#ரமளான் #பசித்திரு #தனித்திரு விழித்திரு

🪴🌾🌾🎋🎋🎋🪴🪴
புனித ரமலானின்
முத்தான மூன்று
தத்துவங்கள்!
***********************
தொகுப்பு எண்(63)
மெளலவிஹாபிழ்
அல்ஹாஜ்எம்எம்
கமாலுத்தீன்இம்தாதி
பொருளாளர்:
கோவை மாநகர
ஜமாஅத்துல் உலமா
**********************
அஸ்ஸலாமுஅலைக்கும்
அல்லாஹ்வின்
கிருபையால்...
அண்ணல் பெருமானார்
(ஸல்)ஆசியால்
தொடங்குகிறேன்
இறைவனின்
கிருபையால்..
இந்த புனிதமிகு
ரமலான் மாதத்தில்
எல்லாவகையானநல்
வணக்கங்களை
நிறைவேற்றும்
பாக்கியத்தை அல்லாஹ் நம்
அனைவருக்கும்
வழங்குவானாக!

(1) பசித்திரு
""""""""""''''""''''''''"'''''''''
شهر رمضان 
ரமலான் மாதம்
ரமலான் என்ற அரபி
சொல்லுக்கு...
கரித்தல் பொசுக்குதல்
என்பது பொருளாகும்
பாவத்தைகரித்தல்
தீமைசெய்வதை
விட்டும் நீங்கி..
தீமைகளைநண்மை
என்ற அமல்களை
கொண்டுகரிப்பது
கடுமையான...
வெயில்காலத்தில்
இந்த நோன்பு
கடமையாக்கப்பட்ட
தால் ரமலான்மாதம்
என்று அருள்மறை
சான்றுபகர்வதாக
விரிவுரையாளர்கள்
விளக்கம்
தருகிறார்கள்.
ரமலானில் நோன்பு
கடமையாக்கப்பட்டது.
இஸ்லாமிய
ஆரம்பகாலத்தில்
மூன்று நாட்களே
நோன்பு நோற்று
வந்தார்கள்.
மாநபி(ஸல்)அவர்கள்
மதீனாநகர்வருகை
தந்தபோதும்.
மூன்று நாட்களே..
நோன்பு இருந்தார்கள்
அதன்பின் ..
முப்பதுநாளும்..
நோன்புநோற்க்க
கட்டளை பிறந்தது.
صوم ،
என்ற அரபிசொல்லுக்கு
தடுத்தல்என்பதாகும்
தீமைகள் ஏற்படாமல்
தடுப்பது!
மனோஇச்சைகளை
வரம்புமீறிசெல்லாமல்
தடுப்பது!!
அந்நியபெண்களை
ஆசையுடன் பார்ப்பதை
தடுப்பது!!!
மனித உடல் உபாதை
களுக்குமுக்கிய
பங்குவகிப்பது
கட்டுப்பாடற்ற
உணவுமுறைகளே..
யாகும் .அளவான
உணவேஆரோக்கிய
த்தை வழங்கும்.
அதற்குமூலதனம்
பசியாகும் பசியால்
மட்டுமேஅதைஒழுங்கு
படுத்தமுடியும்
வயிற்றுப்பசி
உடல்பசி
உள்ளப்பசி..
பலவகையாக
பிரிக்கிறார்கள்
அறிஞர்பெருமக்கள்
பசியின்கொடுமையை
பாமரன் அறிவான்.
பணக்காரன்
அறியமாட்டான்.
பசிக்கொடுமைகளை
அதைஅனுபவித்தவன்
மூலமே அறியமுடியும்
வயிறு நிறைய உண்டு
புடைப்பவனால்...
அறியமுடியாது.
பாமரனும் 
பணக்காரனும்
பசியின்தன்மையை
உணர்ந்துகொள்வற்கு
ஏதுவாக கடைமையாக
ஆக்கப்பட்டதே...
நோன்பின் உண்மை
நோக்கமாகும்.
