லைலதுல் கத்ர்
*லைலத்துல் கத்ர் என்றைக்கு???*
1.இறுதி பத்தில் ஒற்றைப்பட இரவுகள்-என்ற ஹதீதின்படி -21,23,25,27,
29(முஹத்திதீன்கள்).
2.ரமழான் 29நாட்களாயின்-20,22,24,26,28(இப்னு ஹஜர் இமாம் போன்றவர்கள்).
3.முந்திய வருடத்தில் பிந்திய பத்தின் ஒற்றைப்பட இரவில் வந்தால், இந்த வருடம் மற்றொரு ஒற்றைப்பட இரவில் வரும்(நவவீ இமாம்).
4.ஒன்பதாவது,ஏழாவது,ஐந்தாவது இரவுகளில் தேடிக்கொள்ளுங்கள் -என்ற ஹதீஸின்படி-29,27,25.
5.இந்த ஹதீதில்-இறுதிபத்தின் துவக்கத்திலிருந்து- என்ற குறிப்பு இல்லாததால்,(இறுதியிலிருந்து கணக்கிட்டால்)-21,23,25.
6.அந்த மாதம் 29நாட்களாயின்-22,24,26.
7.பிந்திய ஏழு இரவுகளில் தேடிக்கொள்ளுங்கள்- என்ற ஹதீஸின்படி -23,24,25,26,27,28,29/30.
8.ரமழான் முதற்பிறை:
திங்கள்-21
சனி-23
வியாழன்-25
செவ்வாய்/வெள்ளி-27
புதன்/ஞாயிறு-29( *கஸ்ஸாலி இமாம்,அபுல்ஹஸன் ஜர்ஜானி இமாம்*).
9.ரமழான் முதற்பிறை:
ஞாயிறு-29
திங்கள்-21
செவ்வாய்-27
புதன்-29
வியாழன்-25
வெள்ளி-27
சனி-29( *ஷாதலி ஆண்டகை*).
10.ரமழான் முதற்பிறை:
ஞாயிறு-27
திங்கள்-19
செவ்வாய்-25
புதன்-17
வியாழன்-23
வெள்ளி-29
சனி-21( *ஷெய்குல் அக்பர் ஆண்டகை*).
11.ரமழான் முதற்பிறை:
வெள்ளி-17
புதன்-19
திங்கள்-21
வியாழன்-25
செவ்வாய்-27
ஞாயிறு-29
சனி-30( நூறு நூறாயிரம் கோடி ஆண்டுகள் வாழ்ந்த *தென்னாட்டு ஷெய்குல் அக்பர் பீரப்பா*).
12.அன்றைய22ல் தேடும்படி ,பெருமானாரவர்கள் பணித்தார்கள்.
13.இன்றைய 23ல் கத்ரை அடைந்து கொள்ளுங்கள்,என்றும் கூறியுள்ளார்கள்.ஹழ்ரத் ஐயூப் பின் காலித் அவர்களின் கணிப்பும்-23.
14.கத்ர் ஸூராவில் 9எழுத்துக்களைக் கொண்ட- லைலத்துல்கத்ர் எனும் சொல்,மும்முறை இடம்பெறுவதால் 9×3=27( *இப்னு அப்பாஸ் நாயகம்*).
15.முப்பது சொற்களைக்கொண்ட கத்ர் ஸூராவில்,ஹிய @ அது-என்ற சொல்-27ஆவதாகவே வருகிறது( *இமாமுல் அஃளம்*).
16.அண்ணல் நபியவர்கள் சந்திரனை வர்ணித்ததை குறிப்பாக வைத்து,இருதடவை 27என,ஸஹாபாக்கள் கூறியபோதும் , நபியவர்கள் மறுதலிக்கவில்லை.
17.ஹிஜ்ரி ஆண்டின் துவக்கத்தை வைத்து கணக்கிட்டால்-குர்ஆன் முதலில் இறங்கிய இரவு-ரமலான்27 திங்கள்கிழமை இரவாகவே அமைகிறது.
