
தங்கம்:87 கிராம் 480 மில்லி கிராம்(சுமார் 11 சவரனுக்குச் சமம்.)
வெள்ளி:612 கிராம் 360 மில்லி கிராம்
பணம்: வங்கியில் சேமித்து வைத்துள்ள பணம் 612 கிராம் 360 மி.கிராம் வெள்ளியின் விலைக்கு சமமாகவோ அல்லது அதிகமாகவோ இருந்தால் அதன் மீது ஜகாத் கடமையாகும்.
கம்பெனியில்,கடையில் உள்ள வியாபாரப் பொருட்கள் 612 கிராம் 360 மி.கிராம் வெள்ளியின் விலை அளவுக்கு இருந்தால் அதன் மீது ஜகாத் கடமையாகும்.
இந்த வியாபாரப் பொருட்கள் நிஸாபின் அளவை விட குறைவாக இருந்தால் ஜகாத் கடமையாகாது.
ஜகாத் நிஸாபில் எவ்வளவு தரவேண்டும்......
தங்கம் GOLD
தங்கத்திலிருந்து வழங்க வேண்டிய ஜகாத்து 2.5 சதவீதம் ஆகும். எனவே ஜகாத்து கடமையான குறைந்தபட்ச அளவாகிய 87 கிராம் தங்கத்தை வைத்திருப்பவர்கள், அதிலிருந்து 2 கிராம் 125 மி. கிராம் தங்கத்தை ஜக்காத்தாக வழங்க வேண்டும்.
இந்தியாவில் சென்னை 1304.2022நிலவரப்படி (தங்கம் விலை பட்டியல்: 24 கேரட்1 கிராம் 4,463 - - 8 கிராம் 35,424
ஜகாத் கடமை 87 கிராம்
87※4463=388281
87 கிராம் விலை 388281ரூபாய் வைத்திருப்போர் 2.5% ஜகாத் கொடுக்க வேண்டும்.
388281※2.5÷100=7766/- ஜகாத் வழங்கவேண்டும்.
வெள்ளி SILVER
வெள்ளியிலிருந்து வழங்கவேண்டிய ஜகாத்தும் 2.5 சதவீதம் ஆகும். எனவே, ஜகாத்து கடமையான குறைந்த பட்ச அளவாகிய 612 கிராம் வெள்ளியை வைத்திருப்பவர்கள் 15 கிராம் வெள்ளியை ஜக்காத்தாக கொடுக்க வேண்டும்
வெள்ளி சுமார் 612 கிராம்கள் ஆகும். இதில் 2.5 சதவீதம் – 15 கிராம் வெள்ளியை ஜகாத்தாகக் கொடுக்க வேண்டும். அல்லது அன்றைய சந்தை நிலவரப்படி வெள்ளியின் விலையை மதிப்பிட்டு 15 கிராம் எடையின் வெள்ளிக்கான ரூபாயை ஜகாத்தாகக் கொடுக்கலாம்.
இந்தியாவில் சென்னை 13 04.2022நிலவரப்படி வெள்ளி விலை பட்டியல்:
1 கிராம் 72.70
1 கிலோ 72,700வெள்ளியில் ஜகாத் கடமை=612 கிராம் வைத்து இருந்தால்
2.5% ஜகாத் வழங்கவேண்டும்1 கிராம் வெள்ளி விலை 72.70ரூ
ஜகாத் கடமையாகாத பொருட்கள்.
அதிக விலை உள்ளதாக இருந்தாலும் ஜகாத் கடமையாகாத பொருட்கள்.
1)குடியிருக்கும் வீடு
2)வாடகைக்கு விட்டிருக்கும் வீடு எத்தனையிருந்தாலும் ஜகாத் கடமை இல்லை(ஆனால் வாடகை பெறும் தொகை நிஸாப் அளவு இருந்தால் அந்த பொருளுக்கு ஜகாத் உண்டு)
3)தேவைக்காக வாங்கப்பட்ட காலி நிலங்கள்(ஆனால் ரியல் எஸ்டேட் போன்ற வியாபார நோக்கங்களுக்கு வாங்கிய நிலங்களுக்கு ஒவ்வொரு வருடமும் அதன் மார்கெட் விலைக்கேற்ப ஜகாத் கடமையாகும்)
4)உபயோகப்படுத்தும் துணிமணி போன்றவைகள்.
5)வீட்டு உபயோக பொருட்கள் ஃபிரிஜ்,வாஷிங்மிஷின்,கம்ப்யூட்டர்,மொபைல்ஃபோன் போன்றவை.
6)வாகனங்கள்,மோட்டர் சைக்கிள் போன்றவை.
7)வீட்டில் வைத்திருக்கும் உணவுக்கு தேவையான பொருட்கள்.
8)தொழிற்சாலைகளில் உபயோகமாகும் இயந்திரங்கள் எவ்வளவு விலையுயர்ந்ததாக இருந்தாலும் ஜகாத் கடமையில்லை.
9)தங்கம்,வெள்ளி இரண்டின் மீது தான் ஜகாத் கடமை எனவே முத்து,பவளம்,வைடூரியம்,வைரம் போன்றவைகள் வியாபார நோக்கமின்றி உபயோகத்திற்காக வாங்கியிருந்தால் அதிக விலைமதிப்புள்ளதாக இருந்தாலும் ஜகாத் கடமையாகாது.