இன்றைய உலக
மக்கள்தொகையில்
நான்கில் ஒருபகுதி
பசிக்கொடுமைக்கு
மக்கள்ஆளாவதாக
உலகஉணவு
பாதுகாப்புக்கழகம்
கூறுகிறது.
வறுமையில் வாடுகின்றனர்
ஒரு பிரிவினர்.
கட்டாயபோர்திணிப்பு
காரணத்தால்
பசியில் வாடும் மக்கள்.
அண்டை நாடான..
இலங்கையில்
விலைவாசியால்
விளைந்தபட்டிணி
சம்பவங்களால்
நமது நாட்டிலும்
அந்த அச்சம்
தொற்றிக்கொண்டு
உள்ளது.
தென்தமிழகத்தை
த்தாண்டி...
வடமாநிலங்களிலும்
பசிக்கொடுமைக்கு
ஆளாவோர்நிறைய
இருக்கின்றனர்.
எனவே ஆண்டு
முழுவதும்விதவிதமான
உணவுகளை..
உண்டுமகிழ்கின்ற
நம்மவருக்கு
பசியின்ருசியை
அறிந்துகொள்வதற்
காக வருகைதந்தவை
இந்தநோன்பாகும்.
அதைநமதுநாயகம்
(ஸல்)அவர்கள்
இப்படி கூறுவார்கள்
ஓஇளம்இஸ்லாமிய
சமுதாயமே...
உங்களில் ஒருவர்
திருமணம் முடிக்க
சக்கிபெற்றால்...
அவர்மணமுடித்து
கொள்ளட்டும்
இல்லையெனில்
அவன் நோன்பை
நோற்று கொள்ளவும்
அதுவே...
அவனுக்கு சிறந்தது
என்று கூறுவார்கள்.
ஏழைசஹாபாக்கள்
பலர் வறுமையின்
காரணமாக..
திருமணமுடிக்க
வசதிவாய்ப்புகள்
இன்றி பல மாதங்கள்
நோன்புநோற்றதை
ஹதீஸ்களில்
காணமுடியும்.
எனவே நோன்பின்
உண்மைமாண்பை
உணர்ந்து..
செயல்படுவோமாக!
🌾🌾🌾🌾🌾🌾🌾🌾
(2) விழித்திரு!
******************
உன்னதரமலானின்
சிறப்புத் தன்மைகளில்
இரண்டாவது...
விழித்திரு என்பதாகும்
ரமலான் இரவுகளில்
அதிகம் நின்று
வணங்குவதின்
நோக்கமே...
விழித்திரு என்பதாகும்
இறைவனைஅதிகம்
நினைத்திடநீ...
விழித்திரு.
இஷா தொழுகையை
ஜமாஅத்துடன்
நிறைவேற்றிட..
நீ...விழித்திரு
இருபதுரக அத்
தராவீஹ்தொழுவற்காக
நீ....விழித்திரு
மூன்று ரக அத்
வித்ரைதொழுவதற்காக
நீ.... விழித்திரு
பாவமன்னிப்பு
தொழுகையான
தஸ்பீஹ் நபில்
தொழுவதற்காக..
நீ...விழித்திரு
ஸஹர்நேரதொழுகை
தஹஜ்ஜுத்
தொழுவதற்க்காக
நீ...விழித்திரு
சுன்னத் தானஸஹரை
நிறைவேற்றுவதற்காக
நீ...விழித்திரு
வைகரைதொழுகை
பஜ்ரைநிறைவேற்று
வதற்காக ..
