#ஜகாத் #jakath
எந்தெந்த பொருளில் ஜகாத் கடமையாகும்?
1 . தங்கம்
2. வெள்ளி
3. காசு , பணம்
4 . வியாபாரப் பொருட்கள்( எந்த பொருட்கள் விற்கும் நிய்யத்தில் வாங்கப்பட்டதோ அதுவாகும்.)
5. பூமியின் விளைச்சல்
6 . வளர்க்கக் கூடிய பிராணிகள் .
ஹஜ்ரத் அப்துல் ஹபிஸ்-பாகவி
இமாம் புகாரி மஸ்ஜித் கணேசபுரம் திருச்சி
7806960585
[12/4, 11:50 PM] +91 99768 37783: ஜகாத் கடமையாவதற்குரிய நிபந்தனைகள்:
1. முஸ்லிமாக இருப்பது
2 . சுதந்திரமானவராக இருப்பது.
3 . அறிவுடையவராக இருப்பது
4 . பருவமடைந்தவராக இருப்பது.
5 . ஜகாத் கடமையாகும் அளவு பொருளுக்கு உரிமையாளராக இருப்பது.
6. .ஜகாத்துக்குத் தகுதியானப் பொருள், அடிப்படை தேவைகள் மற்றும் கடனை விட்டும் நீங்கியிருப்பது.
7 . பொருளின் ஜகாத்துடைய அளவு, பிறை கணக்கின் படி, ஒரு வருடம் தன்னிடத்தில் இருப்பது.
( நூல்: ஷாமி: 6/452-455,கிதாபுஸ் ஜகாத்.)
அடிப்படை தேவைகள்: தங்கி இருக்கும் வீடு , அணியக் கூடிய ஆடைகள் , வீட்டுச் சாமான்கள் , பயன்படுத்தும் வாகனம். இவை மனிதனின் அவசியத் தேவைகளில் உள்ளதாகும்.
ஹஜ்ரத் அப்துல் ஹபிஸ்-பாகவி
இமாம் புகாரி மஸ்ஜித் கணேசபுரம் திருச்சி
7806960585
[12/4, 11:50 PM] +91 99768 37783: ஜகாத்துடைய அளவு:
எந்த பொருளில் ஜகாத் கடமையோ, அவற்றுக்கு ஷரீஅத் ஒவ்வொரு விதமான அளவை நிர்ணயம் செய்துள்ளது. பொருளுடைய இந்தக் குறிப்பிட்ட அளவுக்கு 'நிஸாப் ' என்று கூறப்படும். யாரிடத்தில் எப்பொழுது பொருட்கள் நிஸாபுடைய அளவை அடைந்து விடுமோ , அவரின் மீது ஜகாத் ஃபர்ழாகும். அப்படிப்பட்ட பெண்ணுக்கு ' ஸாஹிபே நிஸாப்'( ஜகாத் கடமையானவர் ) என்று கூறப்படும்.
1 . தங்கத்தின் அளவு: 87 கிராம் 480 மில்லி கிராம்.
2 . வெள்ளியின் அளவு: 612 கிராம் 360 மில்லி கிராம்
( நூல்: ஷாமி 7/68, ஹஸனுல் ஃபதவா: 4/254.)
3 . காசு பணத்தின் அளவு: தங்கம், வெள்ளியில் ஏதாவதொன்றின் நிஸாபுடைய அளவுக்கு பணம் இருப்பது.
( நூல்: ஷாமி 7/81 பாபுஸ் ஜகாத்.)
4 . வியாபார பொருட்களின் அளவு: வியாபார பொருள் தங்கம் , வெள்ளியில் ஏதாவதொன்றின் நிஸாபுடைய அளவுக்கு சமமாக இருப்பது.
( நூல் : ஷாமி 7/75, பாபுஸ் ஜகாத்.)
எச்சரிக்கை: வெள்ளியின் மதிப்பு, இன்றைய காலத்தில் தங்கத்தின் மதிப்பை விட மிகக் குறைவாக இருக்கிறது, எனவே, வெள்ளியின் மதிப்பைப் பார்த்தால் மிக சீக்கிரம் ஜகாத் கடமையாகிவிடும். எனவே , குறைவான மதிப்பையே பார்க்கப்பட வேண்டும்.