ஜகாத் பெற தகுதியானவர்கள்
எட்டு பிரிவினரை குர்ஆன் வகைப்படுத்துகிறது.
اِنَّمَا الصَّدَقٰتُ لِلْفُقَرَآءِ وَالْمَسٰكِيْنِ وَالْعٰمِلِيْنَ عَلَيْهَا وَالْمُؤَلَّـفَةِ قُلُوْبُهُمْ وَفِى الرِّقَابِ وَالْغٰرِمِيْنَ وَفِىْ سَبِيْلِ اللّٰهِ وَابْنِ السَّبِيْلِ فَرِيْضَةً مِّنَ اللّٰهِ وَاللّٰهُ عَلِيْمٌ حَكِيْمٌ
ஜகாத் எனும் தானம்....
1)தரித்திரர்களுக்கும், (பரம ஏழை)
2)ஏழைகளுக்கும்,(ஜகாத் நிஸாப் அளவு பொருளாதாரம் இல்லாதவர்கள்)
3)தானத்தை வசூல் செய்யும் ஊழியர்களுக்கும்,(இஸ்லாமிய ஆட்சியில் ஜகாத்,சதகா போன்றவற்றை மக்களிடம் ரூபாய் வசூல் செய்து பைதுல்மாலில் சேர்ப்பவர்கள்.
(தற்காலத்தில் மதரஸா,மஸ்ஜிதுகளுக்கு சந்தா வசூலிப்பவர்கள் இதில் கட்டுப்படமாட்டார்கள்.
எனவே அவர்களுக்கு தனியாக சம்பளம் கொடுக்க வேண்டும்)
4)இஸ்லாத்தின் பால் அவர்கள் உள்ளங்கள் ஈர்க்கப்படுவதற்காகவும், (மாற்று மத சகோதரர்களுக்கு ஜகாத் கொடுப்பது. ஆரம்ப காலத்தில் இதற்கு அனுமதி இருந்தது.பிற்காலத்தில் இது தடைசெய்யப்பட்டு விட்டது.இப்போது எந்த முஸ்லிம் அல்லாதவருக்கும்
ஜகாத் கொடுக்க அனுமதி இல்லை.)
5)அடிமைகளை விடுதலை செய்வதற்காகவும்,(தற்காலத்தில் அடிமைகள் இல்லாததால் இது செயல்பாட்டில் இல்லை)
6)கடன் பட்டிருப்பவர்களுக்கும், (ஏழ்மையின் காரணமாக கடனை அடைக்க முடியாமல் சிரமப்படும் கடனாளிகளுக்கு உதவி செய்வது)
7)அல்லாஹ்வின் பாதையில் (போர் புரிவோருக்கும்), (ஆயுதங்களை வாங்க வசதியில்லாத போராளிகளுக்கு ஜகாத் கொடுப்பது அல்லது குர்ஆன்,ஹதீஸை கற்பதில் மூழ்கியிருக்கும் மாணவர்களுக்கு கொடுப்பது)
8)வழிப்
போக்கர்களுக்கும் . (பயணத்தில் தேவையான பணமின்றி தவிப்பவர்.தனது ஊரில் பெரிய செல்வந்தராக இருந்தாலும் பயணத்தில் இவர் ஜகாத் பெற தகுதியானவராகி விடுகிறார்)(அல்குர்ஆன் : 9:60 -தஃப்ஸீர் மஆரிஃபுல் குர்ஆன் 4:392)
உறவினர்களில் யாருக்கு ஜகாத் கொடுக்கலாம்?யாருக்கு கொடுக்கக் கூடாது?
இரண்டுவகையான உறவினர்களுக்கு ஜகாத் கொடுக்க அனுமதி இல்லை.
1)பிறப்போடு தொடர்புடையவர்கள்.
اصول தந்தை,தாய்,தாதா,தாதி,நண்ணா நண்ணிமா, மேலே வரை........
فروعமகன்,மகள்,பேரன்,பேத்தி,கடைசி வரை.....
2)தாம்பத்ய தொடர்புடையவர்கள்:
அதாவது கணவன் மனைவி.
இதை தவிர்த்து மற்ற எல்லா உறவினர்களுக்கும் தேவையுடையவர்களாக இருந்தால் ஜகாத் கொடுக்க அனுமதி உள்ளது.
சகோதரன்,சகோதரி,
தந்தையின் சகோதரர்,சகோதரி,
தாயின் சகோதர,சகோதரிகள்,
சகோதரரின் பிள்ளைகள் என்று எல்லா உறவினர்களுக்கும் ஜகாத் கொடுக்கலாம்(ஃபதாவா ஆலம்கீர் 1:190)
இன்னும் சொன்னால் ஜகாத்தை நிறைவேற்றிய நன்மை,உறவினர்களை ஆதரித்த நன்மை என இரட்டிப்பான நன்மைகள் கிடைப்பதால் உறவினர்களுக்கு
ஜகாத் கொடுப்பதே சிறந்தது.(திர்மிதி 1:142)
மாற்றாந்தாய், மருமகள், மருமகனுக்கும் ஜகாத் கொடுக்கலாம்.(ஷாமி 3:293)
கருத்துகள்
கருத்துரையிடுக