நீ...விழித்திரு
அதன்றிரமலான்
இரவுகளில்
அரட்டை அரங்கம்
நடத்துவது
அவசியமின்றி
ஊர்சுற்றுவது
ஆடைவாங்க
செல்கிறேன்என்ற
போர்வையில்
கடைவீதிகளில்
உலாவருவது
ஹோட்டல்களில்
ஷாப்பிங்மால்களில்
தவம்கிடப்பது
நோக்கமல்ல
அதிகம் உறங்குவது
அடுத்தவனை பற்றி
அவதூறுபரப்புவது
இதுபோன்றசெயல்
களால் நோன்பின்
பலனைகுறைத்துவிடும்
பெருமானார்(ஸல்)
கூறுவார்கள்
صوموا نهارها وقوموا ليا لها 
பகல்பொழுதில்
நோன்புவையுங்கள்
இரவில் நின்று
வணங்குங்கள் என்று
கூறுவார்கள்
அருமைநாயகம்(ஸல்)
இரவு நேரங்களில்
தங்களது பாதங்கள்
மடுத்துபோகும்
அளவிற்கு நின்று
வணங்குவார்கள்
அவர்களிடம்
அன்னை ஆயிஷா ரலி
கேட்ப்பார்கள்
அருமைநாயகமே
தங்களின் பாவங்கள்
அனைத்தும்மன்னிக்க
ப்பட்டதாங்கள்
ஏன்இப்படிநின்று
வணங்குகிறீர்கள்?
ஆயிஷாவே...
அல்லாஹ்விற்கு
நன்றியுள்ள
அடியானாகநான்
ஆகவேண்டாமா?
என்று பதில்
கூறுவார்கள்
எனவே‌...
கடந்த இரண்டு
ஆண்டுகளில்
கொரோனாநமக்கு
கற்றதந்தபடிப்பினை
களை உணர்ந்து
அமல்செய்துவிடுவோம்
என்ற இறும்ப்புடன்
செயல்படாமல்...
கடந்தகாலங்களில்
நம்முடன் பயணித்த
நம்குடும்பத்தார்
நமதுபிரியமான
நண்பர்கள்
உறவினர்கள்
எல்லாம் நம்மை
பிரிந்துசென்று
விட்டனர்.
இன்று அவர்கள்
நம்முடன் இல்லை
அடுத்த வருடம்
அடுத்தமாதம்
அடுத்தநாள்...
நாம்இருப்போம்
என்பதநிச்சியமில்லை
எனவே உணர்ந்து
செயலாற்றுவோம்!
🎋🎋🎋🎋🎋🎋🎋🌴
மெளனவிரதம்
பத்தினி வாழ்வு!
*************************
நோன்புஎன்றவிரதம்
பலவகைப்படும்
பண்டையக்லத்தில்
பலவகைநோன்பை
நோற்றுஇருக்கிறார்கள்
அதில் ஒருவகை
யாரிடமும் பேசாமல்
தனக்குத்தானே...
தடைபோட்டு
தனித்திருப்பது
பேசினால்தானே..
வம்பு வரும்
வாய்மூடினால்
வம்பு வராது என்பது
இதன்கோட்பாடு
அரபியில் ஒருசொல்
உண்டு ..
من سكت سلم ومن سلم نجا 
யார் வாயை..
அடக்கினாரோ..
அவர் ஈடேற்றம்
அடைந்தார்
ஈடேற்றம்பெற்றோர்
வெற்றியடைந்தார்.
ஹஜ்ரத்மர்யம்(அலை)
அவர்களும்
அவர்களின்சிரிய
தந்தைமகன்
யூசுபுல்புகாரியும்
பைதுல்முகத்திஸில்
பணியாற்றி
வந்தார்கள்
பள்ளிவளாகங்களை
சுத்தப்படுத்துவது
போன்ற பணிகளை
செய்துவந்தனர்
இந்நிலையில்
மர்மம்(அலை)
அவர்களுக்கு
எந்த ஆணின்
துணையின்றி
தனது ஆற்றலை
வெளிப்படுத்த
அவர்களின்வயிற்றில்
தன்ரூஹைஊத
அவர்கள்கற்ப்பம்
அடையசெய்தான்
அல்லாஹ்வின்
ஆணைப்படி
ஹஜ்ரத்ஜிப்ரீல்(அலை)
அவர்கள் மர்யம்(அலை)
அவர்களின்மேலாடை
வழியாக ஊதினார்கள்.
அந்தரூஹ்
அவர்களின் வயிற்றின்
வழியாககருவறைக்கு
சென்று அவர்கள்
கருவுற்றார்கள்.