ஜகாத் கொடுப்பதன் அளவு: தங்கம், வெள்ளி, காசு பணம், வியாபார பொருட்களின் முழு பொருட்களிலும் 40 ல் ஒரு பங்கு அதாவது 2 ½ சதவீதம் கொடுப்பது ஃபர்ழாகும்.
( நூல் ஷாமி: 7/75 , பாபுஸ் ஜகாத்.)
5. பூமியின் விளைச்சல்:
பூமியின் அளவு எவ்வளவு இருந்தாலும், வரும் விளைச்சலில், பத்தில் ஒரு பங்கு கொடுக்க வேண்டும். அதற்கு ' உஷ்ரு' என்று சொல்லப்படும். மேலும் உழைப்பால் தண்ணீர் இரைத்து, விளைய வைக்கும் பூமியினால், விளைச்சலில் இருபதில் ஒரு பங்கு ஜகாத் கொடுக்க வேண்டும்.
6 . கால்நடைகள் : கால்நடைகளில் ஆடு, மாடு, ஒட்டகம், முதலியவற்றில் ஜகாத் கடமையாக , ஷரீஅத் பல்வேறு அளவுகளை நிர்ணயித்துள்ளது. மேலும் அவற்றில் ஜகாத்தின் அளவையும் பல்வேறு விதங்களில் நிர்ணயம் செய்துள்ளது.
ஹஜ்ரத் அப்துல் ஹபிஸ்-பாகவி
இமாம் புகாரி மஸ்ஜித் கணேசபுரம் திருச்சி
7806960585
[12/4, 11:50 PM] +91 99768 37783: ஜகாத்தை நிறைவேற்றுவது எப்பொழுது கடமை?
ஷரீஅத் நிர்ணயித்த அளவு ஜகாத்துடைய நிஸாபுக்கு உரிமையாளராக ஆகி, பிறைக் கணக்குப் படி ஒரு வருடம் பூர்த்தியாகி விட்டால், அந்த நாளே ஜகாத்தை நிறைவேற்றுவது கடமையாகும்.
ஜகாத்தை நிறைவேற்ற , ரமழான் மாதத்தை ஷரீஅத் குறிப்பாக்கவில்லை . எனவே, ஒவ்வொரு மனிதனுக்கும் ஜகாத்துடைய மாதம், தேதி தனித்தனியான தாகும் . பிறைக் கணக்குப்படி எந்த பிறையில் ஒரு மனிதர் நிஸாபை அடைந்தாரோ , அவர் எப்பொழுதும் அந்தத் தேதியிலேயே ஜகாத்தை நிறைவேற்ற முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்.ரமழானை எதிர்ப்பார்த்து ஜகாத்தை தாமதப்படுத்த வேண்டும் என்பதல்ல.
( நூல்: ஷாமி 6/485, 497, கிதாபுஸ் ஜகாத்.)
உதாரணமாக: ஒருவர், 1431ஆம் வருடம் ஸஃபர் பிறை 2 ல் ஜகாத்தின் நிஸாப் உடையவர் ஆனார் . வருடத்தின் இடையில் பொருளில் கூடுதல் , குறைவு இருந்தது . ஆனால் அடுத்த வருடம் 1432 ஸஃபர் பிறை 2 ல் அவரிடம் ஜகாத் நிஸாப் அல்லது அதை விட அதிகமான பொருள் இருந்தால் , தன்னிடம் உள்ள தங்கள், வெள்ளி , ரொக்க பணம், பேங்கில் உள்ள பணம் வியாபார பிளாட், கடையிலுள்ள பொருட்கள் அனைத்தையும் ஒன்று சேர்த்து கணக்கிட்டு 100 க்கு 2 ½ என்ற கணக்கில் ஜகாத் கொடுப்பது ஃபர்ழாகும்.
( நூல் : ஷாமி 7/40,46, பாபுஸ் ஜகாத்.)
ஹஜ்ரத் அப்துல் ஹபிஸ்-பாகவி
இமாம் புகாரி மஸ்ஜித் கணேசபுரம் திருச்சி
7806960585
[12/4, 11:50 PM] +91 99768 37783: ஜகாதின் பலதரப்பட்ட சட்டங்கள்:
1 . ஒரு பெண்ணிடம் தங்கம், வெள்ளி இரண்டும் இருந்து, அதில் ஒவ்வொன்றும் தனித்தனியாக நிஸாபை அடையாவிட்டால், இரண்டையும் சேர்த்து விலை நிர்ணயம் செய்ய வேண்டும். இரண்டின் விலையும் சேர்த்து தங்கம் வெள்ளி இரண்டில் ஒன்றின் நிஸாபை அடைந்து விட்டால், ஜகாத் ஃபர்ழாகும்.