18.உபை இப்னு கஃப்,அப்தத் இப்னு அபீலுபாபா, *அபூயஜீதுல் பிஸ்தாமி*...போன்ற மேதைகள், 27ல் பெற்றுக்கொண்டதாக கூறியுள்ளார்கள்.
19.ரமழானின் முந்திய பத்திலும் ,பிந்திய பத்திலும் -என்றும் ஹதீஸ் வந்துள்ளது.
20.ஆண்டு முழுவதும் சுற்றிவருகிறது( *இப்னு மஸ்வூத் நாயகம்*).
21.ஷஃபான்15,19 ரமழான் 13,18,இறுதி ஒற்றை இரவுகளிலும் கண்டிருக்கிறேன் ( *ஷெய்குல் அக்பர் நாயகம்*).
22.அல்குர்ஆன்44:3ன்படி,ஷஃபான்-15.
23.ஜமாதுல் அவ்வல்3,21,2,23,27,
ரமழான்14,17, ஜும்ஆ ,
ர. அவ்வல்9,12-என்றும் கிரந்தங்களில் பதியப்பட்டுள்ளது.
24.அல்குர்ஆன் 97:4ன்படி-ரமழான்17 எனவும் குறிப்புகள் உள்ளன.
25.தாம் மறைந்த ரமழான் 21-ல் ,இன்றைய இரவு புனிதமானது,எனக்கூறி,புதல்வர்களை இபாதத் செய்ய பணித்தார்கள், *அலியார் தங்கள்*.
26 .கல்வத் நாயகம் உட்பட- ஷாபிஈ இமாமும்21ஐயே அபிப்பிராயப்படுகிறார்கள்.
27.எனக்கு காட்டப்பட்ட கத்ர் இரவில் -சேற்றில் ஸஜ்தா செய்வதாக உணர்ந்தேன்,என்ற ஹதீஸின்படி,அன்று *மழை பெய்த இரவு-21* ,என அபூஸயீதுல் குத்ரி ரஹ்மதுல்லாஹ் அறிவிக்கிறார்கள்.
28.லைலத்துல்கத்ர் இரண்டு இரவாகும். ஒன்று ரமலானிலும்,மற்றது- இதர11மாதங்களிலும் சுற்றி வருகிறது(இமாமுல் அஃளம், *ஷாஹ் வலியுல்லாஹ்*).
29.மாலிக் & ஹன்பல் இமாம்களின் குறிப்பின்படி,இறுதி பத்தின் ஒற்றைப்பட இரவுகளே.
30.ரமழான் கடைசி இரவில்,எனவும் ஹதீஸ் வந்துள்ளது(துர்ருல் மன்தூர்).
31.ரஜப்1,ஷஃபான்15ஐ வைத்து ஒழுங்கு பிடித்தால்,ரமழான் இறுதி இரவு, என ஸூஃபியாக்கள் யூகிக்கிறார்கள்(முதல், இடை,கடை).இதற்குத் தோதாற்போல் பல ஹதீதுகள் வந்துள்ளன.
32.குர்ஆனின் சாயலாக-30சொற்களையும் (ஐஉஸ்வு) & 114 எழுத்துகளையும்(ஸூரா) கொண்ட-கத்ர் ஸூராவில் -கத்ர் என்னும் வார்த்தை இடம்பெற்ற இலக்கத்தை கூட்டினாலும்(5+10+12) 27 வருகிறது.
33.ஹக்குடன் ஹக்காக பிணைந்த *பீரப்பா* போன்ற தவராஜ சிங்கங்களின் கூற்றுபடி ,இவ்வாண்டு முதற்பிறை ஞாயிறு துவங்கியதால்- லைலதுல் கத்ர் (30.4 2022 சனி) *இன்று மாலை* அமையப் பெறுகிறது.
கருத்துகள்
கருத்துரையிடுக