மக்களின் கண்களுக்கு
புலப்படாமல்
இருக்க அல்லாஹ்
அவர்களுக்கு
உத்ரவிட்டான்.
அதன்படி அவர்கள்
எந்தமனிதரிடமும்
பேசாமல்மெளனவிரதம்
இருந்தார்கள்.
மனிதர்களின்பார்வை
யில் அவர்கள் பட்டால்..
அவதூறுபரப்ப
மக்களுக்கு
சொல்லவா வேண்டும்?
எனவே மனிதர்கள்
பார்வையைவிட்டும்
விலகியாரிடமும்
பேசாமல் தனிமையில்
இருந்தார்கள்.
இதை அருள்மறை
இப்படிசாட்சி
சொல்கிறது...
فكلي واشر بي وقري عينا
فا ما ترين من البشر احدا 
فقولي اني نذرت للرحمن صوما 
فلن اكلم اليوم انسيا  
எனவேநீங்கள்
(மக்களை விட்டும்)
தனித்திருந்து
உண்டு பருகி
கண்குளிரச்செய்வீராக
பின்புமணிதரில்
யாரையேனும்
சந்திக்க நேர்ந்தால்
நிச்சயமாக நான்
ரஹ்மானான
இறைவனுக்கு
நோன்புநோற்று
இருக்கிறேன்
ஆதலால்நான்
இன்றையதினம்
யாரிடமும்பேசமாட்டேன்
என்றுகூறவும்.
சூரா அல்மர்யம்.26
மெளனவிரதமும்
ஒருவகை நோன்பு தான்
அதைதான் இறைவன்
இப்படி அவர்களுக்கு
கட்டளையிட்டான்
கருவுற்ற மர்யம்(அலை)
அவர்களுக்கு
நோன்பைகடமையாக்க
வில்லை மாறாக
பேரித்தம்பழத்தை
உண்டும்...
ஓடுகின்ற ஆற்றுநீரை
பருகியும்இருக்கும்படி
பணித்தான்.
இங்கேநோன்பு
என்ற வார்த்தை
மெளனவிரதத்தை
த்தான் குறிக்கிறது
நபிமார்களும்
வலிமார்களும்
பலமாதங்கள்
மெளனவிரதம்
இருந்து இருக்கிறார்கள்
என்று வரலாற்றில்
பார்க்கிறோம்.
நமதுஷரீஅத்தில்
யாரிடமும் பேசாமல்
இருப்பதைமார்க்கம்
அனுமதிப்பதில்லை
ஆனால்...
அவசியத்திற்கு
நேரம் அறிந்து
இடம்அறிந்து
பேசுவதை
வலியுறுத்துகிறது.
சைகைகள் மூலம்
செய்திகளை
சொல்வது இன்றைய
விஞ்சானகாலத்தில்
நிரூபித்துகாட்டி
க்கொண்டுஇருக்கி
றார்கள்.
இன்றைய ஊடகங்களில்..
சைகைகள் மூலம்
செய்திகளை
வாசிக்கின்றபுதிய
விஞ்சானகல்வியை
அறிமுகப்படுத்தி
இருக்கிறார்கள்.
இவ்வகை செயல்களை
அருள்மறை
பலநூற்றாண்டுகளு
க்கு முன்பே...
சொல்லி காட்டியுள்ளது
அதைதான்... மர்யம்(அலை)
அவர்களுக்கு
அல்லாஹ் கட்டளை
இட்டதின்மூலம்
நாம் அறிகிறோம்.
🌴🌴🌴🌴🌴🌴🌴
(3)மூன்றாவது
நோன்பின் மாண்பு...

தனித்திரு!!!
**************
தனித்திருப்பதை
தவவாழ்வாக்கொண்டு
நபிமார்களும்
வலிமார்களும்
இருந்தபின்பு..
மாபெரும் பதவிகளை
அடைந்துஇருந்து
இருக்கிறார்கள்.
நமது நாயகம்(ஸல்)
அவர்கள் ஹிரா மலை
குகையில்நாற்ப்பது
நாட்கள் தனித்திருந்து
கடைசியில்...