(நூல்: ஷாமி 7/89,பாபுஸ் ஜகாத்.)
2 . ஒரு பெண்ணிடம் நிஸாபை அடையாத அளவு தங்கம் வெள்ளி இருக்கிறது. மேலும் சிறிது பணம் இருக்கிறது.இவை அனைத்தையும் சேர்த்தால், நிஸாபின் அளவு ஆகிவிடுமென்றால், அவள் மீது ஜகாத் வாஜிபாகிவிடும்.
(ஃபதவா ஷாமி 7/89, பாபுஸ் ஜகாத்.)
3 . ஜகாத்தை நிறைவேற்றும் போது, அல்லது ஜகாத்தைப் பிரித்து வைக்கும் போது ' ஜகாத்தை பிரித்து வைக்கிறேன்' என்று நிய்யத் செய்வது அவசியமாகும். நிய்யத் அற்ற ஜகாத் நிறைவேறாது. ஆனால், ' வாங்குவரிடம் ' ஜகாத் ' என்று கூறிக் கொடுக்க வேண்டிய அவசியம் இல்லை.' மாறாக அன்பளிப்பு என்று சொல்லி கொடுத்தாலும் கூடிவிடும்.
( நூல்: ஷாமி 76/489, கிதாபுஸ் ஜகாத்.)
4 . ஜகாத்தில் தங்கம், வெள்ளி, வியாபார பொருட்களின் பணத்திலிருந்து ஆடை, தானியம் அல்லது மற்ற பொருட்களையும் வாங்கிக் கொடுக்கலாம்.
( நூல்: ஃபதவா தாருல் உலூம்: 6/215.)
5 . இடம், கடை, ஃபேக்டரி ( தொழிற்சாலை) , பாத்திரம், ஆடைகள், கிதாப்கள், பர்னிச்சர், தையல் மிஷின், வண்டி, வாடகைக்குக் கொடுக்கப் படக்கூடிய பொருட்கள், கருவிகள், பொருட்களை உற்பத்தி செய்யும் இயந்திரங்கள், எவ்வளவுதான் விலை அதிகமாக இருந்தாலும் அவற்றுக்கு ஜகாத் கடமை இல்லை. ஆனால், அவற்றை வியாபார நோக்கத்தில் வாங்கினால், ஜகாத் கடமை ஆகும்.
( நூல்: ஷாமி 6/471, கிதாபுஸ் ஜகாத்.)
6 . தங்கம், வெள்ளியால் செய்யப்பட்ட அனைத்துப் பொருட்களுக்கும் ஜகாத் கடமையாகும். உதாரணமாக: தங்கம் வெள்ளி நகைகள், பாத்திரம், நாணயம், பதக்கம் மற்றும் இவை போன்றவை.
( நூல்: ஷாமி 7/76, பாபுஸ் ஜகாத்.)
7 . வியாபார நோக்கத்தில் எது வாங்கினாலும் ' ஜகாத்' கடமையாகும். அது நிலமாக இருந்தாலும் சரி. வேறு பொருட்களாக இருந்தாலும் சரி. எனவே, ஜகாத் கணக்கிடும் போது கடையில் விற்க வைத்திருக்கும் அனைத்தையும் கணக்கிட்டு ஜகாத் கொடுப்பது ஃபர்ழாகும்.
( நூல்: ஃபதவுஸ் ஸனாயா : 2/2 , கிதாபுஸ் ஜகாத்.)
ஹஜ்ரத் அப்துல் ஹபிஸ்-பாகவி
இமாம் புகாரி மஸ்ஜித் கணேசபுரம் திருச்சி
7806960585
[12/4, 11:50 PM] +91 99768 37783: ஜகாத்தின் சட்ட திட்டங்கள்:
1 . ஒருவருக்கு ஜகாத் கடமையான பிறை , தேதி தெரியாவிட்டால், சற்று சிந்தித்து, எந்த தேதி சிந்தனையில் மிகைக்கிறதோ , அந்தத் தேதியை உறுதிப்படுத்தி கொள்ள வேண்டும். எந்த நாளும் சிந்தனையில் மிகைக்கவில்லை என்றால் , ஏதாவது ஒரு பிறையைக் குறிப்பிட்டு கொள்ள வேண்டும்.
( நூல் : ஹஸனுல் ஃபதவா: 4/255.)
2 . ஜகாத்தின் நிஸாபை அடைந்து ஒரு வருடம் நிறைவடைவதற்கு முன்பே ஒருவர் ஜகாத் கொடுக்க நாடினால் கொடுக்கலாம்.
(நூல் : ஷாமி: 7/59,பாபுஸ் ஜகாத்.)
3 . வருடத்தின் இடையில் செல்வம் அதிகமானால் , அதற்கு வருடம் பூர்த்தியாக வேண்டும் என்று நிபந்தனை இல்லை. வருடம் பூர்த்தியாவதற்கு ஒரு நாள் முன்பு வரை எந்தப் பொருள் வந்தாலும், அதற்கு ஜகாத் கொடுப்பது ஃபர்ழாகும்.
( நூல் : ஷாமி 7/40,46, பாபுஸ் ஜகாத்.)
4 . ஒருவரிடம், நிஸாப் உடைய அளவு அல்லது அதை விட அதிகமாக பொருள் இருக்கிறது. மேலும் அவருக்குக் கடனும் இருக்கிறது. இப்போது அவர் தனது கடனை அடைத்தது போக , மீதமிருக்கும் பொருள் நிஸாபுடைய அளவிருந்தால் , அவர் மீதமுள்ள பொருளுக்கு ஜகாத் கொடுப்பது கடமையாகும். கடன் கொடுத்தது போக நிஸாபின் அளவுக்கு பொருள் இல்லை என்றால், அவர் மீது ஜகாத் கடமையாகாது .
( நூல்: ஷாமி 6/456, கிதாபுஸ் ஜகாத்.)
5 . ஜகாத் கடமையானவருக்கு , மற்றவர்கள் கடன் கொடுக்க வேண்டும் அல்லது விற்ற பொருட்களின் பணம் வர வேண்டும் என்றால், மற்ற பொருட்களுடன் சேர்த்து அதற்கும் ஜகாத் கொடுக்க வேண்டும். அல்லது கடனும், வியாபார பொருட்களின் பணமும் வந்த பிறகு, கடந்த வருடத்தின் ஜகாத்தையும் நிறைவேற்ற வேண்டும். அது ' திரும்ப கிடைக்கும் என்ற நம்பிக்கை இல்லாவிட்டால், ஜகாத் கடமையில்லை.
( நூல் : ஷாமி 7/97, பாபுஸ் ஜகாத்.)
ஹஜ்ரத் அப்துல் ஹபிஸ்-பாகவி
இமாம் புகாரி மஸ்ஜித் கணேசபுரம் திருச்சி
7806960585
[12/4, 11:50 PM] +91 99768 37783: யாருக்கு ஜகாத் கொடுக்கக் கூடாது?
1 . யாருக்கு ஜகாத் கடமையோ , அந்த மனிதர் ஷரீஅத்தில் ' பணக்காரர் ' என சொல்லப்படுவார்.
( நூல் : ஷாமி 7/237, பாபுஸ் ஜகாத்.)
2 . ஒரு மனிதருக்கு ஜகாத் கடமையில்லை. ஆனால், தேவைகளை விட அதிகமாக பூமி , வீடு, மற்ற பொருட்கள் , பர்னிச்சர், பாத்திரம் முதலானவை இருந்து, அவற்றின் விலை நிஸாபுடைய அளவுக்கு இருந்தால், அவருக்கு ஜகாத் பொருளை கொடுக்கக் கூடாது.
( நூல் : ஷாமி: 7/238, பாபுஸ் ஜகாத்.)
3 . தாய் , தந்தை, தந்தையின் தாய் / தந்தை, தாயாரின் தாய் / தந்தை போன்றோர். மேலும் அதற்கு மேலுழ்ளோர் வரை.
( நூல் : ஷாமி: 7/230, பாபுஸ் ஜகாத்.)