ரமலான்பிறை27
லைலதுல்கத்ர்இரவில்
இறைமறையைஇறக்கி
வைத்துஅருளினான்.


ஹஜ்ரத்மூஸா(அலை)
அவர்களுக்கு
அல்லாஹ்40நாள்
நோன்பு
நோற்று தனித்திருந்து
அதன்பின் அல்லாஹ்
அவர்களிடம் பேசியதை
அருள்மறைபேசுகிறது

தள்ளாத வயதிலும்
தனக்கு குழந்தை
செல்வம் வேண்டும்
என்றுஇறைவனிடம்
ஹஜ்ரத்ஜகரிய்யா
(அலை)அவர்கள்
வேண்ட .
அல்லாஹ்அவர்களை
பார்த்துஇப்படி
கூறுகிறான்.
قال رب اجعلي أية قال ايتك
الا تكلم الناس ثلاثة ايام
الا رمزا واذكر ربك كثيرا 
وسبح بالعشي والابكار 
இறைவா(எனக்குகுழந்
தை செல்வம்கிடைத்தை
அறிய)ஒரு சான்றை
எனக்குலழங்குவாயாக
அதற்கு. நீங்கள்
மூன்று நாட்கள்
மக்களிடம் பேசாமல்
சைகைகளைத்தவிர)
இருக்கவேண்டும்
அதுவே உமக்கு
சான்றாகும்
அந்தகாலங்களில்
நீங்கள் அதிகம்
காலையிலும்
இரவிலும் இறைவனை
நினைவுகூறுவீராக!
என்றுகூறினான்.
சூரா ஆல இம்ரான்41.
அதன்படி ஹஜ்ரத்
ஜகரிய்யா(அலை)
தனித்துதவமிருந்து
இறைவனின் அருளை
பெற்றார்கள்
அவர்களுக்கு..
யஹ்யா என்ற
ஆண்மகனை
அல்லாஹ்வழங்கினான்
இதுபோல் நபிமார்கள்
நல்வாழ்வை
மேற்க்கொண்டன்ர்
ஞானிகளின்நாயகம்
முஹ்யித்தீன்
அப்துல் காதிர் ஜீலானி
(ரஹ்)அவர்கள்
பத்து ஆண்டுகள்
கடும் தவத்தை
மேற்க்கொண்டு
கடைசியில் மேலான
பதவியை இறைவனிடம்
பெற்றார்கள்
இந்த அடிப்படையில்
நம்மவர்களுக்கு
ரமலான் கடைசி
பத்தில் இஃதிகாப்
எனும் புனித அமலை
பெருமானார்(ஸல்)
அவர்கள்நமக்கு
கற்று தந்துள்ளதை
நாம் நடைமுறை
படுத்திஇந்த அமலை
செய்திடமுயர்ச்சி
எடுக்கவேண்டும்.
பள்ளியில்
பத்துநாள்
அல்லது மூன்றுநாள்
அதுவும் முடியாவிட்டால்
ஒருநாள்
அதுவும்முடியாவி
ட்டால்...
ஒருமணி நேரமாவது
பள்ளியில்நிய்யதுடன்
இஃதிகாப்எனும்
தனித்திருப்பது
ஒருஊரில்ஒருவரேனும்
இஃதிகாப்இருப்பது
சுன்னத் தே...
முஅகதாவாகும்
எனவே இதுபோன்ற
நல்அமல்களை
இந்தரமலானில்
பயன்படுத்தி
உண்மையான
ரமலானை அடைகின்ற
பாக்கியத்தை
நம்அனைவருக்கும்
அல்லாஹ்
வழங்கிடுவானாக!
ஆமீன்யாரப்பல்
ஆலமீன் வஸ்ஸலாம்.
🎍🎍🎍🎍🎍🎍🎍🎍

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அரபி மதரஸாக்கள்

மவ்லித் ஷரீஃப் ஓதுவோம் வாருங்கள்

கல்வியா?செல்வமா?