4 . மகன், மகள் , மகன் வழிப் பேரன் , பேத்தி , மகள் வழிப் பேரன், பேத்தி ( அப்படியே கீழ் வரை )
(நூல் : ஷாமி:7/230,பாபுஸ் ஜகாத்.)
5 . கணவன் மனைவி.
( நூல் : ஷாமி:7/226, பாபுஸ் ஜகாத்.)
6 . முஸ்லிம் அல்லாதவர்
( நூல் : ஷாமி: 7/249 , பாபுஸ் ஜகாத்.)
7 . பருவ வயதை அடையாத செல்வந்தரின் பிள்ளைகள் .
( நூல் : ஷாமி: 7/237,பாபுஸ் ஜகாத்.)
8 . ஸையிது, பனூ ஹாஷிம் குடும்பத்தினர்.( அப்பாஸ், ஹாரீஸ், இன்னும் அபூதாலிப் உடைய பிள்ளைகள்.)
(நூல் : ஷாமி:7/245, பாபுஸ் ஜகாத்.)
சட்டம்: ஜகாத்துடைய பணத்தில் , கிணறு தோண்டி வைப்பது , ரோடு போடுவது, பள்ளிக்கு இடம் வாங்குவது, போன்றவை கூடாது. ஏனென்றால் , ஜகாத்தை , ஜகாத் பெற தகுதியுள்ளவரிடம் கொடுத்து , அவரை அதற்கு உரிமையாளராக ஆக்குவது ஜகாத் கூடுவதற்கு நிபந்தனையாகும் .
( நூல் : ஷாமி: 7/226, பாபுஸ் ஜகாத் .)
சட்டம்: ஜகாத்துடைய நிய்யத்தில் , தம்மிடம் கடன் வாங்கியவரின் கடனை மன்னித்து விடுவதால், ஜகாத் நிறைவேறாது .
( நூல் : ஷாமி: 7/494, கிதாபுஸ் ஜகாத்.)
சட்டம்: ஒரே மனிதருக்கு, அவர் ஸாஹிபே நிஸாப்'ஆகிவிடும் அளவுக்கு ஜகாத் நிதியைக் கொடுப்பது ' மக்ரூஹ் ' ஆகும். ஒரு ஏழையிடம் ஜகாத்தின் நிஸாப் அளவுக்கு பொருள் சேர்ந்துவிட்டால் , அவருக்கு ஜகாத் கொடுப்பது கூடாது.
( நூல் : ஷாமி: 7/256, பாபுஸ் ஜகாத்.)
ஹஜ்ரத் அப்துல் ஹபிஸ்-பாகவி
இமாம் புகாரி மஸ்ஜித் கணேசபுரம் திருச்சி
7806960585
[12/4, 11:50 PM] +91 99768 37783: ஜகாத்தை யாருக்கு கொடுப்பது கூடும்:
1 . ஏழை: யாருக்கு ஜகாத் கடமையாகுமளவிற்கு பொருள் இல்லையோ, மேலும் அவரிடத்தில் தன் தேவையை விட அதிகமாக உள்ள பொருள்கள் நிஸாப் உடைய அளவு இல்லையோ , அவர் ஏழையாவார்.
( நூல் : ஷாமி 7/205, பாபுஸ் ஜகாத்.)
2 . மிஸ்கின் : எந்த மனிதரிடம் , அறவே பொருள் இல்லையோ , அவர் மிஸ்கின் ஆவார்.
( நூல்: ஷாமி 7/208, பாபுஸ் ஜகாத்.)
3 . கடனாளி : மக்களிடம் கடன் பட்டவர் . அவர் கடனை நிறைவேற்றும் போது நிஸாபுடைய அளவுக்கு பொருள் மீதம் இல்லாதவர்.
( நூல்: ஷாமி 7/219, கிதாபுஸ் ஜகாத்.)
4 . முஸாபிர் : ஜகாத் கடமையான ஒருவர், பயணத்தில் இருந்தார். ஆனால் அவரிடம் தற்சமயம் பணமேதுமில்லை . இந்நிலையில் அவர்க்கு தேவை ஏதும் ஏற்பட்டால் , அவருடைய தேவையின் அளவுக்கு ஜகாத் பொருளைக் கொடுக்கலாம்.
( நூல்: ஷாமி 7/223, கிதாபுஸ் ஜகாத்.)
கருத்துகள்
கருத்துரையிடுக